பொதுவாக மார்க்கெட்டிங் நிறுவனங்கள் பல விதமான மார்க்கெட்டிங் தந்திரங்களை செய்து அசத்துவதுண்டு. அந்த வகையில் அவ்வப்போது சில அற்புதமான மார்க்கெட்டிங் தந்திரங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாவது வழக்கம். இப்படியொரு வினோத நிகழ்வு தான் அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் மணப்பெண்ணின் திருமணத்தில் நடந்துள்ளது. திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிராண்ட் ஒருங்கிணைப்பு மூலம் சந்தைப்படுத்துவது போலவே, திருமணத்தின் மூலமும் பிராண்ட் புரொமோஷன் செய்யலாம் என்பதை இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.
ஹைதராபாத்தில் நடைபெற்ற திருமணத்தில் மணமகனாக கிருஷ்ணா வர்ஷ்னே, அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் தனது மணப்பெண்ணுக்கு அளித்த திருமண நாள் பரிசு மூலம் இணையத்தில் வைரலாகி உள்ளார். Regalix என்கிற நிறுவனத்தில் கூகுள் விளம்பர மேலாளராக கிருஷ்ணா வர்ஷ்னே பணிபுரிந்து வருகிறார். இவர் திருமணம் செய்து கொண்ட மணப்பெண் ஃபகுனி கன்னா, அமேசான் நிறுவனத்தில் குழு இயக்க மேலாளராக வேலை பார்த்து வருகிறார். திருமண விழாவன்று வர்ஷ்னே தனது திருமண மாலையை தொலைத்துவிட்டதாக நடித்துள்ளார். சில நொடிகள் எல்லோரும் பதைபதைத்துள்ளனர்.
அதன் பிறகு, இந்த ஐதராபாத் மாப்பிள்ளை அமேசான் மூலம் இன்னொரு திருமண மாலையை ஆர்டர் செய்துள்ளார். அமேசான் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த திருமண மாலையை அமேசான் டெலிவரி பார்ட்னர் ஒருவர் வந்து கொடுப்பது போன்று இந்த புகைப்படம் அமைந்துள்ளது. இது குறித்து மணமகன் கிருஷ்ணாவிடம் கேட்டபோது, “எனது மனைவி ஃபகுனி கண்ணா அமேசானில் பணிபுரிவதால் நான் எனது திருமண மாலையை தொலைத்துவிட்டு, அதை அமேசானில் இருந்து ஆர்டர் செய்து அவரை ஆச்சரியப்படுத்தினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Also Read : விமானத்தில் பிரேக்ஃபாஸ்ட் கொண்டு சென்ற பயணிக்கு ரூ.2 லட்சம் அபராதம்!
இவர்கள் எடுத்து கொண்ட இந்த புகைப்படத்தை கிருஷ்ணா தனது லிங்க்ட்இன் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அதில் "என் காதலுக்கான அன்பை குறிக்கும் விதமாக ஒரு பிராண்ட் ஒருங்கிணைப்பை செய்கிறேன்" என்று கேப்ஷன் எழுதியுள்ளார். இந்த பதிவை 5,00- க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். மேலும் இந்த பதிவு வைரலாகி வருகிறது. மேலும் இந்த பதிவு குறித்து பலரும் இது ஒரு புதுமையான முயற்சியாக உள்ளது என்று பாராட்டி உள்ளனர். இருப்பினும் சிலர், திருமணத்தில் இப்படியொரு பிராண்ட் புரமோஷன் செய்வது தேவைதானா என்று கேட்டுள்ளனர். மேலும் சிலர் லிங்க்ட்இன்-இல் ஏன் இது போன்ற பதிவுகளை போடுகிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.
Also Read : வயிற்று வலி என வந்த நபருக்கு ஸ்கேனில் தெரிந்த அதிர்ச்சி ரிப்போர்ட்
இதை கிருஷ்ணா ட்விட்டரிலும் பதிவிட்டுள்ளார். அதிலும் கலவையான விமர்சனங்களே வந்துள்ளது. சிலர் இந்த பதிவை அதிகம் சாடியுள்ளார். இதெல்லாம் தேவையற்ற ஒன்று என்று குறிப்பிட்டு ரீட்வீட் செய்துள்ளனர். மேலும் சிலர் இந்த இளம் ஜோடிக்கு தங்களது திருமண நாள் வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர். சமூக ஊடகத்தில் எதை பதிவிடலாம், எதை பதிவிட கூடாது என்பது அவரவர் விருப்பமே. பதிவிட கூடிய நபர் அது குறித்த புரிதல் கொண்டவராக இருந்தால் சரி. இல்லையேல் பதிவிட்டவருக்கே அது மன உளைச்சலை ஏற்படுத்த கூடியதாக மாறி விடவும் வாய்ப்புள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.