இன்று நாடு முழுவதும் மக்கள் நவராத்திரி விழாவைக் கொண்டாடி வருகின்றனர். நவராத்திரியின் 10வது நாளான இன்று விஜயதசமி நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை கொண்டாடும் வகையில் ஹைதராபாத்தில் 45 அடி உயர துர்கா தேவி சிலையை நிறுவியிருக்கிறார்கள். இந்த சிலையானது ஹைதராபாத்தின் ‘எஸாமியா பஜார்’ பகுதியில் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த சிலையினை அங்குள்ள இந்து மக்கள் அனைவரும் சேர்ந்து உருவாக்கி இருக்கிறார்கள். இந்த பிரம்மாண்ட சிலையை வடிவமைத்த குலாப் ஸ்ரீனிவாஸ் இதைப் பற்றி பேசும் போது, ‘துர்கா தேவியின் சிலை உருவாக்க 35 நாட்கள் ஆனது. இதற்கு 22 கலைஞர்கள் தேவைப்பட்டனர். சுற்று சூழலுக்கு எந்த தீங்கும் இல்லாமல் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது சந்தையில் சுற்றுச்சூழலுக்கு பொருந்தாத ரசாயனம் மற்றும் நச்சு பொருள்கள் மூலம் சிலைகள் பெரும்பாலும் உருவாக்குகின்றனர்.
அதனால் தான் இந்த சிலையை சுற்றுசூழலுக்கு தீங்கு வராமல் உருவாக்கி உள்ளோம். களிமண், சிவப்பு மணல் மற்றும் பெயிண்ட் ஆகியவற்றில் மூலம் உருவாக்கபட்டிருக்கிறது’என்று அவர் தெரிவித்துள்ளார். துர்கா தேவி ஒன்பது முகங்களும், ஒன்பது ஜோடி கைகளை கொண்டிருக்கிறது. நவராத்திரியின் போது மக்கள் அனைவரும் துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களை வழிபடுகிறார்கள்.
விஜயதசமி அல்லது தசரா ராசி என்பது மகிஷாசுரனை கொன்ற துர்கா தேவியின் வெற்றியைக் குறிக்கிறது. நாட்டின் பல பகுதிகளில் உள்ள பக்தர்கள் நவராத்திரியின் போது துர்கா தேவியின் பல்வேறு வடிவங்களை வழிபடுவதற்காக உருவாக்குகிறார்கள். ஷைலபுத்திரி, பிரம்மசாரிணி, சந்திரகாந்தா, கூஷ்மாண்டா, ஸ்கந்த மாதா, காத்யாயனி, காளராத்திரி, மகாகபுரி மற்றும் சித்திதாத்ரி ஆகியவை துர்கையின் ஒன்பது வடிவங்கள் ஆகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அவதாரத்திற்கு பூஜை செய்து வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.
Also read... பிஸ்கெட்டுகள், பேக்கரி பொருட்கள் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தெய்யம் முகம் - கேரள கலைஞரின் சாதனை!
மக்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப துர்கா தேவியின் சிலைகளை உருவாக்கி கொண்டாடுகின்றனர். விஜயதசமி ‘தசரா’ என்றும் அழைக்கப்படுகிறது. இது ராமனின் கைகளில் உள்ள ராவணனின் 10 தலைகளைக் இருக்கும். இந்நாளில் ராவணனின் தோல்வியை கொண்டாடுகிறார்கள். விஜயதசமியில் தான் ராமன் அம்பு எய்து ராவணன், கும்பகர்ணன், இந்திரஜித் ஆகியோரை கொன்றதாக புராணங்கள் தெரிவிக்கிறது. இந்நாளில் வட இந்தியாவில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் ராமனுக்கு விழா எடுத்து கொண்டாடுகிறார்கள்.
மேலும் பாண்டவர்கள் அஞ்ஞான வாசத்தின் போது தங்கள் ஆயுதங்களை ‘வன்னி’ மர பொந்தில் ஒளித்து வைத்து பின்னர், விஜய தசமி அன்று பூஜை செய்தனர். இதனால் இந்நாள் வன்னி ராத்திரி என்றும், வன துர்கா நவராத்திரி என்றும் அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் ஆயுதபூஜை, விஜயதசமி, சரஸ்வதி பூஜை என இரண்டு நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Durga Puja