ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

மிஸ் இந்தி தேசிய மொழி இல்ல..டீச்சருக்கு வகுப்பெடுத்த சிறுமி- வைரல் ஆடியோ

மிஸ் இந்தி தேசிய மொழி இல்ல..டீச்சருக்கு வகுப்பெடுத்த சிறுமி- வைரல் ஆடியோ

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஆன்லைன் வகுப்பின்போது ஆசிரியை இந்தியாவின் தேசிய மொழி இந்தி என கூறுகிறார்.  வகுப்பை கவனித்துகொண்டிருந்த கேத்தரின் என்ற சிறுமி தனது ஆசிரியையிடம் இந்தியாவுக்கு தேசிய மொழி என எதுவும் இல்லை என குறிப்பிடுகிறார். 

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  ஆன்லைன் வகுப்பின்போது இந்தியாவின் தேசிய மொழி இந்தி என கூறிய ஆசிரியையிடம் இந்தியாவிற்கு என்று தேசிய மொழி எதுவும் இல்லை என கூறிய சிறுமியின் ஆடியோ வைரலாகி வருகிறது.

  இந்தியாவிற்கு என தேசிய மொழி எதுவும் இல்லை. இந்தியும் ஆங்கிலமும் இந்தியாவின் அலுவல் மொழிகளாக உள்ளன. இதுபோக அரசியலமைப்பு சாசனத்தின் 8வது அட்டவனையில் குறிப்பிடப்பட்டுள்ளஅசாமிஸ், (2) பெங்காலி, (3) குஜராத்தி, (4) இந்தி, (5) கன்னடம், (6) காஷ்மீரி, (7) கொங்கனி, (8) மலையாளம், (9) மணிப்பூரி, (10) மராத்தி, (11) நேபாளி, (12) ஒரியா, (13) பஞ்சாபி, (14) சமஸ்கிருதம், (15) சிந்தி, (16) தமிழ், (17) தெலுங்கு, (18) உருது (19) போடோ, (20) சந்தாலி , (21) மைதிலி மற்றும் (22) டோக்ரி ஆகிய மொழிகளும் அலுவல் மொழிகளாக குறிப்பிடப்படுகின்றன.

  ஒருசில மாநிலங்கள் ஆங்கிலத்துடன் இந்தி மற்றும் தங்களின் தாய் மொழியை அலுவல் மொழியாக பயன்படுத்தும் மும்மொழி கொள்கையை பின்பற்றுகின்றன. தமிழகம் போன்ற மாநிலங்கள் ஆங்கிலத்துடன் தங்களின் தாய் மொழியை அலுவல் மொழியாக பயன்படுத்தும் இருமொழி கொள்கையை பின்பற்றுகின்றன.

  இந்தி இந்தியாவின் தேசிய மொழியா இல்லையா என்பது தொடர்பாகவும், இந்தி திணிப்பு தொடர்பாகவும் நீண்ட நாட்களாகவே விவாதம் இருந்துகொண்டே உள்ளது. இந்தி பேசப்படாத மாநிலங்களில் இந்தி மொழி திணிக்கப்படுவதாகவும் பல ஆண்டுகளாக கூறப்பட்டு வருகின்றன.

  கொரோனா பரவல் காரணமாக தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  இந்தி மொழி தொடர்பான ஆடியோ ஒன்று ட்விட்டர் போன்ற சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஆன்லைன் வகுப்பின்போது ஆசிரியை இந்தியாவின் தேசிய மொழி இந்தி என கூறுகிறார்.  வகுப்பை கவனித்துகொண்டிருந்த கேத்தரின் என்ற சிறுமி ஆசிரியை வகுப்பு எடுத்து முடிக்கும்வரை அமைதியாக காத்திருந்தார்.

  இதையும் படிங்க: பிளாஸ்டிக் தடை: துளிர்க்கும் பனை ஓலைக்கொட்டான் தயாரிப்பு

  வகுப்பு முடிந்தபின்னர், தனது ஆசிரியையிடம் இந்தியாவுக்கு தேசிய மொழி என எதுவும் இல்லை என குறிப்பிடுகிறார். தனது தவறை உணர்ந்த ஆசிரியை, சிறுமியை பாராட்டி ’வெரி குட்’ என தெரிவிக்கிறார்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Hindi, Online class