லாக்டவுனால் பட்டினி - தெரு நாய்கள் மற்றும் விலங்குகளின் பசிபோக்கும் தன்னார்வலர்கள்!

நாய் (கோப்பு படம்)

தயாரிக்கப்பட்ட உணவுகளை சிறிய பாக்கெட்டுகளில் அடைத்து நகரின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட விநியோக பாயின்ட்டுகளுக்கு கொண்டு ?

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்ததை தொடர்ந்து தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மருந்து கடைகள் மற்றும் சில அத்தியாவசிய தவிர காய்கறி மற்றும் மளிகை கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. லாக்டவுன் போடுவதற்கு முதல் நாள் மக்கள் கூட்டம் கூட்டமாக கடைகளுக்கு சென்று குறைந்தது ஒரு வாரத்திற்கு தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை வாங்கி வைத்து விட்டனர். ஆனால் மக்கள் தரும் உணவுகளை நம்பி மட்டுமே உயிர் வாழும் நாய்கள் உட்பட பெரும்பாலான கால்நடைகள் பட்டினியில் கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கடைகள் மற்றும் சாலையோர உணவகங்கள் மூடி இருப்பது அவற்றின் துயரத்தை அதிகரித்துள்ளது. இந்த சூழலில் வேலூர் மாவட்டத்தில் உள்ள விலங்கு நல ஆர்வலர்கள் பசியால் வாடும் கால்நடைகளை கண்டறிந்து அவற்றை சாப்பிடாமல் வெறும் வயிற்றில் தூங்கவோ அல்லது மோசமாக பட்டினியால் இறக்கவோ விடாமல் பார்த்து கொண்டிருக்கிறார்கள். நியூ வோர்ல்ட் அனிமல் ரெஸ்கியூ (New World Animal Rescue) உடன் இணைந்த தன்னார்வலர்கள் 16 பேர் பள்ளிகொண்டாவில் உள்ள நிறுவன அலுவலக வளாகத்தில் உள்ள தற்காலிக சமையலறையில் உணவு தயாரித்து வருகின்றனர்.

பின் தயாரிக்கப்பட்ட உணவுகளை சிறிய பாக்கெட்டுகளில் அடைத்து நகரின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட விநியோக பாயின்ட்டுகளுக்கு கொண்டு சென்று அங்கிருந்து, ஒரு சில தன்னார்வலர்கள் மூலம் பசியால் வாடும் விலங்குகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. இது பற்றி தகவல் தெரிவித்துள்ள New World Animal Rescue(NWAR) அமைப்பின் தலைவர் எஸ்.சுகுமார் கூறுகையில், இரு நாட்களுக்கு முன் குடியாத்தம், பெர்னாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் பசியால் தவித்து வந்த சுமார் 350 நாய்களுக்கு உணவு வழங்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

Also read... தனது உரிமையாளரை போலவே யோகாவில் அசத்தும் நாய் - நெட்டிசன்கள் வியப்பு!

தங்களது அமைப்பு இப்போது மற்ற மாவட்டங்களிலும் இந்த சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது என்றும், மேலும் கோவிட் முதல் அலையின் போது செய்ததை போல திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டையில் உணவின்றி தெருவில் தவிக்கும் விலங்குகளுக்கு உணவு களை வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடம் கூட NWAR அமைப்பினர் தெரு நாய்களை தவிர, மலைகள் மற்றும் மலையடிவார கோயில்களில் பசியால் வாடிய குரங்குகளுக்கும் உணவு வழங்கினர்.

NWAR அமைப்பின் முயற்சிக்கு உதவும் விதமாக இந்த ஆண்டு வேலூர் மாவட்ட கால்நடை வளர்ப்புத் துறை 10 மூட்டை அரிசி மற்றும் 15 மூட்டை கோதுமை தவிடு ஆகியவற்றை வழங்கியுள்ளது. ஒவ்வொரு மூட்டையிலும் சுமார் 25 கிலோ தானியங்கள் உள்ளன. எனினும் தங்களது சேவையை NWAR விரிவுபடுத்த விரும்புவதால், நன்கொடை அளிக்குமாறு மக்களிடம் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: