முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / சாலைக்காக மரத்தை வெட்டியபோது உயிரிழந்த ஏராளமான பறவைகள்... இணையத்தில் வைரலாகும் மனதை உருக்கும் வீடியோ

சாலைக்காக மரத்தை வெட்டியபோது உயிரிழந்த ஏராளமான பறவைகள்... இணையத்தில் வைரலாகும் மனதை உருக்கும் வீடியோ

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

Viral Video : ஒரு மரத்தை அகற்றியபோது, அதில் இருந்த ஏராளமான கூடுகள் சேதமடைந்ததோடு, அதில் இருந்த முட்டைகளும் உடைந்து நொறுங்கின.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Kerala, India

கேரளாவில் நெடுஞ்சாலையில் இருந்த மரத்தை வெட்டியபோது, பறவைகளின் கூடு சேதமடைந்ததோடு, ஏராளமான பறவைகளும் உயிரிழந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில், நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்வதற்காக, சாலையோரங்களில் இருக்கும் மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஒரு மரத்தை அகற்றியபோது, அதில் இருந்த ஏராளமான கூடுகள் சேதமடைந்ததோடு, அதில் இருந்த முட்டைகளும் உடைந்து நொறுங்கின.

இந்த மரத்தில் நீர் காகம் உள்பட ஏராளமான அரிய வகை பறவைகள் கூடு கட்டியிருந்தன. ஆனால், அதை கவனிக்காமல் மரத்தை வெட்டியதால் 100க்கும் மேற்பட்ட பறவைக் குஞ்சுகள் கீழே விழுந்து பரிதாபமாக இறந்தன.

அத்துடன், பறவைகளும் அங்கேயே மடிந்து விழுந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சிகளை பகிரும் பலரும், உலகிலேயே மிகவும் மோசமான உயிரினம், மனிதன் தான் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

First published:

Tags: Kerala, Social media, Viral Video