Home /News /trend /

ஹிந்தியில் மாஸ்டர்! படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு

ஹிந்தியில் மாஸ்டர்! படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு

மாஸ்டர்

மாஸ்டர்

மாஸ்டர் திரைப்படத்தின் ஹிந்தி போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    மாஸ்டர் திரைப்படம் ஹிந்தியில் வெளியாவதை உறுதி செய்து  படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் படத்தில் விஜய்,விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன்,ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் போன்ற பல நட்சத்திரங்கள் உள்ளனர்.மாஸ்டர் திரைப்படம் கடந்த ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வர இருந்த நிலையில் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன.இதனால் அதிருப்தி அடைந்த விஜய் ரசிகர்கள் படத்தின் டீசரையாவது வெளியிடுமாறு கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து தீபாவளியை முன்னிட்டு படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது.மாஸ்டர் படத்தின் டீசர் தற்போது 5 கோடி பார்வையாளர்களை பெற்று யூடியூபில் சாதனை படைத்துள்ளது.மேலும் மாஸ்டர் படம் பொங்கலுக்கு வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.ஆனால் திரையரங்குகளுக்கு 100 சதவீத இருக்கை அனுமதி கேட்டு திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     



    ஏற்கனவே மாஸ்டர் திரைப்படம் தமிழ்,ஹிந்தி,தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நாளில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவிந்திருந்தது.இந்நிலையில் ஹிந்தியில் மாஸ்டர் படம் வெளியாவதை உறுதி செய்து புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.இதை படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Tamilmalar Natarajan
    First published:

    Tags: Master, Thalapathy 64, Thalapathy vijay

    அடுத்த செய்தி