முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / திருமண வரவேற்பில் முதல் மனைவியை பார்த்ததும் ஓட்டம் பிடித்த மணமகன்..! ஐதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்

திருமண வரவேற்பில் முதல் மனைவியை பார்த்ததும் ஓட்டம் பிடித்த மணமகன்..! ஐதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்

திருமணம்

திருமணம்

Trending | திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், ரிசப்ஷன் நடந்து கொண்டிருக்கும் பொழுது மணமகன் திடீரென்று அங்கிருந்து மாயமாக மறைந்து விட்டார். மணமகன் காணாமல் போனதற்கு காரணம் என்ன.?

  • Last Updated :
  • Hyderabad, India

வினோதமான சடங்குகள் முதல் மண்டபத்தில் இறுதி நேரத்தில் மணமகள் அல்லது மணமகன் திருமணத்தை நிறுத்துவது வரை, திருமணம் பற்றிய சுவாரசியமான செய்திகளுக்கு பஞ்சமே இல்லை. இணையதளத்தில் திருமணங்கள் பற்றி பலவிதமான செய்திகள் வெளியாகி வைரலாகும். இந்நிலையில் ஹைதராபாத்தில் நடந்த ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், ரிசப்ஷன் நடந்து கொண்டிருக்கும் பொழுது மணமகன் திடீரென்று அங்கிருந்து மாயமாக மறைந்து விட்டார். மணமகன் காணாமல் போனதற்கு காரணம் என்ன.?

தாலி கட்டுவதற்கு முன்பு அல்லது முகூர்த்த நேரத்தில் எனக்கு மாப்பிள்ளை அல்லது மணப்பெண்ணை பிடிக்கவில்லை என்று திருமணத்தை நிறுத்தியவர்கள் இருக்கிறார்கள். வரதட்சணை காரணமாக இறுதி நேரத்தில் திருமணம் நின்று போயிருக்கிறது. அதே போல, முதல் மனைவி / கணவன் இருக்கும் போதே ஏமாற்றி திருமணம் செய்து கொண்டவர்களும் இருக்கிறார்கள். இது சீரியல்களில், திரைப்படங்களில் மட்டும் நடப்பவை அல்ல. நிஜ வாழ்விலும் நடக்கின்றன. அந்த வகையில், ஹைதராபாத்தை சேர்ந்த மணமகன் ஒருவர் அவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் பொழுதே திடீரென்று மாயமாகி மறைந்து விட்டார். அவர் ஓடியதற்கு காரணம் அவருடைய முதல் மனைவி என்பது தெரியவந்துள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள மதன பேட்டை என்ற ஊரைச் சேர்ந்தவர் சையத் நசீர்கான். செப்டம்பர் 4 ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தார். இவருக்கு இது இரண்டாம் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் முதல் மனைவியான மருத்துவர் சனா சமரின் போலீசுடன் வருவதை பார்த்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இரண்டாம் திருமணம் என்பது அவ்வளவு பெரிய பிரச்சனை இல்லையே; எவ்வளவோ விவாகரத்தானவர்கள் இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார்களே என்று யோசிக்கலாம். ஆனால் சையத் தன்னுடைய முதல் மனைவியிடம் இதைப் பற்றி மறைத்து திருட்டுத்தனமாக இரண்டாம் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

Also Read : ரயில் தண்டவாளத்தில் இன்ஸ்டா ரீல்ஸ் செய்த இளைஞர்.. நொடிப்பொழுதில் நடந்த விபரீதம்

போலீஸ் அதிகாரிகளுடன் ரிசப்ஷன் நடந்த இடத்திற்குள் சனா சமரின் நுழைவதை பார்த்த உடனேயே, இதை சமாளிக்க முடியாது என்பதை புரிந்து கொண்ட சையத் அங்கிருந்து பின்பக்க வழியாக தப்பி ஓடி விட்டார். முதல் மனைவியின் சகோதரர் அப்துல் பாசித் இந்த சம்பவம் பற்றி டெக்கான் கிரானிக்கலுக்கு பின்வரும் தகவலை பகிர்ந்து கொண்டார். சையத் நியூசிலாந்தில் வசித்து வந்துள்ளார். 2019 ஆம் ஆண்டில் சையத் மற்றும் சனாவுக்கு திருமணம் நிச்சயமானது. சையத் நியூசிலாந்தில் இருந்து வந்து சனாவை திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின்னர், கோவிட் தொற்று ஊரடங்கால் அவரால் மீண்டும் நியூசிலாந்துக்கு செல்ல முடியவில்லை. இதனால் சனாவின் குடும்பமே அவருக்கு அனைத்து செலவுகளையும் செய்துள்ளது. ஒரு கட்டத்தில், தன் மனைவியிடம் 15 லட்ச ரூபாய் வேண்டும் என்று தொடர்ந்து கேட்டு நச்சரித்துள்ளார். அவ்வளவு பெரிய தொகையை கொடுக்க முடியவில்லை என்பதால் அவர் சனாவிடம் இருந்து விலகிச் செல்ல ஆரம்பித்தார் என்று அவரது சகோதரர் தெரிவித்தார். இதில், சனா சமரின் ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : ஆண்கள் அனுபவித்த பிரீயட்ஸ் வலி.. அலறியடித்து ஓடிய இன்ஸ்டா பிரபலம்.. வைரலாகும் வீடியோ

கோவிட் 19 இரண்டாவது அலையின் பொழுது மருத்துவரான சனா, சையத்தின் மாமாவிற்கு கோவிட் தொற்று ஏற்பட்ட போது, முழுக்க முழுக்க அவர் தான் கவனித்து சிகிச்சை அளித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அவரின் பெரும்பாலான சேமிப்புகளை லாக்டவுன் சமயத்தில் கணவருக்காக செலவழித்து விட்டதாகக் கூறினார்.

இதில் மிகவும் வருத்தப்படக்கூடிய மற்றும் அதிர்ச்சி அடையக்கூடிய ஒரு செய்தி என்னவென்றால் சையத் மற்றும் சனாவிற்கு 2 வயதில்  மகன் இருப்பது தான். பணத்திற்காக நச்சரிக்கத் தொடங்கிய பொழுதே சனா, சையத் மீது போலீசில் புகார் அளித்திருக்கிறார் என்பதும் இதில் குறிப்பிடத்தக்கது.

Also Read : இளைஞர்களுக்கு விப்ட் கிரீம் கேன்களை விற்க தடை..! ஏன் தெரியுமா.?

top videos

    இந்நிலையில் மீண்டும் ஒரு பெண்ணை திருமணம் செய்ய இருக்கிறார் என்ற செய்தியை அறிந்த சனா உடனடியாக போலீசாரிடம் தெரிவித்து, சரியான நேரத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

    First published:

    Tags: Hyderabad, Marriage, Trending