பிடித்த வார்த்தையை கிசுகிசுத்ததும் தூங்கி கொண்டிருந்த நாய் கொடுத்த செம்ம ரியாக்ஷன் - வைரலாகும் வீடியோ!

பிடித்த வார்த்தையை கிசுகிசுத்ததும் தூங்கி கொண்டிருந்த நாய் கொடுத்த செம்ம ரியாக்ஷன் - வைரலாகும் வீடியோ!

வைரல் வீடியோ

"உங்கள் நாய்க்கு விருப்பமான வார்த்தையை கிசுகிசுத்து அவற்றின் எதிர்வினைகளைப் பதிவுசெய்க" என்ற சேலஞ்சில் எடுக்கப்பட்ட ஒரு நாயின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Share this:
நம் வீடுகளில் வளர்க்கப்படும் முக்கிய செல்ல பிராணி நாய். வீட்டை காவல் காப்பதில் நாய்களுக்கு முக்கிய பங்குண்டு. எனவே நாய்கள் மனிதனின் உற்ற தோழன் நண்பன் என்று கருதப்படுகிறது. ஒரு நாயின் சராசரி ஆயுள் காலம் சுமார் 10 முதல் 14 ஆண்டுகள் ஆகும். பொதுவாக பெரிய இனங்களை விட சிறிய இன நாய்கள் நீண்ட காலம் வாழ்வதாக தெரிய வந்துள்ளது. மனிதர்களை விட கிட்டத்தட்ட 100 மில்லியன் மடங்கு குறைவான அளவுகளில் வாசனைகளை வேறுபடுத்தும் திறனும் நாய்களுக்கு உண்டு. நம்முடைய இந்த செல்லப்பிராணிகள் மனிதர்களை விட அதிக சக்தி கொண்ட செவிப்புலன் உடையவை.

நமக்கு கேட்கும் தூரத்திலிருந்து வரும் ஒலியை விட நான்கு மடங்கு தூரத்தில் உள்ள ஒலிகளை கேட்கும் திறன் கொண்டவை நாய்கள். நினைவில் கொள்ளுங்கள், இந்த செல்லப் பிராணிகளுக்கு மனிதர்களை விட குறைந்தது 100,000 மடங்கு அதிக செவிப்புலன் திறன் உள்ளது. ஒரு மனிதன் தனது தூங்கி கொண்டிருக்கும் நாயிடம் கிசுகிசுப்பான மெல்லிய குரலில் பேசி அதற்கு அந்த நாய் எதிர்வினையாற்றியதை பதிவு செய்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில் "உங்கள் நாய்க்கு விருப்பமான வார்த்தையை கிசுகிசுத்து அவற்றின் எதிர்வினைகளைப் பதிவுசெய்க" (whisper your dog's favorite word and record their reaction) என்ற கேப்ஷனுடன் தொடங்குகிறது. வீடியோவை பதிவு செய்யும் குரல் ஒருவருடன் இந்த வீடியோ தொடங்குகிறது. வீடியோவானது ஒரு கருப்பு நாய் ஒரு மனிதனின் கைக்குள் தூங்குவதைக் காட்டுகிறது. வீடியோவை சுவாரஸ்யமாக்க பின்னணியில் ஒரு இசை முதலில் ஒலிக்கின்றது. பின்னணி இசை லேசாக குறையும் போது அந்த மனிதன் “வாக்கீஸ்” (walkies) என்ற வார்த்தையை கிசுகிசுக்கிறார். walkies என்பது நாயை ஒரு நடை பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் செயல். 
View this post on Instagram

 

A post shared by Miguel Gutierrez (@nomadbarber)

வாக்கிங் போலாமா என்ற அர்த்தமுடைய walkies என்ற அந்த வார்த்தையை கேட்டதுமே தூங்கி கொண்டிருந்த நாய் மெதுவாக விழித்து சட்டென்று கண்களையும், காதுகளையும் விரித்து பார்க்கிறது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவை பார்த்து நாய் காட்டிய எதிர்வினையால் பலரும் ஆச்சரியப்பட்டனர். உறக்கத்திலும் கூட உரிமையாளரின் கிசுகிசு குரல் கேட்டு நாய் வெளிப்படுத்திய எதிர்வினையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர் மற்றும் அதன் மீதான தங்கள் அன்பை இதய வடிவிலான எமோஜிக்களை கமெண்டில் பதிவிட்டு வீடியோவை ஷேர் செய்து வைரலாக்கினர். ஆனால் ஒரு நாய் தூங்கி கொண்டிருக்கும் போது அதன் உறக்கத்தை பாதிக்கும் வகையில் கிசுகிசுப்பது சில நேரங்களில் அதற்கு மன மற்றும் உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்த கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 
Published by:Ramprasath H
First published: