ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

மாடிப்படி ஏற வந்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி... மிரள விட்ட மெகா சைஸ் பாம்பு - ஷாக்கிங் வீடியோ

மாடிப்படி ஏற வந்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி... மிரள விட்ட மெகா சைஸ் பாம்பு - ஷாக்கிங் வீடியோ

ஷாக்கிங் வீடியோ

ஷாக்கிங் வீடியோ

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பாம்பு என்று சொன்னாலே அலடியறித்து ஓடுபவர்கள் பலர் உண்டு. அதிலும் பாம்பை நேரடியாக கூட இல்லை புகைப்படங்கள் அல்லது வீடியோவாக பார்த்தாலே கண்களை மூடிக்கொண்டு பீதியில் கதறுபவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பாம்புகள் தொடர்பான வீடியோக்கள் பல இணயைத்தை ஆக்கரமித்து இருப்பதை நாம் பார்த்திருக்கலாம். அதுப்போன்ற ஒரு வீடியோ தான் தற்போது பார்ப்பவர்களை கதிகலங்க வைத்துள்ளது.

  சிறிய சைஸ் பாம்புகள் என்றால் பத்தடி தள்ளி நிப்போம். இங்கு மெகா சைஸ் பாம்பு ஒன்று குடியிருப்பு வீட்டில் அதுவும் மாடிப்படி கைப்பிடி சுவர் சர்வ சதாரணமாக மேலே ஏறிக் கொண்டிருக்கிறது. இந்த வீடியோவை சுஷாந்த நந்தா என்ற ஐ.எஃப்.எஸ் அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் மாடிப்படி ஏற இவருக்கு படிக்கட்டுகள் தேவையில்லை என்றும் பதிவிட்டுள்ளார்.

  அந்த வீடியோவில் மெகா சைஸில் இருக்கும் பாம்பு மாடிப்படி கைச்சுவர் மூலமாக ஊர்ந்து மேலே செல்ல முயற்சிக்கிறது. 32 வினாடிகள் இருக்கும் இந்த வீடியோவை பார்ப்பதற்கே மனதில் பயத்தை ஏற்படுத்துகிறது.

  Also Read : இவ்வளவு பெருசா... மீனவர்களை மிரள வைத்த பிரம்மாண்ட மீன் - வைரல் வீடியோ!

  இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 40,000-க்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்த்து உள்ளனர். பல லைக்ஸ்களை அள்ளி உள்ள இந்த வீடியோ கலவையான கமெண்ட்களை பெற்று வருகிறது. பலர் பீதியில் ஒரு நிமிடம் கலங்கி விட்டோம், இந்த வீடியோவை எடுத்தவருக்கு மனபலம் அதிகம் உள்ளது என்று கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Trends, Viral