Home /News /trend /

ஒரு நிமிடத்தில் இந்த ஓவியத்தில் எத்தனை பெண்கள் முகம் உள்ளது என்று கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ்

ஒரு நிமிடத்தில் இந்த ஓவியத்தில் எத்தனை பெண்கள் முகம் உள்ளது என்று கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ்

ஆப்டிகல் புகைப்படம்

ஆப்டிகல் புகைப்படம்

Optical Illusion | ஆப்டிக்கல் இல்யூஷன் என்பது கண்ணால் காண்பது பொய் என முன்னோர்கள் சொன்னதை நிரூபிப்பது போன்றது.

    ஆப்டிக்கல் இல்யூஷன் ரசிகர்களுக்கு இன்று மிகவும் சுவாரஸ்யமான ஒரு விஷயத்தைக் கொண்டு வந்துள்ளோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள ஓவியத்தை பார்த்து, அதில் ஒரு நிமிடத்திற்குள் எத்தனை பெண் உருவங்களை காண முடிகிறது என சோதித்து பாருங்கள்...

    ஆப்டிக்கல் இல்யூஷன் என்பது கண்ணால் காண்பது பொய் என முன்னோர்கள் சொன்னதை நிரூபிப்பது போன்றது. ஏனென்றால் ஆப்டிக்கல் இல்யூஷனுக்காக வரையப்பட்ட ஓவியம் அல்லது போட்டோவை நீங்கள் மேலோட்டமாக பார்த்தால் ஒன்றும், நன்றாக உற்று நோக்கி, மூளையை கசக்கி பிழிந்தால் அதனுள் பல உருவங்களும் மறைந்திருப்பதை காணலாம். சில சமயங்களில் ஓவியங்களுக்குள் மறைந்திருக்கும் விஷயத்தை கண்டுபிடிக்க முடியாமல் இணையதளவாசிகள் திணறுவதும் உண்டு.

    அப்படி உக்ரேனைச் சேர்ந்த கலைஞர் ஒலெக் ஷுப்லியாக் என்பவர் வரைந்த ஆப்டிக்கல் இல்யூஷன் ஓவியம் ஒன்று சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. உங்கள் பார்வை திறனின் ஒவ்வொரு சதவீதத்திற்கும் சவால் விடும் வகையிலான ஓவியத்தை அந்த கலைஞர் வரைந்துள்ளார். கீழே கொடுக்கப்பட்டுள்ள ஓவியத்தை மேலோட்டமாக பார்த்தால் இளம் பெண் ஒருவர் நின்று கொண்டிருப்பது மட்டுமே தெரியும். ஆனால் அந்த ஓவியத்திற்குள் ஒரு பெண் மட்டுமல்ல பல உருவங்கள் மறைந்துள்ளன. ஒரு நிமிடத்திற்குள் அந்த ஓவியத்திற்குள் மறைந்துள்ள எத்தனை பெண் உருவங்களை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறது என பார்க்கலாம்...

    நீங்கள் எளிதாக கண்டுபிடிக்க ஒரே ஒரு குறிப்பை மட்டும் தருகிறோம். இந்தப் படத்தில் ஒன்று, இரண்டு, மூன்று அல்ல, நான்கு பெண்கள் மறைந்திருக்கிறார்கள். ஒரு நிமிடத்தில் அனைத்தையும் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். முடியவில்லையா? சரி ஒவ்வொரு பெண்ணும் ஓவியத்தில் எங்கு மறைந்துள்ளார் என்பதை விரிவாக காணலாம்.



    முதலாவது பெண்:

    முதல் பெண் நீங்கள் பார்க்கும் ஓவியம், அதில் அவர் தொலைபேசியை வைத்து பேசிக்கொண்டிருப்பது போல் உள்ளது. இளம் பெண்ணான அவளது தலைமுடி மற்றும் ஹேர் ஸ்டைல் சோசியல் மீடியாவில் பலரையும் கவர்ந்திழுத்துள்ளதாக கமெண்ட்கள் குவிகிறது.

    இரண்டாவது பெண்:

    நன்றாக உற்று கவனித்தால், அந்த இளம் பெண்ணின் காதுகளுக்கு அருகில் உள்ள உள்ளங்கைக்குள் ஒரு பெண்ணின் முகம் தெரிவதை நீங்கள் பார்க்கலாம். இன்னும் இரண்டு பெண்களை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

    குறிப்பாக 3வது பெண்ணை கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால், வெற்றி பெற்ற 40% பேரில் நீங்களும் இடம் பிடித்துவிட்டீர்கள் என்று அர்த்தம். இந்த ஓவியம் அல்லது படத்தைப் பார்த்தவர்களில் 60% பேர் மூன்றாவது மற்றும் நான்காவது பெண்ணைக் கண்டுபிடிப்பதில் தோல்வியடைந்துள்ளனர்.

    மூன்றாவது பெண்:

    இரண்டாவது பெண்ணிடம் இருந்து சற்றே இறங்கி வந்தீர்கள் என்றால், அந்த இளம் பெண்ணின் முழங்கை மூக்கு போல் வளைந்திருப்பதை காணலாம். அதனருகிலேயே ஒரு ஜோடி கண்கள் மற்றும் இதழ்களை பார்க்க முடிகிறதா?. அப்படி என்றால் நீங்கள் மூன்றாவது பெண்ணை கண்டுபிடித்துவிட்டீர்கள் என்று அர்த்தம். இதனால் தான் 60 சதவீதம் பேரால் மூன்றாவது பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை.

    நான்காவது பெண்:

    அழகான முடி கொண்ட முதல் பெண்ணின் வயிற்றை உற்று நோக்குங்கள். அதில் அழகிய இதழ்கள் தெரிகிறதா?. அந்த இடத்தில் தான் நான்காவது பெண் மறைந்திருக்கிறாள். முதல் பெண்ணின் வயிற்றுக்கு கீழே நான்காவது பெண்ணின் உருவத்தை காணலாம்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Optical Illusion

    அடுத்த செய்தி