• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • எங்க இருக்கீங்க..? மனைவியின் சந்தேகத்திலிருந்து தப்பும் கணவரின் ராஜதந்திரம் - வைரல் வீடியோ

எங்க இருக்கீங்க..? மனைவியின் சந்தேகத்திலிருந்து தப்பும் கணவரின் ராஜதந்திரம் - வைரல் வீடியோ

  • Share this:
    நண்பர்களுடன் இணைந்து ஜாலியாக இருக்க நினைக்கும் கணவர், மனைவியின் சந்தேகத்திலிருந்து தப்பிக்க நவீன யுக்தியை பயன்படுத்தும் வீடியோ பார்ப்பவர்களை சிரிக்க வைக்கிறது.

    திருமணத்திற்கு பின் நண்பர்களுடன் ஜாலியாக இருக்க கணவர்கள் மனைவியிடம் படும்பாட்டை பல வீடியோக்களில் நகைச்சுவையாக பார்த்திருப்பபோம். என்ன தான் சமாளித்தாலும் இறுதியில் கணவன் சொல்லும் பொய்யை மனைவி எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள்.

    மனைவி நம்பும்படி பொய் சொல்லும் கில்லாடி கணவனின் வீடியோ ஒன்று அனைவரது மனதையும் கவர்ந்துள்ளது. அந்த வீடியோவில் வரும் கணவர் நண்பர்களுடன் ஜாலியாக இருக்க மனைவியிடம் இன்று இரவு வீட்டுக்கு வர முடியாது, மழை அதிகமாக பெய்கிறது என்கிறார்.

    உடனே மனைவி புத்திசாலிதனமாக வீடியோ காலில் பேச, அதில் மழை பெய்வதும் இடி இடிக்கும் சத்தம் கேட்க அவர் சம்மதிக்கிறார். ஆனால் நின்று கொண்டிருக்கும் காரில் கணவன் பேச, அவரது நண்பர்கள் நீரை எடுத்து காரில் வீசுவதும், ஃபேனை கொண்டு காற்று அடிப்பது போன்று செய்கின்றனர்.



    புத்திசாலிதனமாக யோசிக்கும் மனைவியை அவரது போக்கிலேயே சென்று ஏமாற்றும் கணவரின் வீடியோ பார்ப்பவர்களை சிரிக்க வைக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: