முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / ViralVideo : கோடை வெப்பத்தை சமாளிக்க தர்பூசணியை சுவைக்கும் நீர் யானைகள் - வைரல் வீடியோ

ViralVideo : கோடை வெப்பத்தை சமாளிக்க தர்பூசணியை சுவைக்கும் நீர் யானைகள் - வைரல் வீடியோ

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

முதலில் தர்பூசணியை வாங்கிய நீர் யானை ஒரு பாதி பழத்தின் சிவப்பு பகுதியை முழுமையாக சாப்பிட்டு முடிக்க, அப்போது பூங்காவில் வேலை செய்யும் நபர் அந்த பழத்தை மீண்டும் எடுத்து வாயில் வைக்கிறார்.

  • Last Updated :

கோடைகாலம் என்றாலே தர்பூசணி, வெள்ளரிக்காய், இளநீர் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை ஜோராக இருக்கும். மக்களும் கோடை வெப்பத்தை சமாளிக்க தண்ணீர் பழங்களை வாங்கி உண்ணும் வாடிக்கையை கொண்டுள்ளனர். மனிதர்களுக்கு மட்டும் தான் கோடை வெப்பத்தின் தாக்கம் இருக்குமா என்ன ?

இரண்டு நீர் யானைகள் தர்பூசணி பழங்களை ருசித்து சாப்பிடும் வீடியோ வைரலாகி வருகிறது. சான் அந்தோனியோ விலங்கியல் பூங்காவில் கடந்த ஜூன் 9ம் தேதி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ஒருவர் முழு தர்பூசணி பழத்தை ஒரு நீர் யானையின் வாயில் வைக்கிறார். அது அப்படியே கடித்து சுவைக்க முயற்சிக்க அது இரண்டு துண்டாகி கீழே விழுகிறது. அப்போது அருகில் உள்ள நீர் யானையும் கீழே விழுந்த பழங்களை சுவைக்கிறது.

முதலில் தர்பூசணியை வாங்கிய நீர் யானை ஒரு பாதி பழத்தின் சிவப்பு பகுதியை முழுமையாக சாப்பிட்டு முடிக்க, அப்போது பூங்காவில் வேலை செய்யும் நபர் அந்த பழத்தை மீண்டும் எடுத்து வாயில் வைக்கிறார். இதனையடுத்து அது தனது ஸ்டைலில் அந்த தர்பூசணியை முழுமையாக சுவைத்து முடிக்கிறது. நிச்சயம் இந்த தர்பூசணி அதன் கோடை வெப்பத்தை தணிக்க பெரிதும் உதவும். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரிதும் வைரலாகி வருகிறது.

ALSO READ | ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறந்த மனைவியின் நினைவாக 450 மரங்களை நட்ட கணவர்!

இந்த வீடியோ குறித்து பலரும் தங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நீர் யானை தனது உணவை மற்றொரு நீர் யானைக்கும் பகிர்ந்து உண்பதை பாராட்டி ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். விலங்குகளுக்கு உணவு மட்டும் கொடுக்காமல், காலநிலை மற்றும் அதன் தேவையை அறிந்து உணவு வழங்குவது குறித்து பலரும் விலங்கியல் பூங்காவினரை பாராட்டி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு சிலர் மற்ற பூங்காக்களிலும் இதுபோன்ற நடைமுறையை கடைபிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஒரு சிலர் இதனை பார்க்கும் போது தங்களுக்கும் இதுபோன்று தர்பூசணியை சாப்பிட ஆவல் எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

தரை மற்றும் நீர் என இருவாழ் உயிரினம் இந்த நீர் யானை. விலங்குகளில் உருவத்தில் மூன்றாவது பெரிய விலங்கு நீர் யானை. இவற்றின் எடை 1,600 கிலோ வரை எடை கொண்டதாம். இவ்வளவு பெரிய விலங்காக இருந்தாலும், நீர் யானையால் மணிக்கு 30 கி.மீ வரை ஓடக் கூடியது. மேலும் இந்த விலங்கு ஆப்பிரிக்காவை பூர்விகமாக கொண்டது.

ALSO READ |  கூடைப்பந்து விளையாடிய காட்டு யானை - வைரல் வீடியோ!

இதனால் தண்ணீருக்குள் 6 மணி நேரம் வரை இருக்க முடியுமாம். நீருக்குள் மூழ்கி இருந்தாலும் கண்கள், காதுகள் தண்ணீருக்கு வெளியே நீட்டிய படி இருக்கும். இதனால் வெளிப்பரப்பில் நடப்பதை பார்க்கவும், கேட்கவும் முடியும்.

top videos

    இந்த கடினமான சூழலில் தினம் தினம் மக்கள் துயரமான செய்திகளையே எதிர்கொள்கின்றனர். பலரும் தங்கள் சொந்தங்களை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்கு இந்த மாதிரியான வீடியோக்கள் சற்று ஆறுதலாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

    First published:

    Tags: Viral Video, Watermelon