ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

மனைவியை தோளில் சுமந்து திருப்பதி படியேறிய கணவன்!! வைரல் வீடியோ!!

மனைவியை தோளில் சுமந்து திருப்பதி படியேறிய கணவன்!! வைரல் வீடியோ!!

வெங்கட நாராயணாவும் அவரது மனைவியும்

வெங்கட நாராயணாவும் அவரது மனைவியும்

அப்போது கணவர் வேகமாக படியேறி சென்றதை பார்த்த மனைவி, முடிந்தால் என்னை தூக்கிக்கொண்டு படியேறுங்கள் பார்க்கலாம் என சவால் விட்டார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tirupati, India

  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பெருமாளை தரிசிக்க சென்ற நபர் ஒருவர், தன் மனைவியை தோளில் சுமந்துக்கொண்டு படியேறும் வீடியோ காட்சி சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

  ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கடியப்புலங்காவை சேர்ந்தவர் லாரி உரிமையாளரான வரத வீர வெங்கட சத்தியநாராயணா. இருவருக்கும் லாவண்யா என்பவருக்கும் திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர்.

  அதில் ஒரு மகளுக்கு மகன் பிறந்துள்ளார். பேரன் பிறந்தால் திருப்பதி மலைக்கு நடத்து படியேறி வருவதாக சத்தியநாராயணாவும் அவரது மனைவியும் வேண்டிருந்தனர். அதன்படி வேண்டுதலை நிறைவேற்ற படியேறி சென்றனர்.

  இதையும் வாசிக்க: நேரம் சரியில்லை, ஜெயிலுக்கு போற மாதிரி இருக்கும் என்று ஜோதிடர் சொன்னால் கவலை வேண்டாம்!

  அப்போது கணவர் வேகமாக படியேறி சென்றதை பார்த்த மனைவி, முடிந்தால் என்னை தூக்கிக்கொண்டு படியேறுங்கள் பார்க்கலாம் என சவால் விட்டார். சவாலை ஏற்ற கணவன் மனைவியை தோளில் சுமந்து கொண்டு படியேறி சென்றார். இதனை அங்கு வந்த பக்தர்கள் ஆர்ச்சரியத்துடன் பார்த்து அவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

  மனைவியை தூக்கிக்கொண்டு 70 படிகள் ஏறினார். அதன்பின் லாவன்யா அவரது தோழில் இருந்து இறங்கிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Tirupathi, Trending News, Viral Video