வித்தியாசமான விசிடிங் கார்ட் ஐடியா...! வேலையில்லாமல் தவித்த பெண்ணிற்கு குவியும் வாய்ப்புகள்

தினமும் நூற்றுக்கணக்கான அழைப்புகள் வருகிறதாம்.

வித்தியாசமான விசிடிங் கார்ட் ஐடியா...! வேலையில்லாமல் தவித்த பெண்ணிற்கு குவியும் வாய்ப்புகள்
கீதாவின் விசிடிங் கார்ட்
  • News18
  • Last Updated: November 9, 2019, 8:06 PM IST
  • Share this:
உங்களுக்கு மட்டும்தான் விசிடிங் கார்ட் உரிமையா...? எனக்கும் இருக்கிறது என விசிட்டிங் கார்டுகள் அடித்து அதை இணையத்தில் பதிவிட அது வைரலாகப் பரவி தற்போது அந்த பெண்ணிற்கு வேலை வாய்ப்புக் குவிந்து வருகிறது.

ஆம்.. பூனேவைச் சேர்ந்த கீதா கேல் வீட்டு வேலை பார்த்து வருகிறார். திடீரென அவர் வேலை பார்த்துவந்த வீட்டில் வேலைக்கு வர வேண்டாம் என சொல்ல என்ன செய்வதென்று திகைத்துள்ளார். இதனால் அவருக்குக் கிடைந்து வந்த மாத வருமானமான 4000 ரூபாயும் பறிபோனது.

மற்றொரு வீட்டிலும் வேலை பார்க்கும் கீதா அங்கு வேலைகளில் ஈடுபாடின்றி சோகமாக அமர்ந்துள்ளார். நீண்ட நாட்கள் கழித்து வீடு திரும்பிய அந்த வீட்டின் ஓனர், கீதாவை கண்டதும் விசாரித்துள்ளார். உடனே அவரின் சோகத்தைப் போக்க இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார்.


அந்த வீட்டின் ஓனரான தனஸ்ரீ என்பவர்தான் அவருடய தகவல்கள் அடங்கிய விசிடிங் கார்டை வடிவமைத்துக் கொடுத்துள்ளார்.

அதில் பெயர், தொலைபேசி எண் குறிபிட்டதோடு அவரின் மாத சம்பளம் எதிர்பார்ப்பு எவ்வளவு என்பதையும் குறிப்பிட்டுள்ளார். கூடவே ஆதார் அட்டை பரிசோதனை செய்யப்பட்டது என்ற வாக்கியத்தையும் தவறாமல் அச்சடித்துள்ளார்.

இத்தனைக் குறிப்புகள் அடங்கிய விசிட்டிங் கார்டை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்திலும் பதிவு செய்துள்ளார் தனஸ்ரீ. அந்த பதிவு வேகமாகப் பரவ தற்போது கீதாவிற்கு வேலை வாய்ப்புகள் குவிகிறதாம். தினமும் நூற்றுக்கணக்கான அழைப்புகள் வருகிறதாம்.

 
First published: November 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading