ஹைனாவிடம் முத்தம் வாங்கிய பாம்பு மனிதன்...மில்லியன் வியூஸ் பெற்று வைரலாகும் வீடியோ !

வைரலாகும் வீடியோ

பெரும்பாலும் பாம்புகள், சாலமாண்டார்,முதலைகளோடு அதிகம் நேரம் செலவிடும் ஜெய் ப்ரூ தற்போது ஹைனாவுடன் ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

  • Share this:
    மகுடி ஊதி பாம்பினை ஆட்டிவைக்கும் பாம்பாட்டிக்கே டஃப் கொடுக்கும் படி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றார் ஜெய் ப்ரூவர் என்பவர். இவர் கலிஃபோர்னியாவில் உள்ள ஊர்வன மிருகக்காட்சிசாலையின் நிறுவனராக உள்ளார். இவருக்கு ஊர்வன வகை விலங்குகளை தனது மிருகக்காட்சிசாலையில் வைத்து பராமரிப்பதில் மிகுந்த ஆர்வம். அவற்றை பராமரிப்பதை தனக்கென வைத்துள்ள இணையதள பக்கங்களில் பகிர்வார்.

    பெரும்பாலும் பாம்புகள் குறித்தும், அவை எவ்விதம் முட்டையிடும், முட்டையை எப்படி பாதுகாக்க வேண்டும், ஒரு பாம்பு எத்தனை முட்டையிடும், இடும் முட்டைகளை எண்ணி அவற்றை இணையத்தில் வீடியோவாக பதிவிடுவார். இவரது வீடியோவைக் காண இணையத்தில் ஒரு ரசிக கூட்டம் உண்டு.

    அவ்விதம் அவர் பகிர்ந்துள்ள சமீபத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.பெரும்பாலும் பாம்புகள், சாலமாண்டார்,முதலைகளோடு அதிகம் நேரம் செலவிடும் ஜெய் ப்ரூ தற்போது ஹைனாவுடன் ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    இந்த வீடியோ மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. அதில் அவரை இடைவிடாமல் முத்தமிடும் ஒரு ஹைனாவுடன் காணலாம். இதனை மகிழ்வோடு ஏற்றுக்கொள்ளும் ஜெய் ப்ரூ சற்றும் பயப்படாமல் சிரித்துக்கொண்டே ஹைனாவுடன் விளையாடுகின்றார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Jay Brewer (@jayprehistoricpets)








     




    View this post on Instagram





     

    A post shared by Jay Brewer (@jayprehistoricpets)








     




    View this post on Instagram





     

    A post shared by Jay Brewer (@jayprehistoricpets)






    ஜே ப்ரூவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட வீடியோவில், கழுத்து வரை ஆழம் உள்ள நீரில் ஹைனாவுடன் உள்ளார். இந்த வீடியோ குறித்து "நான் ஒரு ஹைனாவிலிருந்து முத்தங்களைப் பெறுவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை, ஆனால் இங்கு என்ன நடக்கப் போகிறது என்று ஒருபோதும் தெரியாது (sic)" என்று ப்ரூவர் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: