டாய்லெட்டில் நடந்த திகில் சம்பவம் - மலைப்பாம்பை கவனிக்காமல் உட்கார்ந்த முதியவர்.. என்ன ஆனது?

டாய்லெட்டில் மலைப்பாம்பை கவனிக்காமல் உட்கார்ந்த முதியவர்!

காலை நேரத்தில் டாய்லெட் ரூமிற்குள் சென்ற ஒரு நபருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. தூக்கத்திலிருந்து விழித்து காலை 6 மனை அளவில் டாய்லெட் சென்ற அந்த நபர் சுமார் 1.6 மீட்டர் அதாவது 5 1/4 -அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று கடித்துள்ளதாக அந்நாட்டு போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர்.

  • Share this:
பொதுவாக செல்லப் பிராணிகள் பட்டியலில் நாய், பூனை, முயல், கிளி மற்றும் பறவைகள் இருக்கும். ஆனால் வெளிநாடுகளில் சில முரட்டுத்தனமான விலங்குகள் மற்றும் விஷ ஜந்துக்களை செல்லப் பிராணிகளாக வளர்க்கும் பழக்கம் இருந்து வருகிறது. ஊர்ந்து செல்லும் விலங்கினங்களை பார்த்தாலே நம் மனதில் பட்டென்று பயம் ஒட்டி கொள்ளும்.

அதிலும் பாம்பை பற்றி சொல்ல வேண்டுமா என்ன.! பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழியானாலும் மற்ற ஊர்ந்து செல்லும் விலங்கினங்களை விட பாம்புகள் மனதில் பெரும் கிலியை ஏற்படுத்திவிடுகின்றன.

ஒரு பாம்பு விஷதன்மை கொண்டதா அல்லது விஷத்தன்மையற்றதா என்பதைப் பொருட்படுத்தாமல், வாழ்நாள் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்து விடும் பாம்பு கடி சம்பவம். அந்த வகையில் ஆஸ்திரியாவில் காலை நேரத்தில் டாய்லெட் ரூமிற்குள் சென்ற ஒரு நபருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.தூக்கத்திலிருந்து விழித்து காலை 6 மனை அளவில் டாய்லெட் சென்ற அந்த நபர் சுமார் 1.6 மீட்டர் அதாவது 5 1/4 -அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று கடித்துள்ளதாக அந்நாட்டு போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர்.

ALSO READ |  தேவாலயத்தில் புகுந்த முதலை - சர்ச்சையில் சிக்கிய பாதிரியார்!

பாம்பு கடிக்கு உள்ளானவர் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் என்று குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், அவர் பற்றி வேறு விவரங்கள் எதையும் வெளியிடவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ள ஸ்டைரியா மாகாணத்தை (Styria province) சேர்ந்த போலீஸ் அதிகாரிகள், கிராஸ் நகரில் சம்பந்தப்பட்ட முதியவரின் அருகில் வசிக்கும் 24 வயது இளைஞர் ஒருவர் தன் வீட்டில் சில வகை விஷமில்லா பாம்புகளை வளர்த்து வருகிறார். இதில் அல்பினோ ரெட்டிகுலேட்டட் வகையை சேர்ந்த விஷத்தன்மையில்லா மலைப்பாம்பும் ஒன்று.

சமீபத்தில் இந்த 1.6 மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பானது இருப்பிடத்திலிருந்து தப்பித்து வடிகால் வழியே பக்கத்து வீட்டு கழிப்பறை குழிக்குள் நுழைந்துள்ளது. அந்த சமயத்தில் தான் இந்த 65 வயது முதியவர் சிறுநீர் கழிப்பதற்காக டாய்லெட்டில் அமர்ந்துள்ளார். அப்போது அவரது மர்ம உறுப்பை ஏதோ ஒன்று பலமாக கடித்ததை அடுத்து அலறி உள்ளார்.

Python
பிடிக்கப்பட்ட மலைபாம்பு


பக்கத்து வீட்டிலிருந்து தப்பித்த அந்த மலைபாம்பு டாய்லெட் பேசினுக்குள் இருந்துள்ளது. அதை கவனிக்காமல் முதியவர் சிறுநீர் கழிக்க முயன்ற போது இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. அலறியபடி டாய்லெட் பேசினை பார்த்த முதியவர் அதில் மலைப்பாம்பு இருந்ததை கண்டு மேலும் அதிர்ந்துள்ளார்.

ALSO READ | நம்ம மூஞ்சியா இது ...தன்னை போன்ற உருவத்தில் இருந்த பூனையை பார்த்ததும் அதிர்ந்த காட்டு லின்க்ஸ் - வைரல் வீடியோ!

பின்னர் உடனடியாக அவசர சேவை பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் கழிப்பறை குழிக்குள் கிடந்த மலைப்பாம்பை பிடித்து, பின்னர் அதை சுத்தம் செய்து அந்த 24 வயதான இளைஞனிடம் ஒப்படைத்தனர். விஷ தன்மை இல்லை என்ற போதிலும் மர்ம உறுப்பை கடித்ததால் முதியவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை.

எனினும் இளைஞரின் அலட்சியத்தால் முதியவருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும், தொடர்ந்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sankaravadivoo G
First published: