சிங்கக் கூட்டத்திடம் இருந்து நைசாக தப்பிய நண்டு : வைரலாகும் வீடியோ

சிங்கம்

சிங்க கூட்டங்களிடம் இருந்து நைசாக தப்பிக்கும் ஒரு நண்டின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகியுள்ளது

 • Share this:
  இணையத்தை திறந்தாலே போதும் பல சுவாரஸ்யமான வீடியோக்கள் பார்வையாளர்களின் மனதை கவர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக செல்லப்பிராணிகள், வளர்ப்பு விலங்குகள் உள்ளிட்ட பல உயிரினங்களின் வீடியோ வைரலாகி வருவது வழக்கமாகி விட்டது. நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகள் முதல் யானை, சிங்கம் என அனைத்து விலங்குகளும் செய்யும் சில சிறிய விஷயங்கள் கூட இப்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

  அந்த வகையில் சிங்க கூட்டங்களிடம் இருந்து நைசாக தப்பிக்கும் ஒரு நண்டின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகியுள்ளது. வேட்டையாடும் மிருகத்துடன் நெக் - டு - நெக் சந்தித்த பிறகு நண்டு புத்திசாலித்தனமாக தப்பித்து ஓடியது காண்போரை பிரமிக்க வைத்துள்ளது. மலமாலா பிரைவேட் கேம் ரிசர்வ் என்ற இடத்தில் ரேஞ்சர்களான ருகியோ பாரெட்டோ மற்றும் ராபின் செவெல் ஆகியோரால் இந்த வீடியோ படமாக்கப்பட்டு யூடியூப்பில் பகிரப்பட்டது. சுமார் 2 நிமிடம் 36 விநாடிகள் கொண்ட அந்த வீடியோவில், சிங்கம் ஒன்று மணலில் நடந்து செல்லும் ஒரு நண்டை காண்பதை பார்க்கலாம்.

  பிறகு அந்த சிங்கம் எழுந்து அந்த நண்டை நோக்கி நகர்ந்து செல்கிறது. சிறிது நேரத்திற்குப் பிறகு, மேலும் மூன்று சிங்கங்கள் நண்டை நோக்கி சென்றது. இருப்பினும், கொஞ்சம் கூட அசராத சிறிய நண்டு தைரியமாக அங்கிருந்து தப்பித்து வேட்டையாடும் மிருகங்களிடம் விலகிச் செல்ல முயன்றது. இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்த அந்த நபர், "காட்டில் சிங்கங்களிடம் இருந்து நான்கு அங்குல நண்டு நெக்-டூ-நெக் சந்தித்த போது எடுக்கப்பட்டது." என்று கேப்சன் செய்துள்ளனர்.

  https://youtu.be/YsgD0Q33V-c

  அந்த வீடியோ நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் வீடியோ பகிரப்பட்ட இரண்டு நாட்களில் யூடியூபில் சுமார் 1 லட்சத்து 63 ஆயிரத்து 721 பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும் கமெண்ட் செக்சன்களும் பார்வையாளர்களின் கருத்துக்களால் மூழ்கியது. இது குறித்து யூசர் குறிப்பிட்டுள்ளதாவது, “பெரும்பாலான விலங்குகளின் இதயங்களில் சிங்கங்கள் எவ்வாறு பயத்தைத் தூண்டுகின்றன என்பது நமக்கு தெரியும். ஆனால் இந்த நீர் உயிரினங்கள் அவற்றிடம் இருந்து தப்பிக்க எந்த விதத்திலும் பயப்படுவதில்லை.

  ஹிப்போஸ், முதலைகள், ஆமைகள் வரிசையில் இப்போது நண்டுகளும் இணைந்துள்ளன”. அதேபோல மற்றொரு பயனர் கமெண்ட் செய்திருப்பதாவது, " நண்டு ஹைனாக்களின் குலத்தில் அலைந்து திரிவதற்கு எந்த வழியும் இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளார். பலர் இந்த வீடியோவை மிக ஆச்சரியமாக பார்த்தனர். பூங்கா ரேஞ்சர்களான பாரெட்டோ மற்றும் செவெல் ஆகியோர் சிங்கங்களை கண்டுபிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் சூரிய உதயத்திற்கு முன்னதாகவே முகாமிலிருந்து வெளியேறியதாக கூறினர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அவ்வாறு தேடுதல் பணியில் ஈடுபட்ட போது சிங்கம் ஒன்று ஆற்றங்கரையில் தூங்குவதைக் கண்டார்கள், இருப்பினும், திடீரென்று சிங்கம் எழுந்து எதையோ பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். அது எதோ ஒரு தேளை பார்த்துக்கொண்டிருக்கலாம் என அவர்கள் முதலில் நினைத்தார்கள். ஆனால் அது ஒரு நண்டு என்று பிறகு தான் தெரிந்தது. மாலமாலா பிரைவேட் கேம் ரிசர்வ் என்பது க்ருகர் தேசிய பூங்காவில் உள்ள தென்னாப்பிரிக்காவின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய உயிரியல் பூங்காவாகும். இது 33,000 ஏக்கர் பரப்பளவில் உள்ளது மற்றும் வேட்டையாடும் மிருங்கங்களால் நிறைந்துள்ளது.
  Published by:Karthick S
  First published: