பேய் என்று சொன்னாலே பலருக்கும் வியர்த்துவிடும். மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இருப்பது போல. மேலும் சிலர் ஆவிகளையும் அமானுஷ்ய சக்திகளையும் நம்புகிறார்கள். ஆனால் சிலர் எதற்கு எதிர்மறையாக இருப்பார்கள். பேயும் இல்லை பூதமும் இல்லை என்று பேசி கொண்டிருப்பாகர்கள். அப்படிப்பட்டவர்களும் சில விஷயங்களை நேரில் பார்க்கும் போது அதை பற்றி பேசாமல் இருக்க முடியாது. அப்படி ஒரு வீடியோ ஒன்று தான் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் தூங்க விடாமல் செய்கிறது.
ஆனால் இந்த வீடியோவில், உங்களையும் அதிர்ச்சி அடைய வைக்கும் ஒரு வினோத சம்பவம் இரவில் நடைபெறுகிறது. இந்த காணொளியின் உண்மையான காரணம் என்ன, யார் அதை உருவாக்கியது என்பது தெரியவில்லை.
வைரலாகும் வீடியோவில் மருத்துவமனை காவலாளி ஒருவர் அமர்ந்திருப்பதைக் காணலாம். அப்போது திடீரென்று கதவு திறக்கிறது. ஆனால் யாரும் உள்ளே வரவில்லை. ஆனால் எப்படியிருந்தாலும், இந்த காவலர் இருக்கையில் இருந்து எழுந்து யாரிடமோ பேசத் தொடங்குகிறார். அங்கி தடுப்பு பொருட்களை அகற்றி உள்ளே அழைத்து வந்து பேசிக்கொண்டே, அங்கிருந்த சக்கர நாற்காலியில் உட்காரச் சொல்லி அந்த நாற்காலியை எடுத்துக் கொள்கிறார். ஆனால் இறுதிவரை அவர் யாரிடம் பேசிகிறார் என்பது தெரியவில்லை.
இந்த காணொளியை பார்த்ததும் அனைவரும் மிரண்டு போய் உள்ளனர். மேலும் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோ ரெடிட்டில் பகிரப்பட்டுள்ளது. இதில் மக்கள் நிறைய கருத்துகள் மற்றும் லைக் செய்துள்ளனர்.
Buenos Aires இல் உள்ள Finocchiato Sanatorium என்ற தனியார் பராமரிப்பு மையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, பராமரிப்பு மையத்தின் செய்தித் தொடர்பாளர் உள்ளூர் ஊடகங்களுக்குக் கூறுகையில், இது கதவில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு என்று கூறினார். இரவு முழுவதும் இப்படி திறந்து கொண்டே இருந்தது இருந்தார்.
கதவுகள் அடிக்கடி திறந்து மூடியதால் காவலாளி பிரங்க் செய்வதற்காக கூட அப்படி செய்திருக்கிலாம் என்று கூறப்படுகிறது. மேலும் காவலாளி தானியங்கி கதவு திறந்த உடன் அங்கு வந்து பதிவிட்டில் ஏதோ எழுதி இருந்தார். ஆனால் மறுநாள் காலையில் பதிவேட்டில் அப்படி ஒன்றும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.