கடல்வாழ் உயிரினங்கள் நிகழ்த்தும் அழகிய விஷயங்கள் என்பவை காண்பதற்கு அரியவனவாக இருக்கும். கடலில் இருக்கும் உயிரினங்களின் வாழ்வியல் என்பது நிலத்தில் இருக்கும் உயிரினங்களிலிருந்து மாறுபட்டு இருக்கும். அவற்றை நாம் காண்பதற்கோ அவற்றை பற்றி தெரிந்துக்கொள்வதற்கான வாய்ப்போ மிக குறைவுதான். அதையும் மீறி சில நம்ப இயலாத அழகிய தருணங்கள் வீடியோவாகவோ அல்லது புகைப்படமாகவோ இணையதளம் மூலம் கிடைப்பதுண்டு. அப்படியொரு நிகழ்வுதான் இப்போது அரங்கேறியுள்ளது.
கலிபோர்னியாவில் உள்ள டனா பாயிண்ட் என்ற பகுதியில் 30 அடிக்கும் அதிகமாக உள்ள சாம்பல் நிற திமிங்கலம் ஒன்று உலாவிக் கொண்டிருந்தது. சுற்றுலா சென்றிருந்த பயணிகள் அந்த திமிங்கலத்தை ஆர்வமுடன் பார்த்து கொண்டிருந்தனர். அப்போது அந்த திமிங்கலம் திடீரென அழகிய குட்டியை ஈன்றுள்ளது. இதனை சற்றும் எதிர்ப்பார்க்காத சுற்றுலாப்பயணிகள் சந்தோஷத்தின் உச்சிக்கே சென்றுள்ளனர்.
அந்த சாம்பல் திமிங்கலம் குட்டியை ஈன்ற பின்னர் அதனை தன் முதுகின் மேல் ஏற்றிக்கொண்டும் அரவணைத்த வண்ணமும் உலாவுகிறது. மேலும் சுற்றுலாப் பயணிகள் இருந்த படகின் அருகே அழைத்து சென்று அவர்களுக்கு காண்பிக்கும் வகையில் தந்து குட்டியை முதுகில் ஏற்றி அரவணைக்கிறது. அந்த வீடியோ காண்பதற்கே மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் அழகாகவும் உள்ளது.
இந்த வீடியோவை பலரும் ஆர்வமாக பார்த்து வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது. வீடியோவில் பார்க்கும் நமக்கே இவ்வளவு மகிழ்ச்சியாகா இருக்கும்போது நேரில் அதனை கண்டவர்கள் நிச்சயம் பூரிப்படைந்திருப்பார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.