Home /News /trend /

இந்த படத்தில் உங்களுக்கு எத்தனை குதிரைகள் தெரிகிறது ?

இந்த படத்தில் உங்களுக்கு எத்தனை குதிரைகள் தெரிகிறது ?

காட்சி படம்

காட்சி படம்

Optical Illusion : உங்கள் கண்களுக்கு எத்தனை குதிரைகள் தெரிகிறது?.

ஆப்டிக்கல் இல்யூஷன் என்பது நம்ப முடியாத ஒளியியல் மாயை ஆகும். நம் கண்ணையே ஏமாற்றக்கூடிய வகையில் ஓவியம் அல்லது வீடியோக்களில் மறைத்திருக்கும் புதிர். சோசியல் மீடியாக்களில் அவ்வப்போது இதுபோன்ற ஆப்டிக்கல் இல்யூஷன்கள் வைரலாவது உண்டு. ஆப்டிகல் இல்யூஷன்’ குழப்பமானவை. அவற்றில் சில நமது மூளையின் எந்தப் பகுதி ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை வெளிப்படுத்துகின்றன, சில ஆளுமைப் பண்புகளை வெளிப்படுத்துகின்றன.

ஒரு படத்தை நாம் மேலோட்டமாக பார்க்கும் போது ஒன்று, அதனை நன்றாக உற்று நோக்கினால் அதனுள் பல உருவங்களும் மறைத்திருப்பது போல் ஆப்டிக்கல் இல்யூஷன் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆப்டிக்கல் இல்யூஷன்களை பொறுத்தவரை சில உங்களுடைய குணநலன்கள் மற்றும் பண்புகளை அறிய உதவுபவையாக இருக்கும், ஆனால் பலவகையானவை இதில் எத்தனை உருவங்கள், முகங்கள், விலங்குகள் மறைந்துள்ளன என்பதை சரியாக சொல்லுங்கள் பார்க்கலாம் என்பது போன்ற சவால் வகையாக தான் இருக்கும்.

நாம் இப்போது அப்படிப்பட்ட சவால் ஒன்றைத் தான் சந்திக்கப்போகிறோம். நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் என்விரோன்மெண்டல் ஹெல்த் சர்வீசஸ்' (NIEHS) இணையதளத்தில், ஒரு பனிப்பாறையில் ஒன்றாக நிற்கும் ஒரே மாதிரி தோலுடைய குதிரைகளின் பெவ் டூலிட்டின் உருவப்படத்தை பற்றி பார்க்கப்போகிறோம் . கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் எத்தனை குதிரைகள் உள்ளன என்பதை பார்த்த சில நிமிடங்களிலேயே உங்களால் கண்டறிய முடியுமா?

நீங்கள் எத்தனை குதிரைகளைப் பார்க்கிறீர்கள்? மூன்று? ஐந்து? ஏழு?

தேசிய சுற்றுச்சூழல் சுகாதார அறிவியல் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த படம் நெட்டிசன்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த படத்தில் சில பகுதி குதிரைகள் (குதிரையின் பின் மற்றும் முன் பகுதிகள் போன்றவை) உட்பட ஏழு குதிரைகள் இருப்பதாக அது கூறுகிறது. ஆனால் இந்த படத்தை வரைத்தவர் 5 குதிரைகள் தான் இருப்பதாக சொல்லி, காண்போர் கண்களை நம்ப வைக்க பார்க்கிறார்.

also read  : இந்த படத்தில் மறைந்துள்ள விலங்கு எதுவென்று கண்டுபிடியுங்க பார்க்கலாம்..

அதாவது நான்கு வெள்ளை மற்றும் பழுப்பு நிற குதிரைகள் மற்றும் ஒரு குட்டி என மொத்தம் 5 குதிரைகள் மட்டுமே இருப்பதாக சொல்லப்பட்டுகிறது. அனால் விஞ்ஞானிகள் டூலிட்டின் உருவத்தில் உண்மையில் ஏழு குதிரைகள் உள்ளன, அதன் படைப்பாளியின் கூற்றுப்படி ஐந்து குதிரைகள் இல்லை என்பதை உறுதியாக நம்புகின்றனர். இப்போது சொல்லுங்கள் உங்கள் கண்களுக்கு எத்தனை குதிரைகள் தெரிகிறது?.



இன்னும் குதிரைகள் அனைத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லையா? கவலையை விடுங்கள், விடையை நாங்களே வெளிப்படுத்துகிறோம்.

இடதுபுறம் ஒரு குதியை வெளிப்புறமாக பார்க்கிறது. நடுவில் நான்கு குதிரைகளின் முகங்கள் நெருக்கமாக அமைந்துள்ளன. அந்த குரூப்பில் ஒரு குதிரையின் பழுப்பு நிற மூக்கு (இடமிருந்து இரண்டாவது) கீழே குனிந்திருக்கும் குதிரையின் முகத்தின் வலது பக்கத்தில் உள்ளது. வலதுபுறம் ஒரு சிறிய குதிரை பக்கவாட்டாக நிற்கிறது, அதற்கு மேலே ஏழாவது பின்புறம் உள்ளது.

இந்த படத்தை மேலோட்டமாக பார்க்கும் பலருக்கும் 5 குதிரைகள் தான் தெரியும். இன்னும் நீங்கள் 7 குதிரைகளை பார்க்கவில்லை என்றால், படத்தில் காட்டப்பட்டுள்ளது 5 குதிரைகள் தான் என நம்பியிருப்பீர்கள். அப்படி நம்பும் பலரில் நீங்களும் ஒருவராக இருந்திருப்பீர்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Trending, Viral

அடுத்த செய்தி