Home /News /trend /

டாடா நிறுவனத்தை காப்பாற்றிய பெண்மணி!

டாடா நிறுவனத்தை காப்பாற்றிய பெண்மணி!

மெஹர்பாய் டாடா

மெஹர்பாய் டாடா

விலைமதிப்பான ஜூப்லி வைரத்ததை மெஹர்பாய் பிளாட்டின செயினில் பொருத்தி, மிகவும் முக்கியமான நிகழ்வுகளில் மட்டுமே அணிந்து வந்துள்ளார்

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
  இந்தியாவின் பாரம்பரிய மிக்க மற்றும் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களுள் ஒன்றான டாடா ஸ்டீல் நிறுவனம் சிக்கலில் இருந்தபோது தோரப்ஜி டாடாவின் மனைவியான மெஹர்பாய் டாடா, தான் அணிந்திருந்த கோஹினூர் வைரத்தை விட 2 மடங்கு விலை மதிப்பான ஜூப்லி வைரத்தை அடகு வைத்து காப்பாற்றிய தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஹர்ஸ்பட் என்பவர் டாடா ஸ்டோரீஸ் (Tatastories) என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். அதில், டாடா ஸ்டீல் நிறுவனம் காப்பாற்றப்பட்டது முதல் மெஹர்பாய் சமூகத்துக்கு ஆற்றிய பங்களிப்பு மற்றும் டாடா நிறுவனத்தின் தொழிலாளர் நலன் உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

  ஜாம்ஜெட்ஜியின் மூத்த மகனான தோரப்ஜி டாட்டா, டாட்டா ஸ்டீல் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். நாட்டின் மிகப்பெரிய இரும்பு தயாரிப்பு தொழிற்சாலையாக டாட்டா அப்போதும் இருந்துள்ளது. வருமானம் உச்சத்தில் இருந்த 1900 ஆம் ஆண்டுகளில் தோரப்ஜி டாட்டா, தனது மனைவியான மெஹர்பாய்க்கு ஒரு லட்சம் பவுண்டு கொடுத்து 245.35 காரட் ஜூப்ளி வைரத்தை வாங்கிக் கொடுத்துள்ளார். இந்த வைரத்தின் அளவானது கோஹினூர் வைரத்தின் அளவான 105.6 காரட் அளவை விட இருமடங்கு பெரியது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த விலைமதிப்பான வைரத்ததை மெஹர்பாய் பிளாட்டின செயினில் பொருத்தி, மிகவும் முக்கியமான நிகழ்வுகளில் மட்டுமே அணிந்து வந்துள்ளார். 1924 ஆம் ஆண்டுகளில் டாடா நிறுவனத்துக்கு தொழில் ரீதியாக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு முறையாக ஊதியம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டபோது தோரப்ஜி டாட்டா மற்றும் மெஹர்பாய் இணைந்து தாங்கள் வைத்திருந்த சொத்துகள், கோஹினூர் வைரத்தை விட விலைமதிப்பான ஜூப்ளி வைரம் உள்ளிட்டவைகளை இம்பீரியல் வங்கிகளில் அடமானம் வைத்துள்ளனர். இதன்மூலம் திரட்டப்பட்ட நிதியில் ஊழியர்களுக்கு தேவையான ஊதியத்தை கொடுத்துள்ளனர்.

  இந்த நேரத்தில் ஒரு ஊழியர் கூட பாதிக்காத வண்ணம் டாடா நிறுவனம் பார்த்துக் கொண்டதாக ஹர்ன்ஸ்பட் குறிப்பிடுகிறார். குறுகிய நாட்களிலேயே மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிய பிறகு, அடகு வைக்கப்பட்ட ஜூப்ளி வைரம் உள்ளிட்ட சொத்துகள் மீண்டும் திருப்பப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்த வைரம் தோரப்ஜி டாட்டா மறைவுக்குப் பிறகு, விற்பனை செய்யப்பட்டு அவரது பெயரிலேயே டிரஸ்ட் தொடங்கியுள்ளதாக டாட்டா நிறுவனம் கூறியுள்ளது.

  Also read... நடுக்கடலில் மீனவர் வலையில் சிக்கிய ஏலியன் மீன் - உறைந்து போன மீனவர்

  தோரப்ஜியின் மனைவியான மெஹர்பாய் ’டாட்டா ஸ்டீல்’ நிறுவனத்தை தொடர்ந்து இயங்குவதற்கு உதவி புரிந்ததுடன் பல்வேறு சமூக சீர்த்திருத்த செயல்களிலும் ஈடுபட்டுள்ளார். குழந்தை திருமணத்துக்கு எதிராக இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கடுமையான பிரச்சாரம் செய்த அவர், அதற்காக 1929 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ’சாரதா சட்டத்தை’ ஆதரித்து இந்திய நகரங்களில் விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் ஏற்படுத்தியுள்ளார்.

  குழந்தைகளுக்கு கல்வி, பெண்களுக்கு வாக்குரிமை, அரசியலில் பெண்களுக்கு சம அதிகாரம் ஆகியவற்றுக்காகவும் அவர் கடுமையாக குரல் கொடுத்து, களத்தில் இறங்கி பணிகளிலும் ஈடுபட்டுள்ளார். தேசிய மகளிர் ஆணைய தலைவராகவும் பதவி வகித்த அவர், பெண்களின் உரிமைக்காக சட்டரீதியான போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளார். சமூகம் சார்ந்து பல்வேறு அறப்பணிகளில் ஈடுபட்ட அவரின் முக்கிய பணிகளையும் ஹர்ன்ஸ்பட் தனது புத்தகத்தில் விளக்கமாக எழுதியுள்ளார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: TATA

  அடுத்த செய்தி