குழந்தையின் தனியே படியேறும் முயற்சியை தடுத்த புத்திசாலி நாய் - நெட்டிசன்கள் வியப்பு!

வைரல் வீடியோ

மனிதர்களின் சிறந்த தோழன் என்ற உண்மையை நிரூபிக்கும் விதமாக ஏற்கனவே பல வீடியோக்கள் இன்டர்நெட்டில் வைரலாகி உள்ளன. இதனிடையே ஒரு நாய் ஒன்று சிறிய குழந்தையை வீட்டின் படிக்கட்டுகளில் ஏற விடாமல் தடுக்கும் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாக்களில் வைரலாகியுள்ளது.

  • Share this:
    நாய்கள் மக்களுக்கு வெறும் செல்லப் பிராணிகளாக மட்டும் இருப்பதில்லை. அவற்றை வளர்க்கும் பெரும்பாலான குடும்பங்களில் குடும்பத்தின் ஒரு அங்கமாகவே வளர்கின்றன, வாழ்கின்றன. மந்திரிகளுக்கு சிறந்த தோழனாக இருக்கின்றன. மேலும் வளர்ப்பவர்களுக்கு நாய்கள் காட்டும் விசுவாசம் அளவிட முடியாதது. ஆன்லைனில் பல விலங்குகளின் வீடியோக்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கமான ஒன்று. ஆனால் குறிப்பாக நாய்கள் தொடர்பாக சோஷியல் மீடியாக்களில் வலம் வரும் வீடியோக்கள் எப்போதும் நம் மனநிலையை மாற்றி ஒரு நொடியாவது சிரிப்பை வரவழைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    மனிதர்களின் சிறந்த தோழன் என்ற உண்மையை நிரூபிக்கும் விதமாக ஏற்கனவே பல வீடியோக்கள் இன்டர்நெட்டில் வைரலாகி உள்ளன. இதனிடையே ஒரு நாய் ஒன்று சிறிய குழந்தையை வீட்டின் படிக்கட்டுகளில் ஏற விடாமல் தடுக்கும் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாக்களில் வைரலாகியுள்ளது. சமீபத்தில் ட்விட்டரில் Danny Deraney என்ற யூஸர் இது தொடர்பான வீடியோ ஒன்றை ஷேர் செய்து உள்ளார். அந்த கருப்பு கிரேட் டேன் நாய் வீட்டில் பெற்றோர் இல்லாத நிலையில் குறுநடை போடும் குழந்தையை படிக்கட்டுகளில் ஏற விடாமல் பாதுகாக்கிறது. இந்த வீடியோ தான் தற்போது சோஷியல் மீடியாக்களில் தற்போது வைரலாகி வருகிறது. உண்மையில் இந்த வீடியோ கிளிப் முதன் முதலில் @hsearfoss என்ற டிக்டாக் யூஸரால் வெளியிடப்பட்டது.

    இந்த வைரல் வீடியோவில் ஒரு கருப்பு நிற கிரேட் டேன்  ரக நாய் ஒரு படிக்கட்டில் அமர்ந்து சிறிய குழந்தையை மாடி படிகளில் ஏற விடாமல் தொடர்ந்து தடுக்கிறது. அந்த வீடியோவில் இருக்கும் குறிப்பிட்ட நாய் படிக்கட்டின் இரண்டாம் படியில் அமர்ந்திருக்கிறது. மேலும் குழந்தை மாடி படிகளில் ஏறும் தன் முயற்சியை கைவிட்டு தரையில் மீண்டும் தவழ்ந்து செல்லும் வரை அந்த நாயானது தொடர்ந்து குழந்தையை ஊக்கப்படுத்துகிறது. குழந்தை ஏறிவிடாதபடி இரண்டாவது படிக்கட்டின் குறுக்கே படுத்து கொண்ட அந்த நாய் தனது இரு முன்னங்காலால் குழந்தை படிக்கட்டில் ஏறும் முயற்சியை தொடர்ந்து தடுக்கிறது.

     

    ALSO READ: கோடை வெப்பத்தை சமாளிக்க தர்பூசணியை சுவைக்கும் நீர் யானைகள் - வைரல் வீடியோ

    இரண்டாவது படிக்கட்டில் அமர்ந்திருந்தாலும் தனது இரு பின்னங்கால்களையும் சப்போட்டிற்காக தரையில் வைத்திருக்கிறது. அந்த குழந்தை முதல் மற்றும் இரண்டாவது படிக்கட்டு என மாறி மாறி கைகளை வைத்து என்ற முயற்சித்த போதும் கூட நாய் குழந்தை படிக்கட்டுகளில் ஏறிவிட கூடாது என்ற எண்ணத்தில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டது.



    ஒரு கட்டத்தில் சோர்ந்து போன குழந்தை சரி இனி நம்மால் நாயை மீறி படிக்கட்டுகளில் ஏற முடியாது என்பதை உணர்ந்து கொண்டு டக்கென்று தரையில் உட்கார்ந்து தவழ்ந்து செல்ல துவங்கிவிட்டது. குழந்தை தவழ துவங்கிய அடுத்த நொடியே படிக்கட்டில் படுத்திருந்த அந்த நாயும் சட்டென்று எழுந்து தவழ்ந்து செல்லும் குழந்தையுடன் சேர்ந்து கம்பீரமாக நடந்து சென்றது. படிக்கட்டில் ஏறினால் குழந்தை கீழே விழும் அபாயம் இருப்பதை உணர்ந்து அதை காப்பாற்றும் வகையில் சமயோஜிதமாக புத்தி கூர்மையுடன் செயல்பட்ட நாயை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். நாயின் பாதுகாப்பு உள்ளுணர்வை வெகுவாக பாராட்டியுள்ள நெட்டிசன்கள் அதன் புத்திசாலித்தனம் மற்றும் அக்கறை குறித்தும் பேசி வியந்து வருகின்றனர்.
    Published by:Tamilmalar Natarajan
    First published: