விமானங்களில் விமான ஊழியர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே நடக்கும் சம்பவங்களின் நிறைய வீடியோக்களை நாம் இணையத்தில் அடிக்கடி காண்கிறோம். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது.
இஸ்தான்புல்லில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் உணவு தொடர்பாக வாக்குவாதம் தொடங்கியதாக தெரிகிறது. இந்த சம்பவத்தின் வீடியோவை பயணி ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் பயணிக்கும் விமானத்தில் பணியாற்றும் பெண்ணுக்கும் நடந்த உரையாடல் வாக்குவாதமாக மாறியது.
டிசம்பர் 19 அன்று குர்ப்ரீத் சிங் ஹான்ஸ், என்பவர் இந்த கிளிப்பைப் பகிர்ந்து, "ஒவ்வொரு சர்வதேச நீண்ட தூர விமான இருக்கைகளும் உணவு தேர்வு வசதியைக் கொண்டிருக்கும். ஆனால் அனைவராலும் அதை நிர்வகிக்க முடியாது. சிலரால் மட்டுமே நிர்வகிக்க முடியும். அனைவருக்கும் உணவு தேர்வு தேவை. அது தவறியதால் ஏற்பட்ட விளைவை இங்கே நான் காண்கிறேன்." மேலும், "ஒரு ஆண், பெண் ஊழியர்களிடம் எப்படி நடந்து கொள்கிறான் என்பதை என் கண் முன்னே பார்க்கிறேன்" என்று அவர் சம்பவம் குறித்து தனது கருத்தை பதிவிட்டிருந்தார்.
இதையும் படிங்க: 9ம் வகுப்பு மாணவிக்கு கட்டாய குழந்தை திருமணம்.. கும்பலாக சென்று திருமணத்தை நிறுத்திய பள்ளி நண்பர்கள்!
பயணி ஒருவர் விமானத்தில் வேறு உணவு கேட்டு முரட்டுத்தனமான நடத்தையால் பணிப்பெண்ணை அழ வைத்ததாக குற்றம் சாட்டுவதை அந்த வீடியோவில் காணலாம். அதன்பின்னர் உணவு தேர்வு குறித்து விளக்கம் அளித்துக்கொண்டிருந்த பெண் ஊழியர், விமானத்தில் ஏற்கனவே உணவுகள் ஏற்றப்பட்டுள்ளது. அதில் இருந்து தான் உணவு பரிமாற முடியும் என்று சொல்லும் போதே பயணி குறுக்கிட்டு கடுமையாக பேசுகிறார்.
"நீங்கள் என்னை நோக்கி விரலைக் காட்டி என்னைக் கத்துகிறீர்கள். என் குழுவினர் உங்களுக்காக அழுகிறார்கள். தயவுசெய்து புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள், "என்று மீண்டும் அந்த ஊழியர் விளக்க முயற்சிக்கும்போது அது விவாதமாக மாறி விடுகிறது. இதை தடுக்க மற்றொரு பணியாளர் தலையிட்டு நிலைமையைத் தணிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
"மன்னிக்கவும், ஆனால் நீங்கள் பணியாளர்களிடம் அப்படி பேச முடியாது. நான் உங்கள் பேச்சை மரியாதையுடன் அமைதியாகக் கேட்கிறேன், ஆனால் நீங்கள் பணியாளர்களையும் மதிக்க வேண்டும்," என்று பயணியிடம் ஊழியர்கள் கூறுகிறார்கள்.
இருப்பினும், விமானப் பணிப்பெண்ணை அந்த நபர் "வேலைக்காரி" என்று அழைத்ததைத் தொடர்ந்து நிலைமை மோசமடைந்தது.
Tempers soaring even mid-air: "I am not your servant"
An @IndiGo6E crew and a passenger on an Istanbul flight to Delhi (a route which is being expanded soon with bigger planes in alliance with @TurkishAirlines ) on 16th December : pic.twitter.com/ZgaYcJ7vGv
— Tarun Shukla (@shukla_tarun) December 21, 2022
"நான் இந்த விமான நிறுவனத்தின் ஊழியர். உங்கள் வேலைக்காரி அல்ல" என்று பெண் ஊழியர் கூறியுள்ளார். பின்னர் இதுவரை மற்றொரு ஊழியர் அழைத்துக்கொண்டு போக சண்டை முடிவுக்கு வந்தது. இந்நிலையில், இண்டிகோ நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "டிசம்பர் 16, 2022 அன்று இஸ்தான்புல்லில் இருந்து டெல்லிக்கு 6E 12 விமானத்தில் நடந்த சம்பவம் எங்களுக்குத் தெரியும். நாங்கள் விசாரித்து வருகிறோம். இந்த சம்பவம் மற்றும் வாடிக்கையாளர்களின் சௌகரியம் எப்போதும் எங்களின் முதன்மையான முன்னுரிமை என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம். எல்லா நேரங்களிலும் சிறந்த அனுபவத்தை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்." என்று விளக்கம் அளித்துள்ளது.
இந்த சம்பவம் நெட்டிசன்களிடையே ஒரு விவாதத்தை உண்டாகியுள்ளது. விமானப் பணிப்பெண்கள் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள், எப்போதும் புன்னகையுடன், திறந்த மனதுடன் உதவுகிறார்கள். அவர்கள் மீது எரிச்சல் காட்டுவது காரணமற்றது. அவர்களையும் மனிதர்களாக மதிக்கவேண்டும் என்றும், வாடிக்கையாளர்களின் தேவையை புரிந்து விமான சேவைகள் அமைய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Flight Crew, Indigo, Viral Video