Home /News /trend /

புள்ளிங்கோ ஸ்டைலில் இருப்பவர்களுக்கு வேலை உடன் உதவித்தொகை.. குவிந்த விண்ணப்பங்கள்!

புள்ளிங்கோ ஸ்டைலில் இருப்பவர்களுக்கு வேலை உடன் உதவித்தொகை.. குவிந்த விண்ணப்பங்கள்!

மாதிரி படம்

மாதிரி படம்

உடலில் டேட்டூ குத்தியிருப்பவர்கள், காதுகளில் கடுக்கண் அணிந்திருப்பவர்கள் மற்றும் வித்தியாசமான ஹேர் ஸ்டைல் கொண்டவர்களை வேலைக்கு சேர்க்கப் போவதாக ஹோட்டல் நிர்வாகம் அறிவித்தது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
    நிறுவனம், தொழிற்சாலை, அலுவலகம் என எந்தவொரு இடத்தை எடுத்துக் கொண்டாலும் அங்கு பணியாற்றும் ஊழியர்களின் பெர்சானாலிட்டி தொடர்பாக சில விதிமுறைகளை வகுத்து வைத்திருப்பார்கள். உதாரணத்திற்கு அனேக அலுவலகங்களில் கேஷுவல் உடைகளுக்கு அனுமதி இருக்காது.

    உடைகளை நேர்த்தியாக அணிந்திருக்க வேண்டும், ஷு அணிய வேண்டும் என கட்டுப்பாடுகள் இருக்கும்.
    ஒருசில இடங்களில் ஜீன்ஸ் மற்றும் டீ ஷர்ட் போன்றவற்றை அனுமதித்தாலும் கூட அனைத்து பணியாளர்களுக்கும் சீரான உடை அணிவதற்கு மட்டுமே அனுமதி கொடுத்திருப்பார்கள். ஆக, எங்கு வேலை செய்ய வேண்டும் என்றாலும், அங்குள்ள கட்டுப்பாடுகளுக்கு தகுந்தவாறு நம்மை நாம் மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும்.

    இந்த விதிகள் ஹோட்டல்களுக்கும் பொருந்தும். பெரும்பாலான உயர் தரத்திலான ஹோட்டல்களில் பணியாளர்களை நீங்கள் கவனித்தீர்கள் என்றால் வாரி சுருட்டி சீவிய தலைமுடி, காட்டன் பேண்ட், சட்டை அல்லது அதனுடன் கோட் என மிக நேர்த்தியான தோரணையில் இருப்பார்கள். ஹோட்டல்களுக்கு வரும் கஸ்டமர்கள் எப்படிப்பட்ட காஸ்டியூம்களிலும் கூட வரலாம். ஆனால், பணியாளர்களுக்கு என ஒரு ஒழுங்கு இருக்கும்.

    ஆனால், ஜெர்மனியைச் சேர்ந்த ரூபி ஹோட்டல்ஸ் என்ற ஹோட்டல் நிறுவனம் இதுபோன்ற கட்டுப்பாடுகளை தளர்த்திவிட்டு, தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்ப வாழும் ஸ்டைலான நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்போவதாக அறிவிப்பு வெளியிட்டது.

    Also Read : நேருக்குநேர் மோதும் சிங்கம், ராஜநாகம்.. வன அரசர்களின் சண்டையில் கொல்லப்பட்டது யார்? - வீடியோ

    அதாவது உடலில் டேட்டூ குத்தியிருப்பவர்கள், காதுகளில் கடுக்கண் அணிந்திருப்பவர்கள் மற்றும் வித்தியாசமான ஹேர் ஸ்டைல் கொண்டவர்களை வேலைக்கு சேர்க்கப் போவதாக ஹோட்டல் நிர்வாகம் அறிவித்தது. ஒருபக்கம் வேலையும் வேண்டும், அதே சமயம் தன் விருப்பம் போல வாழ உரிமையும் வேண்டும் என்று நினைக்கக் கூடிய நபர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் போல அமைந்தது.

    ஸ்டைல் செய்து கொள்ள உதவித் தொகை

    ஒருவேளை ஹோட்டல் நிர்வாகம் அறிவித்திருப்பது போல நீங்கள் டிரெண்டியாக இல்லை என்றாலும் அதுகுறித்து கவலை இல்லை. டேட்டூ குத்திக் கொள்வது, கடுக்கண் அணிந்து கொள்வது, ஹேர் ஸ்டைல் அமைப்பு போன்றவற்றை செய்து கொள்ள ஹோட்டல் நிர்வாகம் 500 யூரோக்களை உதவித்தொகையாக வழங்கிவிடும்.

    ஆனால், இந்தச் சலுகை புதிய ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும். அதிலும், 6 மாதங்கள் பணி செய்த பிறகே உதவித்தொகை வழங்கப்படும்.

    குவிந்த விண்ணப்பங்கள்

    வழக்கத்திற்கு மாறான சலுகைகள் மற்றும் கட்டுப்பாடுகளை உடைத்து ரூபி ஹோட்டல்ஸ் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து, அவர்களிடம் வேலைக்கு விண்ணப்பம் செய்பவர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் உயர்ந்துள்ளது.

    இந்தத் திட்டத்திற்கு பலத்த வரவேற்பு இருப்பதால் இந்த ஆண்டு முழுவதும் இதே பாணியை கடைப்பிடிக்க போவதாக ரூபி ஹோட்டல்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. பணியாளர்களை அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப ஸ்டைல் செய்வதற்கு அனுமதித்துள்ள ரூபி ஹோட்டல்ஸ் நிர்வாகத்தை நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்
    Published by:Vijay R
    First published:

    அடுத்த செய்தி