முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / ஐஏஎஸ் அதிகாரி பகிர்ந்த புதிர்..உங்களால் பதில் சொல்ல முடியுமா?

ஐஏஎஸ் அதிகாரி பகிர்ந்த புதிர்..உங்களால் பதில் சொல்ல முடியுமா?

ஐஏஎஸ் அதிகாரி பகிர்ந்த புதிர்

ஐஏஎஸ் அதிகாரி பகிர்ந்த புதிர்

ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிர் ஒன்றைப் பகிர்ந்து அதற்கு விடைகொடுக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் சரண், ட்விட்டர் பக்கத்தில் ஒரு புதிரைப் பகிர்ந்து அதற்குப் பதிலைக் கண்டுபிடிக்கக் கூறியுள்ளார். ஒரு பூட்டை பகிர்ந்த அவர், அதனின் மூன்று இலக்க password-டை கொடுக்கப்பட்டுள்ள ஹிண்ட் கொண்டு கண்டுபிடிக்கக் கூறியுள்ளார். இந்த புதிருக்கு நெட்டிசன்கள் பலவிதமாக விடைகளை கண்டுபிடிக்க முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

வழக்கமான புதிர்கள் என்றாலே சமூக வலைத்தளத்தில் அதற்கு என்று ஒரு ரசிக்கர் கூட்டம் இருக்கும். பொதுவாக விலங்குகள் படங்களை கண்டுபிடிப்பது, ஆப்டிகல் இல்யூசன் போன்றவை பிரபலமாக இருக்கிறது. இந்த புதிர் விளையாட்டுகளால் நமது மூளைக்கு வேலைக்கொடுக்க நேரிடுகிறது.

இதனால் மூளையின் செயல்பாடுகள் அதிகரிக்கிறது. மருத்துவ ரீதியாக மூளை செயல்பாட்டிற்கும், சிந்தனைத் திறனை வளர்க்கவும் ஆப்டிகல் இல்யூசன், புதிர்கள் போன்றவை உதவுகிறது.

Also Read : தலை நிறைய ஷேவிங் கீரீம்... டென்னிஸ் பந்தை கேட்ச் பிடித்து விநோதமாக கின்னஸ் சாதனைப் படைத்த நபர்...

அந்த வகையில், தற்போது வைரலாகும் ஐஏஎஸ் அதிகாரி பகிர்ந்த புகைப்படம் நமது நெட்டிசன்களை சிந்திக்க வைத்துள்ளது. அந்த புதிரில் 15 எண்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் அதற்கு 5 ஹிண்ட்- களும் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த ஹிண்ட்-களை கொண்டு பூட்டப்பட்டுள்ள பூட்டினை திறக்க வேண்டும்.

First published:

Tags: Optical Illusion, Twitter