என்னா அடி.. சட்டை கிழியும் அளவு சாலையில் கணவனை புரட்டி எடுத்த மனைவி! - வைரல் வீடியோ

என்னா அடி.. சட்டை கிழியும் அளவு சாலையில் கணவனை புரட்டி எடுத்த மனைவி!

மத்திய பிரதேசத்தில் தந்தை உதவியுடன் கணவனை மனைவி அடித்து புரட்டி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  மத்தியப் பிரதேசத்தின் தாமோ மாவட்டத்தில் இந்த விசித்திர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறும்போது, நாங்கள் பார்க்கும்போது சாலையில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அந்த பெண் அவரது கணவனைக் அடித்து புரட்டி எடுத்துக்கொண்டிருந்தார்.

  அடித்த அடியில், அவரது ஆடைகள் கிழிந்தன. இந்த சம்பவத்தை அங்கு சுற்றியிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்ததாக தெரிவித்துள்ளார். தற்போது சமூகவலைதளங்களில் அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

  இதுதொடர்பாக கிடைத்த தகவலின்படி, மத்திய பிரதேசத்தின் தாமோ மாவட்டத்தின் பாசா தர்கேடா பகுதியில் வசிக்கும் ராஜ்புத் மற்றும் பாவனாவுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இதைத்தொடர்ந்து, சில மாதங்களிலே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்து வரை சென்றது.

  இதனால், பாவனா தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனால், இருவருக்குமான பேச்சுவார்த்தையும் முடிந்தது.  இந்நிலையில், சம்பவத்தன்று, எதர்ச்சியாக இருவரும் சாலையில் நேரில் சந்தித்துள்ளனர். அப்போது, பாவனா தனது தந்தையுடன் இருந்துள்ளார். அந்த சமயத்தில் இருவரும் பேசிக்கொள்ள, அது வாக்குவாதமாக மாறியுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. இதையடுத்து, அந்த பெண் தனது தந்தையுடன் சேர்ந்து, கணவரை அடித்து புரட்டி எடுத்துள்ளார். இதில் அவரின் சட்டை கிழிந்தது. அப்போதும் அந்த பெண் அவரை விடவில்லை.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தொடர்ந்து, இவர்களின் சண்டையை காண சாலையில் கூட்டம் அதிகமானது. சுற்றியிருந்த பலர் இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்தனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. இறுதியாக போலீசார் தலையிட்டு இருவரையும் அங்கிருந்து சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
  Published by:Esakki Raja
  First published: