’சகமாணவர்கள் ராகிங்... நான் சாக விரும்புகிறேன்’ - தாயிடம் கதறி அழுத சிறுவன் - கண்கலங்க வைக்கும் வீடியோ

’சகமாணவர்கள் ராகிங்... நான் சாக விரும்புகிறேன்’ - தாயிடம் கதறி அழுத சிறுவன் - கண்கலங்க வைக்கும் வீடியோ
  • News18
  • Last Updated: February 21, 2020, 9:02 PM IST
  • Share this:
குள்ளத்தன்மை உடைய சிறுவன் ஒருவர் தனது தாயிடம் நான் சாக விரும்புகிறேன் என்று கதறி அழும் வீடியோ பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது.

பல ஆண்டுகளாக ராகிங், கேலி செய்தல் மற்றும் கொடுமைப்படுத்துதல் போன்ற விஷயங்களை தவிர்க்க பள்ளி, கல்லூரி நிர்வாகம் பல முயற்சிகளை எடுத்தும் அது பயனில்லாமல் தான் போய்விடுகிறது. இதனால் ஏற்படும் கொடூரமான விளைவுகளை புரிந்து கொள்ள வேண்டும்.

ஆஸ்திரேலியாவில் ராகிங் காரணமாக தன் மகன் அனுபவித்த மோசமான சம்பவத்தை தாய் ஒருவர் பகிர்ந்துள்ளார். பிரிஸ்கேனில் உள்ள தனது மகனை தாய் அழைத்து செல்ல வந்த போதுதான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.


அந்த வீடியோவில் வரும் சிறுவன் குள்ளத்தன்மை உடையவராக உள்ளார்.

மேலும் அந்த வீடியோவில் அந்த சிறுவன், பள்ளியில் சக மாணவர்கள் என்னை குள்ளன் என ராகிங் செய்கிறார்கள். எனக்கு வாழவே பிடிக்வில்லை. ஒரு கயிறு இருந்தால் கொடுங்கள், நான் சாக விரும்புகிறேன். யாராவது என்னை கொல்ல வேண்டும் என்று நினைத்தாலும் எனக்கு சந்தோஷம் தான்“ என்கிறார். அவரது தாய் எவ்வளவு சமதானப்படுத்த முயற்சித்தும் அந்த சிறுவன் விடாமல் கதறி அழுகிறார்.

பேஸ்புக்கில் இந்த வீடியோவை பார்த்த பலர் அந்த சிறுவன் மற்றும் தாய்க்கு ஆதரவாகவும், ராகிங் செய்த சகமாணவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் பிராட் வில்லியம்ஸ் அந்த சிறுவனுக்காக நிதி திரட்ட தொடங்கினார். இதன் மூலம் அந்த சிறுவனுக்கு ரூ.1.30 கோடி நிதி வசூலாகி உள்ளது. இதை அந்த சிறுவனிடம் விரைவில் அவர் ஒப்படைக்க உள்ளார்.
First published: February 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading