Video | மாணவிகளின் ஆடையை அளக்க பணியாளரை நியமித்த கல்லூரி...!

news18
Updated: September 16, 2019, 12:39 PM IST
Video | மாணவிகளின் ஆடையை அளக்க பணியாளரை நியமித்த கல்லூரி...!
வீடியோ காட்சிகள்
news18
Updated: September 16, 2019, 12:39 PM IST
கல்லூரிக்கு வரும் மாணவிகளின் மேலாடை கால் முட்டிவரை இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து பெண் செக்கியூரிட்டி ஒருவர் உள்ளே அனுமதிக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள செயிண்ட் பிரான்சிஸ் கல்லூரி சமீபத்தில் மாணவிகளுக்கு கடும் ஆடைக்கட்டுப்பாடுகளை சமீபத்தில் விதித்தது. அதன்படி, சுடிதார் நீளமாக இருக்கவேண்டும், ஸ்லீவ் லெஸ் சுடிதார் அணியக் கூடாது, குட்டையான ஆடைகள் அணியக்கூடாது என்று பல விதிமுறைகள் விதிக்கப்பட்டன.

உடைகள் ஆண்களை கவர்ந்து இழுப்பது போல இருக்கக் கூடாது என்று இதற்கான விளக்கத்தை கல்லூரி நிர்வாகம் மாணவிகளுக்கு கூறியிருந்தது.




விதிமுறைகளை மீறி ஆடை அணிந்து வரும் மாணவிகள் வகுப்பறைக்கு அனுமதிக்கப்படுவது இல்லை. இதற்கான கல்லூரி வாசலில் பெண் செக்கியூரிட்டி ஒருவர் நிறுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பாக பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், கடும் சர்ச்சை எழுந்ததால், அந்த விதிமுறைகளை கல்லூரி தற்காலிகமாக பின்வாங்கியுள்ளது.

Also See...

Loading...

First published: September 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...