Home » News » Trend

காரை தடுத்து நிறுத்தியதால் வாட்ச்மேனை செருப்பால் அடித்த பெண் - சிசிடிவி காட்சிகள்

ஹைதராபாத்தில் அப்பார்ட்மென்ட் ஒன்றில் காரை தடுத்த நிறுத்திய வாட்ச்மேனை பெண் ஒருவர் செருப்பால் அடிக்கும் வீடியோ அங்கிருக்கும் சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது.

காரை தடுத்து நிறுத்தியதால் வாட்ச்மேனை செருப்பால் அடித்த பெண் - சிசிடிவி காட்சிகள்
சிசிடிவி காட்சிகள்
  • Share this:
ஹைதராபாத்தின் சந்தனநகர் அப்பார்ட்மென்ட் காம்பளக்ஸில் அனுமதியின்றி வந்த காரை அங்கிருக்கும் வாட்ச்மேன் தடுத்துள்ளார். இதனால் காரில் இருந்த 2 பெண்கள் வாட்ச்மேனுடன் கோபமாக வாக்குவாதம் செய்துள்ளனர்.

அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் தனது செருப்பை கழட்டி வாட்ச்மேனை சராமாரியாக அடித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வாட்ச்மேன் செய்வதறியாமல் திகைத்துள்ளார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது.


இந்த சம்பவத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட வாட்ச்மேன் சிசிடிவி காட்சி ஆதாரங்களுடன் காவல்நிலையத்தில் அந்த பெண் மீது புகார் அளித்துள்ளார். இந்த புகாரை பெற்று காவல் அதிகாிகள் விரைவில் அந்த பெண் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
First published: August 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading