யானையை தொடர்ந்து பசுவிற்கு நேர்ந்த அவலம்... இணையத்தில் கொதித்தெழும் நெட்டிசன்கள்

யானையை தொடர்ந்து பசுவிற்கு நேர்ந்த அவலம்... இணையத்தில் கொதித்தெழும் நெட்டிசன்கள்
கோப்பு படம்
  • Share this:
கேரளாவில் பசிக்காக உணவு தேடிய யானைக்கு நடந்த கொடூர சம்பவத்தில் இருந்து மீள்வதற்குள் இமாச்சலபிரதேசத்தில் மீண்டும் ஒரு அவலம் அரங்கேறியுள்ளது.

இமாச்சலப்பிரதேச மாநிலத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஜன்துட்டா பகுதியில், வெடிபொருட்களால் நிரப்பப்பட்ட கோதுமை மாவு பந்தை உண்ட மாடு வாய் வெடித்து சிதைந்துள்ளது. பக்கத்துக்கு வீட்டுகாரர் மாடு பயிர்களை மேய்ந்ததற்காக இவ்விதம் செய்ததாக மாட்டின் உரிமையாளர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக இமாச்சல பிரதேச போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் காயமடைந்த பசுவின் நிலையை வீடியோவாக பசுவின் உரிமையாளர் குர்தியால் சிங் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் #cowlivesmatter என்ற ஹேஷ்டேக்க்கும் ட்ரெண்டாகியுள்ளது.


        

 

 
First published: June 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading