Home /News /trend /

பாலத்துக்கு இடையில் மாட்டிக்கொண்ட வாகனம்: உயிர்தப்பிய டிரைவர் – வைரல் வீடியோ

பாலத்துக்கு இடையில் மாட்டிக்கொண்ட வாகனம்: உயிர்தப்பிய டிரைவர் – வைரல் வீடியோ

பாலத்துக்கு இடையில் மாட்டிக்கொண்ட வாகனம்

பாலத்துக்கு இடையில் மாட்டிக்கொண்ட வாகனம்

ஹோண்டா அக்கார்டு கார் செடான் ஒன்று லன்டானாவில் உள்ள ஓஷன் பிரிட்ஜ் என்ற பாலத்தின் இடையில் சிக்கிக் கொண்டது.

வாகனம் ஓட்டும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆனால், மற்றவர்களின் கவனக் குறைவும் உயிரை போக்கும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். விபத்தில் உயிர் தப்பிய வீடியோக்கள் பல இன்டர்நெட்டில் நெட்டிசன்களால் வைரலாகப் பகிரப்படும். எத்தனையோ கார் மற்றும் பைக் விபத்துக்கள், நூழிலையில் உயிர் தப்பியவர்கள், என்று வைரலான வீடியோக்கள் பல உள்ளன. கடந்த ஆண்டு நடந்த அதிசயமான சம்பவம் ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. Drawbridge, இழுக்கும் பாலத்தில் இடையே மாட்டிக் கொண்ட எஸ்யுவி ஒன்று, மூடப்படும் போது அதிர்ஷடவசமாக தானாகவே விடுபட்டது.

ஒரு சில சாலைகளில் நதி அல்லது ஏரிகளின் மீது காட்டப்படும் பாலங்கள் இடையில் திறந்து மூடப்படும் வசதியோடு கட்டப்படும். தமிழகத்தில் இருக்கும் பாம்பன் பாலம் ஒரு உதாரணம். வெளிநாடுகளில் நதிகளின் மீது இதைப் போல ஏகப்பட்ட இழுவை பிரிட்ஜ்கள் உள்ளன. அவ்வகையான அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடா மாகாணத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

ஹோண்டா அக்கார்டு கார் செடான் ஒன்று லன்டானாவில் உள்ள ஓஷன் பிரிட்ஜ் என்ற பாலத்தின் இடையில் சிக்கிக் கொண்டது. பிரிட்ஜின் பக்கவாட்டில் இருக்கும் சிறிய கேட் மூடப்பட்டவுடன், மிகச்சரியாக செடான் பிரிட்ஜ் சாலையில் மூடப்படும் இடத்தில் சிக்கிக் கொண்டது. செடானின் டிரைவருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. பதட்டத்தில் அவர் உதவிக்காக பலருக்கும் கால் செய்து கொண்டிருந்தார். பிரிட்ஜ் மூடப்படும் போது இடையில் இருக்கும் கார் கிட்டத்தட்ட நசுங்கியிருக்கும். டிரைவரும் உயிர் தப்பியிருப்பாரா என்பது தெரியவில்லை. டிரைவரும் உயிர் பயத்தில் கார் கதவைத் திறந்து வெளியேற முயற்சி செய்து கொண்டிருந்தார். ஆனால், அதிர்ஷ்டவசமாக பிரிட்ஜுக்கு இடையே நசுங்குவதற்கு பதிலாக, கார் தானாகவே சிக்கலில் இருந்து விடுபட்டு, சில இன்ச்சுகள் முன்னேறியது. கார் ஓரளவுக்கு சிக்கிக் கொண்டிருந்த இடத்தில் இருந்து விடுபட்ட பிறகு, டிரைவர் பதட்டத்துடன் கார் கதவைத் திறந்து இறங்கி, சுற்றும் முற்றும் பார்த்து மீண்டும் ஏறி, காரை ஓட்டிச் சென்றார்.

Also read... பூனை குறுக்க வந்து அபசகுணம் ஆகிடுச்சு… இதுபோல இந்தியர்கள் அதிகம் கடைபிடிக்கும் மூடநம்பிக்கைகள்

கடந்த அக்டோபர் மாதம் நடந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது. வீடியோவின் லிங்க் இங்கே.

இங்கே



பிரிட்ஜை இயக்கும் போது, பிரிஜ்டில் யாரேனும் இருக்கிறார்களா என்பதை பார்க்க வேண்டும் என்பது மக்களின் பாதுகாப்புக்காக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கார் இருப்பதையே கவனிக்காமல் பிரிட்ஜ் ஆப்பரேட்டர் இயக்கியதால் அவரை பணியில் இருந்து சம்மந்தப்பட்ட நிறுவனம் நீக்கியுள்ளது. ஆனால், அந்த ஆப்பரேட்டர் பிரிட்ஜ் மூடும் வரை அந்த காரை கவனிக்கவில்லை என்று கூறியிருந்தார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Trending Videos

அடுத்த செய்தி