பள்ளி பருவத்தில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தால் அல்லது ஃபெயிலானால் வெட்கத்தாலும், பயத்தாலும் மாணவர்கள் அதை யாரிடமும் சொல்ல மாட்டார்கள். ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து வரும் வழக்கம் இது தான்.
ஆனால் இந்த நாட்களில் தங்கள் குறைந்த மதிப்பெண்களை வெளியே சொல்ல அல்லது காட்ட வெட்கப்படாத பல மாணவர்கள் உள்ளனர். கல்வி மட்டுமே வாழ்க்கையல்ல என்ற கண்ணோட்டத்தில் இந்த மாற்றம் சரி எனப்பட்டாலும், தங்கள் குழந்தை எப்படியாவது நன்றாக படித்து நல்ல மார்க் வாங்கிட வேண்டும் என்று கனவு காணும் கஷ்டப்பட்டு உழைத்து கல்வி கட்டணம் செலுத்தும் பெற்றோருக்கு அவர்களின் செய்கை சில நேரங்களில் மனஉளைச்சலை தந்து விட கூடும்.
இந்நிலையில் மிகவும் குறைந்த மார்க்கை வாங்கி விட்டு அந்த எக்ஸாம் பேப்பரை மாணவர் ஒருவர் இன்ஸ்டா ரீலுக்காக கேமரா முன் காட்டிய வீடியோ ஒன்று சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்களிடம் இருந்து பலவிதமான கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. கல்வியறிவிற்கு பெயர் போன கேரளாவில் இருந்து தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டு வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் பல மாணவர்கள் வகுப்பில் அமர்ந்திருப்பதையும், பேக் பெஞ்ச் மாணவர்கள் பெஞ்சில் அமர்ந்து உள்ள நிலையில் அதில் ஒரு மாணவர் மொபைலில் இந்த வீடியோ எடுத்துள்ளதை வைரல் காணொளி வெளிப்படுத்துகிறது.
View this post on Instagram
பேக்பெஞ்ச் மாணவர் ஒருவரால் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், மாணவர்களில் ஒருவர் வகுப்பு ஆசிரியரிடம் சென்று திருத்தி மார்க் போடப்பட்ட எக்ஸாம் பேப்பர் ஒன்றை பெற்று கொண்டு, திரும்பி திரும்பி பார்த்தபடியே வீடியோ எடுக்கும் பேக்பெஞ்ச் மாணவரை நோக்கி மிகவும் மகிழ்ச்சியாக நடந்து வருகிறார். சரி எதோ அதிக மார்க் எடுத்த சந்தோஷத்தில் தான் கேமராவை நோக்கி வருகிறார் என்று நாம் நினைப்போம்.
ஆனால் கதையே வேறு, நடந்து வந்த மாணவர் கேமராவில் தனது எக்ஸாம் பேப்பரை காட்டும் போது அதில் 60-க்கு 1 மார்க் பெற்றுள்ளதை நம்மால் பார்க்க முடிகிறது. நீங்கள் படித்தது சரி தான், 60 மார்க் வினாத்தாளில் அந்த மாணவர் வெறும் 1 மார்க் மட்டுமே பெற்றுள்ளார். அதை தான் அவர் சக மாணவரின் மொபைல் கேமராவுக்கு கெத்தாக காட்டுகிறார்.
Also Read : வாய்ப்பு கிடைத்தால் நான் இவரைத் தான் திருமணம் செய்வேன் – விவாகரத்துக்குப் பின் பில்கேட்ஸ் பேட்டி
இதை பார்த்த பல நெட்டிசன்கள் 1 மார்க் மட்டுமே பெற்றிருந்தாலும் அவர் மகிழ்ச்சியாக இருப்பது அவரது தன்னம்பிக்கையை காட்டுகிறது என்று நேர்மறையாக கமெண்ட்ஸ் செய்து உள்ளனர். ஒரு சில யூஸர்கள் "மிகவும் அருமை, நீங்கள் வாழ்க்கையில் முன்னேறும் வழி இதுதான்", "இப்போது வீட்டிற்குச் செல்லுங்கள், பெற்றோரின் செருப்புகள் உங்களுக்காக காத்திருக்கின்றன" என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி கமெண்ட்ஸ் செய்து உள்ளனர்.
இந்த வைரல் வீடியோ ஏற்கனவே 26 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்றுள்ளது. அதே நேரத்தில், இந்த வீடியோ 13 கோடிக்கும் மேற்பட்ட வியூவ்ஸ்களை பெற்று உள்ளது. இந்த வீடியோவை பற்றி உங்கள் கருத்து என்ன.?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Trending Video, Viral Video