லாட்டரி ஸ்க்ராட்ச் கார்டு மூலம் கணவருக்கு கர்ப்பத்தை வெளிப்படுத்திய மனைவி - வைரலாகும் சர்ப்ரைஸ் வீடியோ!

லாட்டரி ஸ்க்ராட்ச் கார்டு மூலம் கணவருக்கு கர்ப்பத்தை வெளிப்படுத்திய மனைவி - வைரலாகும் சர்ப்ரைஸ் வீடியோ!

வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்கிரீன்ஷாட்

கர்ப்பத்தை அறிவிப்பது முதல் குழநதையின் பாலினத்தை அறிவிப்பது வரை அனைத்து தருணங்களையும் அழகிய நினைவுகளாக பதிவு செய்து வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஒரு பெண் கர்ப்பமாகிறாள் என்றால் அது அவளுக்கு மட்டுமல்லாமல் கணவர், பெற்றோர் என அவளது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சந்தோஷத்தை கொடுக்கும் தருணமாக இருக்கும். இப்போதெல்லாம் இதுபோன்ற தருணங்களை உலக மக்கள் பலர் மிகவும் ஸ்பெஷலாக கொண்டாடி வருவது வழக்கமாகி விட்டது. கர்ப்பத்தை அறிவிப்பது முதல் குழநதையின் பாலினத்தை அறிவிப்பது வரை அனைத்து தருணங்களையும் அழகிய நினைவுகளாக பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், அரிசோனாவைச் சேர்ந்த ஒரு பெண் தான் கர்ப்பமடைந்ததை தனது கணவருக்கு ஒரு சுவாரஸ்யமான வகையில் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், சாதாரணமாக அல்லாமல் புதுமையான வழியைக் கொண்டு அவர் தனது கர்ப்பத்தை கணவர் ரிக்கிற்கு வெளிப்படுத்தியுள்ளார். அதாவது லாட்டரி கார்டு மூலம் தான் கர்ப்பம் அடைந்ததை அவர் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் அவரது கணவரின் ரியாக்சன்களை வீடியோவாக பதிவு செய்து தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு மக்களின் பாராட்டை பெற்று வருகிறார். சுமார் 6 நிமிடங்கள் கொண்ட அந்த வீடியோ கிளிப்பில், ஹெய்லி தான் கர்ப்பமாக இருக்கிறாரா என்பதை தெரிந்து கொள்ள கர்ப்ப பரிசோதனையை செய்து கொண்டதாக கூறியுள்ளார்.

இதையடுத்து கர்ப்ப பரிசோதனை கிட் முடிவைக் காட்டுகிறதா என்பதை கவனித்துள்ளார். இந்த நிலையில், பரிசோதனை மூலம் தான் கருவுற்றிருப்பதை அறிந்த ஹெய்லி மிகவும் மகிழ்ச்சியடைந்தார். பின்னர் அவரது பாலோவ்ர்ஸ்களிடம் தான் விரைவில் ஒரு குழந்தையைப் பெறப் போகிறேன் என்பது என் கணவருக்கு தெரியாது என்று கூறியுள்ளார். ரிக்கிற்கு இந்த சந்தோஷமான செய்தியை வெளிப்படுத்தும் தனது திட்டங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், கர்ப்பத்தைப் பற்றி லாட்டரி அட்டைகள் மூலம் வெளிப்படுத்தப்போவதாக கூறியுள்ளார்.

Also read... பாம்புக்கே தண்ணீரை குடிப்பதற்கு கொடுத்த அதிசய மனிதர் - வைரலாகும் வீடியோ!

மேலும் தனது கணவரை ஆச்சரியப்படுத்த என்னமாதிரியான சர்ப்ரைஸ் கொடுக்க போகிறார் என்பதையும் தனது பார்வையாளர்களிடம் விளக்கினார். சில நிமிடங்கள் கழித்து, அவரது கணவர் ரிக் வீட்டின் லிவிங் ஏரியாவுக்குள் நுழைவதைக் காணலாம். அந்த நேரத்தில் ஹெய்லி லாட்டரி அட்டைகளில் ஒன்றை ஸ்க்ராட்ச் செய்வதில் பிசியாக இருந்தார்.மேலும் தன்னிடம் இருக்கும் மற்றொரு லாட்டரி அட்டையை ஸ்க்ராட்ச் செய்ய தனக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

பின்னர் அவர்கள் இருவரும் டிக்கெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள வெகுமதிகளையும், வின்னிங் ப்ரைஸ் குறித்த விஷயங்களை படித்து பார்த்தனர். சில விநாடிகள் கழித்து, ரிக் ஸ்க்ராட்ச் கார்டில் ‘குழந்தை’ என்று எழுதியிருந்த அட்டையைப் பெறுகிறார். அவர் முழு அட்டையையும் ஸ்க்ராட்ச் செய்தபிறகு, அதில் தனது மனைவி கருவுற்றிருக்கிறார் என்பதை பார்த்த உடன் மிகுந்த மகிழ்ச்சியில் குதித்துக்கொண்டிருப்பதைக் காணலாம். பின்னர் இந்த ஜோடி ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து, சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டனர்.உணர்ச்சிகளின் அதிக சுமைகளைக் கொண்ட வீடியோ யூடியூபில் மட்டும் சுமார் 90 ஆயிரம் பார்வைகளைப் பெற்றுள்ளது. பகிரப்பட்டதிலிருந்து, நெட்டிசன்கள் வீடியோவுக்கு பல்வேறு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பெரும்பாலான மக்கள் இந்த ஜோடியை வாழ்த்தியுள்ளனர். மேலும் அந்த வீடியோ அவர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று சிலர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் இந்த வீடியோ இணையத்தில் அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: