• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • சாலை ஓரமாக பாடிய மியூசிக் ஸ்கூல் மாணவரை பாராட்டிய ஹிருத்திக் ரோஷன்!

சாலை ஓரமாக பாடிய மியூசிக் ஸ்கூல் மாணவரை பாராட்டிய ஹிருத்திக் ரோஷன்!

 மியூசிக் ஸ்கூல் மாணவரை பாராட்டிய ஹிருத்திக் ரோஷன்

மியூசிக் ஸ்கூல் மாணவரை பாராட்டிய ஹிருத்திக் ரோஷன்

ஷகீலின் பாடும் திறமையை கண்டு வியந்த இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் இந்த வீடியோவினை ரீட்வீட் செய்தார். உடனே இந்த வீடியோ மேலும் வைரலாகியது.

  • Share this:
‘ஜப் கோய் பாத் பிகாட் ஜெயே’ என்ற இந்தி பாடலை மியூசிக் ஸ்கூல் மாணவர் ஒருவர் பாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

1990 ஆம் ஆண்டு மகேஷ் பட் இயக்கத்தில் வெளியான படம் ‘ஜர்ம்’. இதில் ஹீரோவாக நடித்தவர் வினோத் கண்ணா.இந்த படத்தில் இடப்பெற்றுள்ள ‘ஜப் கோய் பாத் பிகத் ஜெயே' பாடல் அன்று முதல் இன்று வரை பட்டி தொட்டி எங்கும் பட்டை கிளப்பி வருகிறது. இன்று வரையிலும் யாராலும் மறக்க முடியாத பாடலாக இப்பாடல் இருந்து வருகிறது.

‘ஜப் கோய் பாத்’ என்ற இந்த பாடலை மியூசிக் ஸ்கூல் மாணவர் ஒருவர் பாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஷகீல் என்ற மியூசிக் ஸ்கூல் மாணவர் ஜப் கோய் பாத் பிகத் ஜெயே' என்ற பாடலை சாலையின் ஓரமாக நின்று கிதாரை இசைத்துக் கொண்டு பாடுகிறார் அந்த பாடல் அனைவரையும் மெய் மறக்கச் செய்கிறது. பாடலின் முடிவில் ஒரு விளம்பர பலகையை காட்டுகிறார்கள்.

அதில் தான் ஒரு மியூசிக் ஸ்கூல் மாணவர். என்னால் மியூசிக் ஸ்கூல் கல்வி கட்டணத்தை கட்ட முடியவில்லை. அதற்கு தாங்கள் அனைவரும் உதவ வேண்டும். கீழே உள்ள தொலைபேசி எண்ணின் மூலமாக எனக்கு பணம் அனுப்பலாம். கூகுள் பே, போன் பே வசதியும் இருக்கிறது என்று எழுதப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை அன்கிட் என்பவர் ட்விட்டரில் பகிர்ந்தார். இந்த வீடியோவை பார்த்த குணால் கபூர் இந்த இளைஞருக்கு அனைவரும் உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். ‘இசைத்து கொண்டே பாட்டு பாடும் இந்த இளைஞனின் திறமை வியக்க வைக்கிறது. இணையத்தின் மூலமாக பணம் செலுத்தும் வசதி அனைத்து இடங்களிலும் பரவியுள்ளது. இதுதான் டெக்னாலஜியின் சக்தியா என குறிப்பிட்டு ட்விட்டரில் இந்த வீடியோ ஷேர் செய்யப்பட்டிருந்தது.

Also read... 11  ஆண்டுகள் சிறையில் இருந்து திரும்பிய அப்பா - கட்டியணைத்து கதறிய மகன்!

ஷகீலின் பாடும் திறமையை கண்டு வியந்த இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் இந்த வீடியோவினை ரீட்வீட் செய்தார். உடனே இந்த வீடியோ மேலும் வைரலாகியது. இதனால் ஷகீலுக்கு அனைத்து இடங்களில் இருந்தும் பண உதவிகள் வந்தது. இவ்வளவு பணம் வரும் என்று நினைத்து பார்க்காத ஷகீல், மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனார். அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஷகீல், ‘என்னுடைய வாழ்க்கையை மாற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.



என்னை ஊக்கப்படுத்தி, ட்விட்டரில் வீடியோவை பகிர்ந்த ‘அன்கிட்’ அவர்களுக்கு நன்றியை தெரிவிக்கிறேன். உங்கள் அனைவரின் அன்பினால் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். நான் நன்றாக பாடுவேன் என்று என்னுடைய குடும்பம்,உறவினர்கள்,நண்பர்கள் ஆகிய யாருக்கும் தெரியாது. இப்போதுதான் அனைவருக்கும் தெரியும். என்னை பாராட்டிய குணால் கபூர் மற்றும் ஹ்ரித்திக் ரோஷன் ஆகியோருக்கு நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்’ என்று ஷகீல் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: