முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / திருமண வீட்டில் திடீரென மயங்கிய விழுந்த நபர்.. மாரடைப்பால் உயிரிழந்த பரிதாபம்..!

திருமண வீட்டில் திடீரென மயங்கிய விழுந்த நபர்.. மாரடைப்பால் உயிரிழந்த பரிதாபம்..!

மயங்கி விழுந்த நபர்

மயங்கி விழுந்த நபர்

திருமண நிகழ்ச்சியில் மாப்பிள்ளைக்கு நலங்கு வைக்கும் போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உறவினர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Hyderabad, India

ஐதராபாத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் மாப்பிள்ளைக்கு மஞ்சள் பூசும் நலங்கு சடங்கு நடைபெற்றுள்ளது. அப்போது மாப்பிள்ளைக்கு உறவினர் ஒருவர் மஞ்சள் பூசுவதற்காகக் குனிந்து மஞ்சள் எடுக்கும் போது திடீரென கீழே விழுந்துள்ளார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மயங்கி விழுந்துள்ளார். தொடர்ந்து, அவரை அவசரமாக மருத்துவமனையில் அனுமதித்ததில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் திருமண நிகழ்ச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிப்ரவரி 20 ஆம் நாள் ஹைதராபாத்தில் கலா ​​பத்தர் என்ற இடத்தில் இந்த திருமண நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அந்த தருணத்தில் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. உயிரிழந்தவர் 40 வயதான முகமது ரப்பானி என்று தெரியவந்துள்ளது. இவர் நகைக்கடையில் வேலை செய்துவந்துள்ளார்.

வைரலான இந்த வீடியோவில், அந்த நபர் மாப்பிள்ளையிடம் சிரித்துக்கொண்டு பேசி இருந்துள்ளார். மயங்குவதற்கு சில நொடிகளுக்கு முன்பு வரை சிரித்துக்கொண்டு இருந்தவர் மஞ்சள் எடுக்கக் கீழே குனிந்தவுடன் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இந்த மரணத்தால் இளைஞரின் திருமணமும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Also Read : Math riddle | 20 நொடிக்குள் இந்த பள்ளிக் கணக்கை போட முடிகிறதா பாருங்க!

இதேபோல் ஐதராபாத் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டு இருந்த இளம் வயது காவலர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மயங்கி விழுந்து இறந்துள்ளார். தொடர்ந்து, திடீரென ஏற்படும் மாரடைப்பால் இறப்பவர்கள் அதிகரிப்பதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

First published:

Tags: Heart attack, Hyderabad, Viral Video