HOW A 9 YEAR OLD BECAME THE HIGHEST PAID YOUTUBER OF 2020 BY REVIEWING TOYS VIN GHTA
யூடியூபில் 220 கோடி ரூபாய் வருமானம் ஈட்டிய 9 வயது சிறுவன்!
யூடியூப் ஸ்கிரீன்ஷாட்
ரஷியாவை சேர்ந்த 5 வயது சிறுமியான Anastasia Radzinskaya 18 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 128 கோடி வருமானத்துடன் 3வது இடத்தை பிடித்து இருக்கிறார்.
புதிய பொம்மைகளை அன்-பாக்ஸ் செய்வது குழந்தைகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது, ஆனால் வெறும் 9 வயது யூடியூபர் ரியான் காஜிக்கு (Ryan Kaji), இது ஒரு பிசினஸாகவும், அதிர்ஷ்டத்தையும் அளித்தது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? ரியான் ஒரு சுட்டிப்பையன், அறிவியல் பரிசோதனைகள் (Science experiments), இசை வீடியோக்கள், ஸ்கிட், சவால்கள், DIY கலை மற்றும் கைவினைப்பொருட்கள் (crafts) மற்றும் பல வேடிக்கையான விஷயங்களைச் செய்வதை விரும்புகிறார்.
ரியான் காஜியின் யூடியூப் சேனலான "ரியான்ஸ் வேர்ல்ட்" ("Ryan's World") இன் விளக்கத்தை, ரியானின் சேனலில் "என்னைப் பற்றி" ("about me") என்ற பிரிவை பலரும் யூடியூபில் பார்ப்பதால் சிறுவன் அதிக வருவாயை பெறுகிறான். 12 பில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் (views) மற்றும் 27 மில்லியன் சந்தாதாரர்களுடன் (subscribers) இவரது யூடியூப் சேனல் இயங்குகிறது. இந்த நிலையில் 9 வயதான இந்த குட்டிப்பையன் ஜூன் 1, 2020 வரை யூடியூபில் அதிக சம்பளம் வாங்கும் யூடியூப் நட்சத்திரமாக (YouTube star) உருவெடுத்துள்ளார் என்று ஃபோர்ப்ஸ் (Forbes) வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் குட்டிப்பையனின் வருவாய் எவ்வளவு தெரியுமா? $29.5 மில்லியன் அதாவது இந்திய ரூபாயில் சுமார் 220 கோடி ஆகும். ஃபோர்ப்ஸின் (Forbes) அறிக்கையின் படி, தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ரியான், உலகில் அதிக சம்பளம் வாங்கும் யூடியூபர்களில் முதல் இடத்தைப் பெற்றுள்ளார் என்றது. "சிறுவன், அன்-பாக்ஸிங் வீடியோக்கள் என்று அழைக்கப்படும் பிரிவில், பொம்மைகளை அதன் பாக்ஸிலிருந்து எடுத்து அவற்றை ரிவிவ்யூ செய்கிறார்.
இந்த சிறுவனின் இப்போதய இலக்கு என்ன தெரியுமா, அமேசான் மற்றும் வால்மார்ட் (Amazon and Walmart) ஆகியவற்றின் முக்கிய வணிகப் பொருட்களை ரிவிவ்யூ செய்வது தான். அமேசான் மற்றும் வால்மார்ட் (Amazon and Walmart) கடந்த ஆண்டு 200 மில்லியன் டாலர் விற்பனையை, நிக்கலோடியோன் தொடரின் (Nickelodeon series) மூலம் பெற்றது இது ரியானின் மிஸ்டரி பிளேடேட்"என்று அழைக்கப்படுவதாக ஃபோர்ப்ஸ் கூறியது.
ரியான் என்ன செய்யப்போகிறார்? (SO WHAT DOES RYAN EXACTLY DO)
மற்ற எல்லா குழந்தைகளையும் போலவே, ரியான் ஆர்வத்துடன் லெகோஸ், ரயில்கள், கார்கள் மற்றும் ஆக்க்ஷன் ஹீரோக்களுடன் விளையாடுகிறார், இதைத் தவிர, கேமரா முன் ரிவிவ்யூ செய்யும் போது அந்த பொருட்களுடன் விளையாடவும் செய்கிறான். 2015ம் ஆண்டில் தொடங்கப்பட்ட, ரியானின் யூடியூப் சேனல் இப்போது ராக்கெட் வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது, அவரது குறும்புத்தனமான குழந்தை பருவ வினோதங்கள் மற்றும் ஒவ்வொரு நாளும் ஒரு வீடியோவை வெளியிடுவதற்கான சிறுவனின் உழைப்பு பலரையும் கவர்கிறது.
டிஜிட்டல் சகாப்தம் முன்னெப்போதையும் விட வேகமாக வளர்ச்சியடைந்து வருவதோடு, யூடியூபில் பார்வையாளர்களின் சராசரி வயது (average age of viewers) நாளுக்கு நாள் குறைந்து வருவதால், ரியான் போன்ற சேனல்கள் மாற்றத்தை ஏற்படுத்தும். அதோடு அதிக பணத்தை சம்பாதிக்கவும் இது உதவும். மனிதர்களை வீட்டுக்குள்ளேயே முடக்கிய கொரோனா வைரஸ் தொற்றுநோயை 2020ம் ஆண்டு கண்டது, இதுபோன்ற இக்கட்டான சூழலில் யூடியூப் மற்றும் ரியான் போன்ற சேனல்கள் பலரையும் மகிழ்வித்தன. முந்தைய ஆண்டுகளைப் போலவே இணையம் மீண்டும் வேகம் கண்டுள்ளது என்பதை சொல்லத் தேவையில்லை.
9-year-old Ryan Kaji, becomes 2020’s highest-paid YouTuber. He made nearly $30 million from “unboxing” and reviewing toys & games. 😱💸 pic.twitter.com/cZvk0IamFg
அதே போல் ரஷியாவை சேர்ந்த 5 வயது சிறுமியான Anastasia Radzinskaya 18 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 128 கோடி வருமானத்துடன் 3வது இடத்தை பிடித்து இருக்கிறார். ஃபோர்ப்ஸ் அறிக்கையின் படி, அவர் 7 சேனல்களில் 107 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளார், மேலும் அவரது வீடியோக்கள் 42 பில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளன என்றது. ஃபோர்ப்ஸ் -ன் அதிக சம்பளம் பெறும் YouTubers பட்டியலில் சிறுவனுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர்கள் :
#2 MrBeast (Jimmy Donaldson): $24 million.
#3 Dude Perfect: $23 million
#4 Rhett and Link: $20 million
#5 Markiplier: $19.5 million வருமானம் ஈட்டி சாதனை படைத்து வருகின்றனர்.