• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • அல்லா'வுக்கு முன் அனைவரும் சமம்.. எங்கே எனது கல்வி ... தன் உரிமைக்காக போராடும் ஆப்கான் சிறுமி - வைரலாகும் வீடியோ

அல்லா'வுக்கு முன் அனைவரும் சமம்.. எங்கே எனது கல்வி ... தன் உரிமைக்காக போராடும் ஆப்கான் சிறுமி - வைரலாகும் வீடியோ

 வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

நான் ஒரு புதிய தலைமுறையைச் சேர்ந்தவள், நான் சாப்பிடவும் தூங்கவும் வீட்டிலேயே இருக்கவும் பிறக்கவில்லை. நான் பள்ளிக்கு செல்ல விரும்புகிறேன் என இணையத்தில் ஒரு குரல் ஓங்கி ஒலிக்கின்றது. யார் என்று காணொளியை முழுமையும் கண்டால் ஆப்கானில் பள்ளிக்கு செல்ல வேண்டும், எனக்கென என் சுதந்திர உரிமை எங்கே என முழக்கமிடுகின்றாள் ஒரு ஆப்கானிஸ்தான் நாட்டுச் சிறுமி.

  • Share this:
    ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய பிறகு, தாலிபான்கள் குறித்த பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. துப்பாக்கியை வைத்து நகைச்சுவையாக ஊஞ்சல் ஆடுவது, நடனம் ஆடி இணையவாசிகளை மகிழ்விப்பது என தாலிபான்களின் சிறுபிள்ளைத் தனமான வீடியோக்கள் வைரலாக பரவிய நிலையில் தற்போது  சிறுமியின் கம்பீர பேச்சு வைரலாகி வருகின்றது.

    ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் ஆதரவுடன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு 20 ஆண்டுகள் ஆட்சி செய்த நிலையில் தற்போது அந்நாடு தாலிபான்களின் கைகளுக்குச் சென்றுள்ளது. பழமைவாத சிந்தனை கொண்ட தாலிபான்கள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துவருகின்றன.

     



    ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆண்களுக்கான மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பெண்களுக்கான பள்ளிகள் திறப்பில் மர்மம் நீடிக்கிறது. பெண்கள் பள்ளிகளையும் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக பள்ளிக்கு செல்வதை ஒருசில இடங்களில் சிறுவர்கள் புறக்கணித்துள்ளனர்.

    இந்நிலையில் பள்ளிக்குச் செல்ல உரிமை கோரும் ஒரு இளம் பெண்ணின் வீடியோ வைரலாகியுள்ளது.
    அந்த வீடியோவில், ஆப்கானிஸ்தான் பெண் ஒருவர் தாலிபான்களுக்கு சவால் விடுத்து, தனது கல்வியைத் தொடரக்கோரி தைரியமாகப் பேசியதால் இணையத்தில் அனைவரையும் பேச வைத்துள்ளார்.

    ஒரு நிமிடம் நீளமான வீடியோவில், தாலிபான் தலைவர்களிடம் 'அல்லா'வுக்கு முன் ஆண்களும் பெண்களும் சமமாக இருக்கும்போது அவர்களிடம் இருந்து சரியான வாய்ப்பையும் பறிக்க வேண்டும் என்று யார் கேட்கிறார்கள்.



    நான் ஒரு புதிய தலைமுறையைச் சேர்ந்தவள், நான் சாப்பிடவும், தூங்கவும், வீட்டில் இருக்கவும் பிறக்கவில்லை. நான் பள்ளிக்குச் செல்ல விரும்புகிறேன். ஆப்கானிஸ்தானில் உள்ள எந்தவொரு பெண்ணும் கல்வி பெறவில்லை என்றால், நமது அடுத்த தலைமுறை எப்படி நல்ல முறையில் நடந்துகொள்வார்கள்.
    கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அந்த பெண், "எங்களுக்கு கல்வி கிடைக்கவில்லை என்றால், இந்த உலகில் எங்களுக்கு எந்த மதிப்பும் இருக்காது. என வீடியோவில் சிறுமி உரக்க குரலில் தன் உரிமையை கேட்கிறாள்.



    ஆப்கான் பெண்ணின் இந்த வீடியோ இணையத்தில் பலரையும் பேச வைத்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: