Home /News /trend /

கோல் அடித்த மகிழ்ச்சியில் கட்டிப்பிடித்து கொண்ட கால்பந்து வீரர்கள்.! நெட்டிசன்களை குழப்பும் வைரல் போட்டோ!

கோல் அடித்த மகிழ்ச்சியில் கட்டிப்பிடித்து கொண்ட கால்பந்து வீரர்கள்.! நெட்டிசன்களை குழப்பும் வைரல் போட்டோ!

Optical Illusion Image

Optical Illusion Image

Optical Illusion | ஒரு போட்டியின் போது கோல் அடித்த பிறகு கொண்டாட்டத்தில் ஈடுபடும் இந்த 2 கால்பந்து வீரர்களின் போட்டோவில் அடங்கி இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

நம் கண்கள் அல்லது மூளையை ஏமாற்றும் ஒன்றாக இருக்கின்றன ஆப்டிகல் இல்யூஷன்கள். உண்மையில் எப்போதும் நாம் பார்ப்பதை விட வித்தியாசமாக இருக்கும். முதல் பார்வையில் ஒரு விஷயமாக தெரியும் ஆப்டிகல் இல்யூஷன்களை கூர்ந்து பார்த்தால் வேறு பல விஷயங்கள் புலப்படும்.

சோஷியல் மீடியாக்களில் கடந்த சில நாள்களாக ஆப்டிகல் இல்யூஷன் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன. அது மட்டுமன்றி பார்ப்பவர்களின் கண்களையும் ஏமாற்றி விடுகின்றன சில ஆப்டிகல் இல்யூஷன்கள். சமயத்தில் மண்டையை காய வைக்கும் வகையிலும் சில வைரலாகி வருகின்றன. கடைசி வரையில் அவற்றில் மறைந்திருக்கும் எழுத்துக்களையோ அல்லது உருவங்களையோ கண்டறிய முடியாமல் பலரும் திணறும் நிகழ்வுகளும் உண்டு. இன்று இங்கே நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் நம் கண்களை ஏமாற்றி மூளையை குழப்பும் வகையை சேர்ந்தது தான்.

கேமராவில் ஒரு போட்டோவை கிளிக் செய்யும் போது நேரம் மிக முக்கியமானது. கீழே நீங்கள் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் இமேஜ், நேரம் தவறிய கிளிக்கின் விளைவாக ஆப்டிகல் இல்யூஷன் பிரிவில் சேர்ந்து உள்ளது.



மேலே உள்ள இமேஜே பார்த்து விட்டீர்களா.! ஃப்ரேமில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா..? கால்பந்து வீரர்கள் ஒருவரையொருவர் கட்டிப்பிடிக்கும் இந்த ஆப்டிகல் இல்யூஷன் போட்டோ நெட்டிசன்களை குழப்பி வருகிறது.

Also Read : வியக்க வைக்கும் வைரல் ஆப்டிக்கல் இல்யூஷன் டெஸ்ட்..

டைம் மிஸ் ஆகி இருந்தாலும் இதை கிளிக் செய்தவர் ஒரு மேதை தான்..!.ஒரு போட்டியின் போது கோல் அடித்த பிறகு கொண்டாட்டத்தில் ஈடுபடும் இந்த 2 கால்பந்து வீரர்களின் போட்டோவில் அடங்கி இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. இந்த போட்டோ 2 கால்பந்து வீரர்கள் ஒருவரையொருவர் கட்டிப்பிடிப்பதைக் காட்டுகிறது. என்றாலும் போட்டோகிராஃபர் இதை கிளிக் செய்த விதத்தில், ஃப்ரேமில் 2 தலைகளுக்கு பதிலாக 3 தலைகள் இருப்பது போல் தெரிகிறது.

Also Read : 125 அடி உயர ரோலர் கோஸ்டரில் பழுது - 45 நிமிடங்கள் தலைகீழாய் தொங்கிய சாகச விரும்பிகள்.!

2 பேர் மட்டுமே இருக்கும் இந்த போட்டோவில் எப்படி 3 தலைகள் தெரிகிறது என்பதை யூகிக்க முடியாமல் பல சோஷியல் மீடியா யூஸர்கள் தங்கள் தலையை சொறிந்தனர். அதே போல முதல் முறை இந்த போட்டோவை பார்க்கும் எவருக்கும் ஒரு கால்பந்து வீரர் தனது சக வீரரை கைகைளை பின்நோக்கி எடுத்து சென்று கட்டிப்பிடிப்பதை போல் தெரியும். எனினும் கைகளை எப்படி இப்படி பின்னோக்கி வளைத்து தனது சக வீரரை கட்டிப்பிடிக்க முடியும் என்று பலரும் ஆச்சரியப்பட்டனர்.

Also Read : இதில் எத்தனை வார்த்தைகள் மறைந்திருக்கிறது ? கண்டுப்பிடிச்சிட்டா புத்திசாலி தான்..

ஆனால் இதை ஆப்டிகல் இல்யூஷன் என்பதை உணர்ந்த பல யூஸர்கள் போட்டோவை உற்று பார்த்து உண்மையில் அதில் இருப்பது 2 பேரல்ல, 3 பேர் என்ற முடிவுக்கு வந்தனர். ஆம் இந்த போட்டோவில் இருப்பது உண்மையில் 3 பேர் தான். இப்போது மேலே உள்ள போட்டோவை கூர்ந்து கவனியுங்கள். 2 கால்பந்து வீரர்களும் ஒருவரையொருவர் கட்டிப்பிடிக்கும் போது, மூன்றாவதாக அதே அணியை சேந்த மற்றொரு வீரர் அவர்களுக்குப் அருகில் இருக்கிறார். இந்த மூன்றாமவர் கட்டிப்பிடித்து கொள்ளும் 2 வீரர்களுக்கு இடையில் நின்ற போது, கேமராமேன் படத்தைக் கிளிக் செய்ததால் இந்த குறிப்பிட்ட போட்டோ ஆப்டிகல் இல்யூஷனாக மாறி போனது.
Published by:Selvi M
First published:

Tags: Optical Illusion, Trending

அடுத்த செய்தி