Video | இஸ்லாமிய நெறியாளரை பார்க்க மறுத்து கண்களை மூடிக்கொண்ட ‘நாம் இந்து’ நிறுவனர்!

news18
Updated: August 4, 2019, 11:08 AM IST
Video | இஸ்லாமிய நெறியாளரை பார்க்க மறுத்து கண்களை மூடிக்கொண்ட ‘நாம் இந்து’ நிறுவனர்!
நிகழ்ச்சியின் காட்சி
news18
Updated: August 4, 2019, 11:08 AM IST
தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்ற நாம் இந்து அமைப்பின் நிறுவனர் அஜய் கவுதம், இஸ்லாமிய நெறியாளர் ஒருவரை பார்த்து கண்களை மூடிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோவில் இஸ்லாமியர் ஒருவர் டெலிவரி செய்யும் உணவு வேண்டாம் என்று ஒருவர் ட்வீட் செய்ததற்கு, “உணவுக்கு மதமில்லை; உணவே ஒரு மதம்தான்” என்று அந்நிறுவனம் பதிலடி கொடுத்தது. இதனை அடுத்து, இதனை மையப்படுத்தி பல நிகழ்வுகள் தொடர்ந்து நடந்தது.

இது தொடர்பாக நியூஸ் 24 என்ற தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாம் இந்து என்ற அமைப்பின் நிறுவனரான அஜய் கவுதம், இஸ்லாமிய நெறியாளர் ஒருவரை பார்க்க மறுத்து, தனது கைகளால் கண்களை மூடிக்கொண்டார். இதனை பார்த்து சிரித்துக்கொண்டே அந்த நெறியாளர் தனது பணியை தொடர்ந்தார்.



இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. அஜய் கவுதமின் இந்த நிகழ்வுக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அவரை மீண்டும் தொலைக்காட்சி விவாதங்களுக்கு அழைக்கப் போவதில்லை என்று நியூஸ் 24 நிர்வாகம் அறிவித்துள்ளது.
First published: August 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...