Viral Video : கொசுவை கொல்வது எப்படி? எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க.. இணையத்தில் வைரலாகும் வீடியோ

கொசுவை கொல்வது எப்படி?

கையில் அமர்ந்து ரத்தத்தை சைலண்டாக உறிஞ்சும் கொசுவினை நாசுக்காக பிடித்து பூச்சி உண்ணும் தாவரத்தில் போட்டு விடுகின்றனர். பின்னர் வெளியில் வரமுடியாமல் கொசு மூச்சி திணறி இருக்கின்றது.

  • Share this:
    கொசுவை கொல்வது எப்படி? இந்த தலைப்பை பார்த்தவுடன் உங்கள் நினைவிற்கு வருவது நடிகர் வடிவேலுவின் மூட்டை பூச்சி காமெடி தான் நினைவிற்கு வந்திருக்கும்.மூட்டை பூச்சியை கொள்ளும் நவீன மிஷின் என மைக் போட்டு விற்பார் வடிவேலு. மூட்டை பூச்சி கொல்லும் நவீன இயந்திரம் என்று சொல்லி உரலை விற்பனை செய்வார்.

    இதன் விலை ரூ.100 என்றும் கூறியிருப்பார். இந்த காட்சியில் மூட்டை பூச்சியை பிடித்து உரலில் போட்டு நங்கு நக்கடி நங்கு நக்கடி என்று வடிவேலு கொல்ல வேண்டும் என்று சிங்கமுத்துவிடம் செல்லூர் . இந்த காமெடியை பார்த்து அனைவருக்கும் சிரிப்பு வரும். இதற்கு இணையாக தற்போது இணையத்தில் கொசுவை கொள்ளும் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.

    இந்த வீடியோவில் கையில் அமர்ந்து ரத்தத்தை சைலண்டாக உறிஞ்சும் கொசுவினை நாசுக்காக பிடித்து பூச்சி உண்ணும் தாவரத்தில் போட்டு விடுகின்றனர். பின்னர் வெளியில் வரமுடியாமல் கொசு மூச்சி திணறி இருக்கின்றது. இந்த டீலிங்கிங் ரொம்ப நல்லா இருக்கு என இணையத்தில் பலரும் கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.



    வில் பொறி (Venus Flytrap, Dionaea muscipula) என்பது வட அமெரிக்காவில் உள்ள பூச்சி உண்ணும் தாவரம் ஆகும். இது திரோசிரேசியீ என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. இச்செடி ஈரமான நீர்த்தேக்கப் பகுதிகளில் வளரும். இதன் இலைகள் கொத்தாக தலையை ஒட்டியோ சிறிது மேலெழுந்தவாறோ ரோஜாப்பூவின் இதழடுக்கு போல இருக்கும்.



    ஏதாவது ஒரு பூச்சி இதன் வண்ணத்தில் கவரப்பட்டு இலையின் மீது ஊர்ந்து செல்லும் போது இதன் உணர்ச்சியுள்ள முடியில் (Trigger) மேல் பட்டால் அந்தக் கணத்திலேயே இதன் இலையின் இரண்டு பகுதிகளும் மின்சாரம் பாய்ச்சியது போல மூடிக் கொள்ளும். இதை வில்பொறி அமைப்பு (Venus fly trap) என்று அழைப்பர். இது 1/5 வினாடிகளில் நடக்கிறது. பூச்சி ஒரு சிறு சிறையில் அடைக்கப்பட்டு விடும். இலையின் விளிம்பில் உள்ள முள் போன்ற பற்கள் ஒன்றோடு ஒன்று கவ்வி பூச்சியை இறுக்கிப் பிடித்துக்கொள்ளும். மேலும் மெல்ல மெல்ல பூச்சியை இறுக்கிக் கொண்டே போகும். இந்த இறுக்கத்தில் பல பூச்சிகள் இறந்துவிடும்.



    இத்தாவரங்களின் இலைகளில் செரிமான சுரப்பிகளால் சுரக்கப்படும் செரிமான நீர் பூச்சியை மெதுவாக சீரணிக்கிறது. பூச்சியின் உடல் செரிமானமான பிறகே இலை திறந்துகொள்ளும். இதற்கு சுமார் 5 முதல் 10 நாட்கள் ஆகும்.



    அல்லது பூச்சி முழுவதும் சீரணமாகும் வரை மூடியே இருக்கும். செரிக்காத பூச்சியின் பகுதிகள் இலை திறக்கும்போது கீழே விழுந்துவிடும். ஒரு இலை இரண்டு அல்லது மிகவும் அதிகமாக 3 முறை மட்டுமே பூச்சியைப் பிடிக்கிறாது. மூன்றாவது முறை பூச்சி பிடிக்குமானால் அந்த இலை மூடியே இருக்கும். மீண்டும் அது திறப்பதே இல்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: