Home /News /trend /

Queen Elizabeth| இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் ஊரடங்கு காலம் – பரபரப்பான தகவல்களுடன் அரசி பற்றிய புத்தகம்!

Queen Elizabeth| இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் ஊரடங்கு காலம் – பரபரப்பான தகவல்களுடன் அரசி பற்றிய புத்தகம்!

 இங்கிலாந்து ராணி

இங்கிலாந்து ராணி

Queen Elizabeth Spend Covid-19 Lockdown | ஏஞ்செலா கெல்லி எழுதிய இந்த புத்தகத்தில் அரசியின் வாழ்வில் நடைபெற்ற மிகவும் எக்ஸ்குளூசிவ் ஆன ஒரு சில விஷயங்கள்.

  உலகம் முழுவதுமே, வயது, பாலினம், எந்த தொழில் செய்கிறார் என்று எந்த பாகுபாடும் இன்றி அனைவரையும் கொரோனா வைரஸ் தீவிரமாக பாதித்துள்ளது. நாட்டை ஆளுபவர்களும் சரி, நாட்டின் குடிமகன்களும் சரி, பணக்காரர்கள் முதல் ஆதரவற்றவர்கள் வரை எல்லாரிடமும் பாதிப்பை ஏற்படுத்தியது கோவிட் 19. பொதுமக்கள் எவ்வளவு சிரமப்பட்டார்கள் என்பது கிட்டத்தட்ட அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் ஒரு சிலர் லாக்டவுனில் எவ்வாறு இருந்திருப்பார்கள் என்பது இப்பொழுது வரை தெரியாத புதிராகபே இருக்கிறது. அதில் முக்கியமான நபர் இங்கிலாந்து ராணி எலிசபெத்.

  இங்கிலாந்து ராணி எலிசபெத் தோன்றினாலும், நடந்தாலும், பேசினாலும், அவர் என்ன ஆடை அணிந்தார், என்ன சாப்பிடுகிறார், இப்போது என்ன செய்கிறார் என்று எல்லாமே தலைப்பு செய்தியாக மாறும். அதேபோல லாக்டவுனில் இங்கிலாந்து அரசி எப்படி இருந்தார் எவ்வாறு செயல்பட்டார் என்பது குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த விவரத்தை ஏஞ்சலா கெல்லி என்பவர் தனது புத்தகத்தில் வெளியிட்டுள்ளார் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது.

  இங்கிலாந்து ராணி எலிசபெத் II, எந்த விஷயம் செய்தாலும் அவரை பற்றி எந்த செய்தி வெளியானாலும். அவருடைய ஒப்புதல் இன்றி வெளி வராது. அந்த வகையில் ‘தி அதர் சைட் ஆஃப் காய்ன்: தி குயின், டிரஸ்ஸர் அண்ட் தி வார் ரூம்’ என்ற புத்தகம் 2019-ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

  அரசியின் வலதுகை என்று அழைக்கப்படும் ஏஞ்சலா கெல்லி என்பவரால் இந்த புத்தகம் 2019 ஆம் ஆண்டு முதல் முதலாக வெளியிடப்பட்டது. தற்போது ஊரடங்கு நேரத்தில் அரசியின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை பற்றிய கூடுதல் தகவல்களுடன் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது.

  யார் இந்த ஏஞ்சலா கெல்லி?

  அரசியின் உதவியாளராக, நம்முடைய பேச்சு வழக்கில் கூறப்படும் வலது கையாக கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் வரை பணிபுரிந்தவர் தான் ஏஞ்சலா கெல்லி. இங்கிலாந்து அரசியின் தனிப்பட்ட வேலைக்கும், அவருடைய ஆடைகள் மற்றும் விலை உயர்ந்த நகைகளையும் கெல்லி தான் நிர்வகித்து வருகிறார்.

  ஏஞ்செலா கெல்லி எழுதிய இந்த புத்தகத்தில் அரசியின் வாழ்வில் நடைபெற்ற மிகவும் எக்ஸ்குளூசிவ் ஆன ஒரு சில விஷயங்கள் இடம் பெறும். கோவிட் 19 வைரஸ் அதிவேகமாக பரவத் தொடங்கிய நேரத்தில், 95 வயதான அரசி பக்கிங்காம் அரண்மனையிலிருந்து வின்சர் மாளிகைக்கு தனது கணவர் பிரின்ஸ் ஃபிலிப்ஸ் உயிருடன் இருக்கும் போது, இடம்பெயர்ந்தார். இவர்களுடன் மிக குறைந்த அளவிலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்கள் வின்சர் மாளிகைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

  இந்த ஊழியர்களின் தலைவராக ஏஞ்சலா கெல்லி செயல்பட்டார். அரசி உடனேயே மாளிகையில் பணிபுரிந்தார். இதைப் பற்றிய விவரங்களை இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி லாக்டவுன் நேரத்தில் அரசியின் வாழ்க்கை எப்படி இருந்தது அவருடைய அனுபவங்கள் பற்றியும் இளவரசர் ஃபிலிப் இறப்பை அவர் எப்படி எதிர்கொண்டார் எப்படி அதிலிருந்து மீண்டார் என்பது குறித்தும் உருக்கமாக எழுதியுள்ளார்.

  Read More : விடாமுயற்சி, தன்னம்பிக்கைக்கு பெயர் பெற்ற நீச்சல் வீரர்.. விபத்தில் கால் முறிந்த பிறகும் 2 கின்னஸ் சாதனை


  HMS bubble என்று கூறப்படும் அரச குடும்பத்தின் தனிப்பட்ட வாழ்க்கை என்பதைப் பற்றி விவரிக்கிறது. ஏஞ்செலா கேலி அரசியின் பர்சனல் அசிஸ்டன்ட் ஆக அவருடைய ஆடை ஆலோசகராகவும், நிபுணராகவும் பணிபுரிந்ததை நினைவு கூர்ந்துள்ளார். அரசிக்கு முடி வெட்டி விடுவது ஆடைகளை தேர்வு செய்து வரை உதவியாக இருந்துள்ளார்.

  இங்கிலாந்து அரசி மற்றும் ராஜ குடும்பத்தை பொறுத்தவரை, அவர்களின் தோற்றம், உடை, அணியும் காலணிகள் ஆகிய அனைத்துமே அதிகமான கவனம் ஈர்க்கும். சிறு பிழை கூட சொல்ல முடியாத அளவுக்கு அவர்களுக்கென்று நேர்த்தியாக பின்பற்ற வேண்டும். அந்த அடிப்படையில் லாக்டவுன் நேரத்திலும் கூட தன்னுடைய அரசு வழக்கத்துக்கு எதிராக மாற்றங்களை மேற்கொள்ளாமல் அரசி பின்பற்றியது ஆச்சரியம் தான்.

  70 ஆண்டு கால அரசாட்சியில் அரசி இதுவரை 3 முறைதான் தன்னுடைய ஹேர்ஸ்டைலை மாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இதுவரை இல்லாத புதிய புகைப்படங்களும் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது . ஊரடங்கு காலத்தில் நாடு பாதுகாப்பாக இருப்பதற்கு எவ்வளவு தூரம் அரசு குடும்பத்தின செயல்பட்டனர் என்பதை பற்றியும் புத்தகம் பேசும்.
  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Trending, Viral

  அடுத்த செய்தி