Home /News /trend /

தாகத்தால் தவித்த குரங்கிற்கு தண்ணீர் கொடுத்து உதவிய போக்குவரத்து காவலர் - வைரல் வீடியோ

தாகத்தால் தவித்த குரங்கிற்கு தண்ணீர் கொடுத்து உதவிய போக்குவரத்து காவலர் - வைரல் வீடியோ

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

Trending | இன்டர்நெட்டில் நம் மனதை நெகிழச் செய்யும் ஏராளமான விஷயங்கள் நிரம்பிக் கிடக்கின்றன.

இன்டர்நெட்டில் நம் மனதை நெகிழச் செய்யும் ஏராளமான விஷயங்கள் நிரம்பிக் கிடக்கின்றன. பல பதிவுகள், புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் நம் மனதை கொள்ளை கொள்ளச் செய்வதாக அமைந்துள்ளது. நீங்கள் இதை நம்பவில்லை என்றாலும் கூட, அதற்கு சான்றான வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது.

கோடை வெயிலின் தாக்கம் மனிதர்களை மட்டுமல்லாமல் பறவைகள், விலங்குகள், தாவரங்கள் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளையும் வாட்டி வதைத்து வருகிறது. பெரும்பாலும் காடுகள், கிராமங்கள் மற்றும் நீர்நிலைகளை ஒட்டி வாழும் பறவைகள் அல்லது விலங்குகளுக்கு தண்ணீர் பிரச்சினை இருக்காது. ஆனால், நகர்ப்புற பகுதிகளில் வாழும் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு குடிநீர் கிடைப்பது கொஞ்சம் அரிதான காரியம் தான். ஆனால், அதுபோன்ற உயிரினங்களுக்கு உதவுவதற்காகவே நல்லெண்ணம் படைத்த பலர் இந்த பூமியில் வாழுகின்றனர்.

போக்குவரத்து காவலர் உதவி

மகாராஷ்டிர மாநிலம், மல்ஷேஜ் காட் என்ற பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த நிகழ்வு குறித்த வீடியோவை ஐ.எஃப்.எஸ். அதிகாரி சுஸந்தா நந்தா டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், “எங்கெல்லாம் சாத்தியம் இருக்கிறதோ அங்கெல்லாம் கருணையுடன் இருங்கள். நல்ல காரணங்களுக்காக காவலர் சஞ்சய் குடேவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

 

நெடுஞ்சாலை அருகே தாகத்துடன் நின்று கொண்டிருந்த குரங்கை பார்த்து மனம் உறுகிய காவலர் சஞ்சய் குடே, அதற்கு பாட்டிலில் தண்ணீர் கொடுத்து உதவினார். அவ்வழியாகச் சென்ற நபர்கள் இதை வீடியோவாக படம் பிடித்தனர். டிவிட்டரில் இந்த வீடியோ சுமார் 50 ஆயிரம் பார்வைகளை பெற்றுள்ளது.

also read : திடீரென பற்றி எறிந்த ராயல் என்ஃபீல்டு பைக் - வைரல் வீடியோ
 நாமும் உதவலாமே…


உயிரினங்களுக்கு எங்கோ ஒருவர் உதவும் வீடியோவை பார்த்து நாம் பாராட்டுகின்ற அதே வேளையில், நாமும் இதேபோல உயிரினங்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும். இதற்காக, நீங்கள் தனியாக நேரம் ஒதுக்க வேண்டும் என்றோ அல்லது பெரும் செலவு செய்ய வேண்டும் என்றோ கிடையாது.

உங்கள் வீட்டு மொட்டை மாடியில், வெயில் படாத நிழல் பகுதி இருந்தால் அதை தேர்வு செய்யுங்கள். அப்படி இல்லை என்றால் சின்னதாக பேனர் ஷீட் ஒன்றை கட்டி வைத்தால் கூட போதுமான நிழல் கிடைக்கும். அந்த நிழலின் கீழ் குளுமையான தண்ணீரை ஒரு பாத்திரத்தில் நிரப்பி வையுங்கள். அதன் அருகே சில சிறு தானியங்களையும் கொட்டி வைக்கலாம். வெயிலில் அலைந்து திரியும் பறவைகளுக்கு இது உதவிகரமாக இருக்கும். வீட்டில் காய்கறி மற்றும் அரிசி அலசிய நீரை வீட்டுக்கு வெளியே வாளியில் நிரப்பி வைத்தால், ஆடு, மாடு போன்ற சுற்றித் திரியும் கால்நடைகள் பலன் அடையும்.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Viral Video

அடுத்த செய்தி