• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • நீருக்கடியில் ‘ஒலி’ எழுப்பிக்கொண்டே செல்லும் ‘திமிங்கலம்’ - வித்தியாசமான நிகழ்வு!

நீருக்கடியில் ‘ஒலி’ எழுப்பிக்கொண்டே செல்லும் ‘திமிங்கலம்’ - வித்தியாசமான நிகழ்வு!

மாதிரி படம்

மாதிரி படம்

திமிலங்கள் ஒருமுறைக்கு சுமார் 12 கிலோ காற்றை இழுத்துக்கொள்ளும். நீருக்கடியில் 162 மீட்டர் ஆழம் வரை நீந்திச் செல்லும் திமிங்கலங்கள் மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் நீந்திச் செல்லக்கூடியவை ஆகும்.

  • Share this:
திமிங்கலம் தற்போது உலக அளவில் அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சுமார் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே ‘திமிங்கலங்கள்’ பிறந்துவிட்டது. தற்போது உள்ள திமிங்கலம் தான் பூமி உருவான காலத்திலிருந்து வாழ்ந்து வரும் உயிரினங்களில் மிகப்பெரியது ஆகும். இவை பிரம்மாண்ட டைனோசர்களை விடவும் பெரியது. உலகில் உள்ள விலங்குகளில் மிகப் பெரியது இதுதான் என்று கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் உறுதி செய்கின்றனர்.

மனிதர்களை போலவே திமிங்கலங்கள் வெப்ப ரத்தப் பிராணிகள் ஆகும். சீரான வெப்பத்தை இவைகள் கொண்டிருக்கும். திமிங்கலம் ஒரு பாலூட்டி வகையை சார்ந்தது. இதன் கர்ப்ப காலம் பத்து முதல் பதினாறு மாதங்கள் வரை இருக்கலாம். ஒவ்வொரு திமிங்கலத்தின் தன்மையை பொறுத்து இது மாறுபடும். திமிங்கலங்களின் உணவுச் சங்கிலியில் ஏற்பட்ட மாற்றமே அவைகளின் பரிணாம வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்தி 15 அடி நீளத்திலிருந்து 100 அடி நீளம் வரை வளரக்காரணம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

திமிலங்கள் ஒருமுறைக்கு சுமார் 12 கிலோ காற்றை இழுத்துக்கொள்ளும். நீருக்கடியில் 162 மீட்டர் ஆழம் வரை நீந்திச் செல்லும் திமிங்கலங்கள் மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் நீந்திச் செல்லக்கூடியவை ஆகும். திமிங்கலத்தின் உணவு கடலில் இருக்கும் மீன்கள், கீல், கடல் நாய்கள் போன்றவைகள் ஆகும். இதனுடைய வாயின் நீளம் 18 அடி. வாயைத் திறந்து கொண்டு நீருடன் சேர்த்து இரையை விழுங்கும் திறமையைக் கொண்டிருக்கிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 1,000 கிலோ உணவை உண்கிறது திமிங்கலம்.

Also read... நிறைய பெண்கள் இருப்பாங்கன்னு சொன்னீங்க.. ஏமாந்துபோன இளைஞர் டேட்டிங் வெப்சைட் மீது வழக்கு

திமிங்கலங்களில் பல்வேறு வகைகள் உள்ளன. ‘ஹம்ப்பேக்’ திமிங்கலங்கள் உலக அளவில் புகழ் பெற்றது ஆகும். திமிங்கலங்களின் ‘குறும்பு’ நிறைந்த காணொளிகள் இணையத்தில் அதிகம் உண்டு. அதுபோன்ற காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் நடந்திருக்கிறது. ஹம்ப்பேக் திமிங்கலங்கள் நீந்தும்போதும், தண்ணீரை ஊதும்போதும் தனித்துவமான ஒலிகளை ஏற்படுத்தும்.

அந்த வீடியோவில், பெரும்பாலும் திமிங்கலங்கள் ஒலி எழுப்பியதை நாம் பார்த்தது கிடையாது. திமிங்கலங்கள் வரிசையாக ஒவ்வொன்றாக நீருக்கடியில் சென்று கொண்டிருக்கிறது. அது ஒலி எழுப்பி கொண்டே செல்கிறது. பார்ப்பதற்கு புதுமையாக இருக்கும் இந்த வீடியோ, பார்க்கும் அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்துகிறது. இந்த வீடியோ தற்போது அனைவராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். திமிங்கலங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக ஒலி எழுப்பிக்கொண்டே செல்லும் இந்த காட்சி மெய் மறந்து பார்க்க வைக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: