• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • 7,500 காயின்களை பயன்படுத்தி 9 மணி நேரத்தில் கிச்சனை மாடர்னாக்கிய பெண் - பாராட்டும் நெட்டிசன்கள்!

7,500 காயின்களை பயன்படுத்தி 9 மணி நேரத்தில் கிச்சனை மாடர்னாக்கிய பெண் - பாராட்டும் நெட்டிசன்கள்!

கிச்சனை மாடர்னாக்கிய பெண்

கிச்சனை மாடர்னாக்கிய பெண்

இங்கிலாந்தின் பர்ன்லி என்ற பகுதியில் வசித்து வரும் 49 வயது பெண்ணான அழகு நிபுணர் ஒருவர் லாக்டவுனில் தனக்கு கிடைத்த ஓய்வு நேரத்தை பயன்படுத்திக் கொண்டு, தனது அழுதுவடிந்த பழைய மந்தமான கிச்சனை புது பொலிவுடன் மாடர்ன் லுக்கில் தானே மாற்றியமைத்து அசத்தி உள்ளார்.

  • Share this:
கொரோனா இரண்டாம் அலை காரணமாக இந்தியாவை போல உலகின் பல நாடுகளின் இயல்பு வாழ்க்கை இடையில் முடங்கியது. தொற்றின் தீவிரம் பொறுத்து வைரஸ் பரவல் சங்கிலியை உடைக்க சில நாடுகள் லாக்டவுனை மீண்டும் அமல்படுத்தி உள்ளன. கோவிட்-19 காரணமாக உலகெங்கிலும் போடப்பட்டிருக்கும் லாக்டவுன் மக்களுக்கு சில ஆக்கபூர்வமான வேலைகளில் ஈடுபடுவதற்கு நிறைய நேரம் கொடுத்திருக்கிறது.

இந்த நிலையில் இங்கிலாந்தின் பர்ன்லி என்ற பகுதியில் வசித்து வரும் 49 வயது பெண்ணான அழகு நிபுணர் ஒருவர் லாக்டவுனில் தனக்கு கிடைத்த ஓய்வு நேரத்தை பயன்படுத்திக் கொண்டு, தனது அழுதுவடிந்த பழைய மந்தமான கிச்சனை புது பொலிவுடன் மாடர்ன் லுக்கில் தானே மாற்றியமைத்து அசத்தி உள்ளார். தனது பழைய கிச்சனை மாடர்ன் கிச்சனாக மாற்றியமைக்க தொழில்முறை அலங்கரிப்பாளர்களுக்காக சில நூறு பவுண்டுகள் செலவழிக்காமல், அவர் தனது சொந்த முயற்சியில் கிச்சனை புதுப்பிக்க முடிவு செய்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்காக அழகு கலைஞர் பில்லி ஜோ வெல்ஸ்பி (Billie Jo Welsby) மிகப்பெரிய அளவில் சில்லரை நாணயங்களை சேகரித்து ஆயிரக்கணக்கான 1 பென்ஸ் காயின்களை (pence coins) பயன்படுத்தி சுவர்களை மாற்றியமைத்தார். அதே போல கிச்சனின் இன்ட்டீரியரையும் காயின்களை கொண்டே பொலிவுபடுத்தி உள்ளார். கிச்சன் சுவர்களில் செப்பு நாணயங்களை ஒட்டி புதிய இன்ட்டீரியர் லுக்கிற்கு மாற்றினார் பில்லி ஜோ. மொத்தம் 75 பவுண்டுகள் மட்டுமே செலவழித்து அழகு கலைஞர் பில்லி ஜோ வெல்ஸ்பி இப்படி காயின்களை கொண்டே தனது கிச்சனை, மாடர்ன் கிச்சனாக மாற்றி அசத்தி உள்ளார். மாடர்ன் கிச்சனாக மாற்ற இவர் சுமார் 7500-க்கும் மேற்பட்ட நாணயங்களைப் பயன்படுத்தி உள்ளார்.

Also read... Coronavirus : கொரோனா நோயாளிகள் சாப்பிடவே கூடாத உணவுகள்..! தவறி கூட சாப்பிட்டுவிடாதீர்கள்..!

வெறும் 9 மணி நேரத்திலேயே தனது கிச்சனை மாடர்னாக்கி குடும்பத்தாரை அசர வைத்துள்ளார் பில்லி ஜோ. பில்லி மிக மெல்லிய தெளிவான சிலிகான் அடுக்கைப் பயன்படுத்தி நாணயங்களை சுவர்களில் ஒவ்வொன்றாக ஒட்டியுள்ளார். இது பற்றி கூறி உள்ள பில்லி, 'நான் இதற்கு முன்பு நாணயங்களால் கவர் செய்யப்பட்ட ஒரு சுவரை பார்த்ததில்லை. என் கிச்சனுக்கு ஒரு இன்டஸ்ட்ரீயல் லுக்கை கொடுக்க விரும்பினேன். எனவே இது சரியானதாக இருக்கும் என்று நான் நினைத்தேன்' என்று கூறி உள்ளார். அதனுடன் சேர்த்து கிச்சனை அலங்கரிக்கும் நாணயங்களை தனது வாடிக்கையாளர்களால் பயன்படுத்தியதால் சுவர்கள் ஒரு உணர்ச்சி மதிப்பைக் கொண்டுள்ளன என்று கூறியுள்ளார்.தனது கிச்சனை தானே முயற்சி செய்து மாடர்னாக்கிய பில்லி தனது கைவண்ணத்தில் புதுப்பிக்கப்பட்ட கிச்சனின் ஃபோட்டோக்களை ஃபேஸ்புக் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்தார். அழகு நிபுணர் தொழில் இருந்து கொண்டு மாடர்ன் கிச்சனை தனது முயற்சியால் உருவாக்கி உள்ள பில்லி ஜோ வெல்ஸ்பியை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். ஏராளமான லைக்ஸ்கள் மற்றும் கமெண்ட்ஸ்களை குவித்துள்ளன பில்லியின் மாடர்ன் கிச்சன் ஃபோட்டோக்கள். தன் திறமையால் தன் வீட்டு கிச்சனை தானே புதுப்பித்து கொண்டுள்ள பில்லியின் திறமைகளை பாராட்டிய நெட்டிசன்கள், அவரது கிச்சன் ஒர்க் அற்புதமாகவும், ஆச்சர்யமூட்டுவதாகவும் இருப்பதாக குறிப்பிட்டனர். இன்னும் பலர் பில்லிக்கு துறவி போல பொறுமை அதிகம் என்றும், அவர் செய்துள்ள கிச்சன் ஒர்க் பிரம்மிக்க வைப்பதாகவும் பாராட்டி உள்ளனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: