ஆண்டுக்கு ரூ.2 கோடி சம்பளம் - மைக்ரோசாஃப்ட் தலைமையகத்தில் வேலைக்கு சேர்ந்த ஐதராபாத் பெண்!

மைக்ரோசாஃப்ட் தலைமையகத்தில் வேலைக்கு சேர்ந்த ஐதராபாத் பெண்

தீப்தியின் தந்தை டாக்டர் வெங்கண்ணா ஐதராபாத் போலீஸ் கமிஷனரேட்டில் தடயவியல் நிபுணராக பணியாற்றுகிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
அமெரிக்காவில் கல்வி பயின்று வந்த ஐதராபாத்தை சேர்ந்த தீப்தி நர்குட்டி (Deepthi Narkuti) என்ற இளம்பெண் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.2 கோடி சம்பளத்துடன் கூடிய வேலையை பெற்று தலைப்பு செய்திகளில் இடம் பிடித்துள்ளார். தீப்தியின் தந்தை டாக்டர் வெங்கண்ணா ஐதராபாத் போலீஸ் கமிஷனரேட்டில் தடயவியல் நிபுணராக பணியாற்றுகிறார். இதனிடையே அமெரிக்காவில் அண்மையில் நடத்தப்பட்ட நேர்காணலில் (campus interview) தனது திறமையை நிரூபித்தார்.

இதனை அடுத்து மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் மென்பொருள் மேம்பாட்டு பொறியாளர் கிரேட் -2 குரூப் (software development engineer grade-2 group) போஸ்ட்டிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள தீப்தி, வஅமெரிக்காவின் சியாட்டிலில் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமையகத்தில் வேலையில் சேர்ந்துள்ளார். ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். கம்ப்யூட்டர்ஸில் (MS Computers) முதுகலை படிப்பை முடிப்பதற்கு முன்பே, AAA- அந்தஸ்து பெற்ற நிறுவனங்கள் தீப்தியின் திறமையை பார்த்து பல சலுகைகளை வழங்க முன்வந்தன.

இந்த நிறுவனங்களில் அமேசான், கோல்ட்மேன் மற்றும் சாச்ஸ் (Sachs)ஆகியவை அடங்கும். எனினும் எந்த நிறுவனத்தின் வேலையில் சேரலாம் என்று சில நாட்கள் யோசிப்பதற்காக நேரம் எடுத்து கொண்டார் தீப்தி. தீவிர பரிசீலனைக்கு பிறகு இறுதியாக மைக்ரோசாஃப்ட் வழங்கும் வேலையை ஏற்க தீப்தி முடிவு செய்தார். இவர் முன்பு மைக்ரோசாஃப்ட் ஸ்டூடன்ட் அசோசியேட்டாக (Microsoft Student Associate) 2014-2015 இல் பணியாற்றினார். ஐதராபாத்தைச் சேர்ந்த தீப்தி, உஸ்மானியா பொறியியல் கல்லூரியில் தனது பொறியில் படிப்பை முடித்துள்ளார்.

தனது முதுநிலை படிப்பைத் தொடர அமெரிக்காவுக்குச் செல்வதற்கு முன்பு JPMorgan Chase நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக 3 ஆண்டுகள் பணியாற்றினார். JPMorgan Chase நிறுவனத்தில் 3 வருட வேலைக்கு பிறகு, உயர் கல்வியை தொடருவதில் தீப்தி ஆர்வமாக இருந்தார். பின் குறிப்பிடத்தக்க முயற்சியைத் தொடர்ந்து, ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் ஸ்காலர்ஷிப் பெற்ற அவர் சமீபத்தில் தான் அந்த பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸில் முதுகலை பட்டம் பெற்றார். கேம்பஸ் இன்டர்வியூ மூலம் பல முன்னணி நிறுவனங்கள் வழங்கிய வேலை வாய்ப்புகளில் மைக்ரோசாஃப்ட் நிறுவன வேலையே தேர்வு செய்துள்ள தீப்திக்கு அந்நிறுவனம் ஆண்டுக்கு ரூ.2 கோடி சம்பளத்தை நிர்ணயித்துள்ளது.

Also read... கோவிட் தடுப்பூசி போட்டு கொள்ளும் 5 அதிர்ஷ்டசாலிகளுக்கு காத்திருக்கும் 1 மில்லியன் டாலர் பரிசு!

ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் நடந்த வளாக நேர்காணலின் போது அதில் பங்கேற்ற சுமார் 300 மாணவர்களில், மிக உயர்ந்த வருடாந்திர சேலரி பேக்கேஜை தீப்தி மட்டுமே பெற்றுள்ளார். சாஃப்ட்வேரில் கோடிங்கை மிகவும் நேசிக்கும் தீப்தி, அன்றாட பிரச்சனைகளை தீர்க்க மற்றும் வாழ்க்கையை மாற்றுவதில் தொழில்நுட்பம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி உதவும் என்று தீப்தி உறுதியாக நம்புகிறார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: