Home /News /trend /

நானா மட்டனா? மனைவியை தேர்வு செய்ய சொல்லும் கணவன் - வைரலாகும் ட்விட்டர் பதிவு!

நானா மட்டனா? மனைவியை தேர்வு செய்ய சொல்லும் கணவன் - வைரலாகும் ட்விட்டர் பதிவு!

Husband -wife

Husband -wife

மட்டன் இல்லாமல் என்னால் உயிர் வாழ முடியாது என்று மனைவி என்னிடம் கூறியிருக்கிறார். நான் அவரை மீண்டும் ஒரு முறை மன்னிக்க தயாராக இருக்கிறேன்.

    ட்விட்டரில் பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது. உலகம் இரண்டாகப் பிளந்து, கோஷ்டிகளுக்கு இடையே மூன்றாவது உலக போர் போல பெரிய அளவில் கீபோர்டு போராளிகளின் சண்டை நடக்கும். அதேபோல வேடிக்கையான நகைச்சுவையான பல பதிவுகளுக்கும் எந்த குறையும் இல்லை. சமீபத்தில் சைவ உணவுப் பழக்கம் கொண்ட கணவன் மற்றும் அசைவ உணவு பழக்கம் கொண்ட மனைவிக்கும் இடையே ஏற்பட்ட வேடிக்கையான ஒரு நிகழ்வு ட்விட்டரில் வைரலாக பரவி வருகிறது ‌‌

    எல்லாருமே உணவுப் பிரியர்கள் தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான உணவின் மீது அலாதியான பிரியம் இருக்கும். பிடித்த உணவை மற்றவர்களுடன் பகிர்வது என்பது நம்முடைய அன்பை பகிர்வது போல. ஆனால் வெவ்வேறு உணவுப் பழக்கம் கொண்ட தம்பதிகளுக்கிடையே இது ஒரு சில பிரச்சனைகளை உண்டாக்கும். அந்த வகையில் சைவ உணவு மட்டும் சாப்பிடும் கணவர் தன்னுடைய மனைவி மட்டன் சாப்பிடுவதை எப்படி நிறுத்துவது என பத்திரிக்கைக்கு செய்தியை அனுப்பியுள்ளார். அந்த பத்திரிக்கை செய்தி இதழில் வெளியாகி, அது டிவிட்டரில் பகிரப்பட்டுள்ளது.

    Pure veg என்ற பெயரில் கணவன் எழுதியது இங்கே.

    நான் முழு சைவ உணவு சாப்பிடும் பழக்கம் கொண்டவன். என் மனைவியும் சைவ உணவு உண்ணும் சமூகத்தைச் சேர்ந்தவர்தான். ஆனால் அவருக்கு மட்டன் பிடிக்கும் என்றும் மட்டனை வெளியில் ஹோட்டலில் சாப்பிடும் பழக்கம் கொண்டவர் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அவர் மிகவும் அழகாக இருந்ததால் அவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன்.

    Also read:  வித்தியாசமான மருத்துவ வழக்கு.... பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கிடைத்த நீதி!

    ஆனால், இனி அவர் வாழ்வில் மட்டன் சாப்பிட கூடாது என்ற ஒரு நிபந்தனையின் அடிப்படையில் அவரை நான் திருமணம் செய்து கொண்டேன். மட்டன் சாப்பிடுவதை நிறுத்தி விட்டார் என்று நினைத்திருந்தேன். ஆனால், என் மனைவி, சமீபத்தில் எனக்கு தெரியாமல் ரகசியமாக வெளியே எங்கேயோ மட்டன் சாப்பிட்டு வந்தார் என்பதை நான் கண்டுபிடித்துவிட்டேன்.

    இப்பொழுது மட்டன் இல்லாமல் என்னால் உயிர் வாழ முடியாது என்று அவர் என்னிடம் கூறியிருக்கிறார். நான் அவரை மீண்டும் ஒரு முறை மன்னிக்க தயாராக இருக்கிறேன். ஆனால் அவர் நானா அல்லது மட்டனா என்பதை முடிவு செய்ய வேண்டும் அவர் என்ன முடிவு செய்வார் என்று எனக்கு பயமாக இருக்கிறது.

    Also read:  3000 வருட பழமையான தங்க நகை கண்டுபிடிப்பு - வெண்கல காலத்தை சேர்ந்தது

    பெண்ணுக்கும் உணவுக்கும் கணவருக்கும் இடையே முதல் முறையாக உருவாகிய ஒரு லவ் ட்ரையாங்கில் இதுவாகத்தான் இருக்கும். ஒரு ஆண் அல்லது ஆடு என இரண்டில் ஒன்று தேர்வு செய்ய வேண்டும் என்பதே சுவாரஸ்யமாக இருக்கிறது. செய்தித்தாளுக்கு எழுதிய நபருக்கு ‘காதல் இல்லாமல் ஒருவர் வாழ்ந்துவிட முடியும் ஆனால் உணவு இல்லாமல் வாழ முடியாது எனவே நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்’ என்று வேடிக்கையான பதிலை காலம்னிஸ்ட் தெரிவித்திருந்தார்.



    செய்தித்தாள் கட்டிங்கை மற்றொரு நபர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் கணக்கில் பகிர்ந்துள்ளார் அது பல முறை ரீட்டிவீட் செய்யப்பட்டுள்ளது. மேலும் 100 முறைக்கும் தனிப்பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த ட்விட்டர் பதிவுக்கு பலரும் மிகவும் வேடிக்கையான பதில்களை பகிர்ந்து வருகின்றனர். அதில் சில சரியான பதில்கள் இங்கே,

    “நானும் தூய சைவ உணவு சாப்பிடும் பழக்கம் கொண்டவள் தான். ஆனால் ஒரு ஆணை விட நான் ஆடை தேர்ந்தெடுப்பேன்.” என்று ஒரு பெண் டிவீட் செய்திருந்தார்.

    “இதுதான் உண்மையான பிரச்சனை! இவர்கள் தான் உண்மையான மனிதர்கள்!” என்று மற்றொருவர் வேடிக்கையாக குறிப்பிட்டிருந்தார்

    சந்தேகமே இல்லை நான் மட்டனை தான் தேர்வு செய்வேன் என்றும், மனிதர்கள் எப்பொழுதுமே நிரந்தர மாணவர்கள் கிடையாது ஆனால் இறைச்சி எப்போதும் நிரந்தரமானது உணவுப் பிரியர்கள் டிவீட் செய்திருந்தனர்.

    அந்த நபரின் மனைவியாக நீங்கள் இருந்தால், எதை தேர்வு செய்வீர்கள்?

     
    Published by:Arun
    First published:

    Tags: Twitter

    அடுத்த செய்தி