Home /News /trend /

99 சதவீதம் பேர் தோல்வி... இந்த படத்தில் ஒளிந்துள்ள பூனைக்குட்டியை 5 கண்டுபிடித்தால் நீங்க தான் ஜீனியஸ்..!

99 சதவீதம் பேர் தோல்வி... இந்த படத்தில் ஒளிந்துள்ள பூனைக்குட்டியை 5 கண்டுபிடித்தால் நீங்க தான் ஜீனியஸ்..!

optical illusion

optical illusion

நீங்கள் பார்க்கும் மருந்தானது Dr. Seth Arnold's Balsam என பெயரிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் பல நேரங்களில் மிகவும் கடினமானவையாக இருக்கும். ஆப்டிகல் மாயைகளின் அழகு என்னவென்றால், நமது கண்கள் மற்றும் மூளையுடன் தந்திரமான விளையாட்டை மேற்கொள்கின்றன. நாம் பார்ப்பது நிஜம் என்று நம்மை நம்ப வைக்கின்றன. மேலும் இவை மனித மூளையின் உணர்வின் அளவை மதிப்பிட உதவும் விளையாட்டாகவும் இருக்கின்றன. அறிவாற்றல், உளவியல் மற்றும் உடல் ரீதியான பல்வேறு வகையான ஒளியியல் மாயைகள் உள்ளன.

    இதை தவிர, ஆப்டிகல் மாயைகள் ஒரு குறிப்பிட்ட படத்துடன் தொடர்பு கொள்ளும்போது நமது மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகளுக்கும் உதவுகிறது. இவை உங்கள் மூளையின் திறனைச் சோதிக்கவும் வழி செய்கிறது. சரி, இப்படியொரு புதிர் நிறைந்த சவாலான ஆப்டிகல் மாயை கொண்ட ஒரு படம் தான் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.



    இன்றைய புதிர்

    இந்த விண்டேஜ் படத்தில், இரண்டு வயதான பெண்கள் மருந்து பாட்டில் மற்றும் கண்ணாடியுடன் ஒரு மேஜையைச் சுற்றி அமர்ந்திருப்பதையும், ஒரு பெண்ணின் பக்கத்தில் ஒரு கருப்பு பூனை அமர்ந்திருப்பதையும் நீங்கள் காணலாம். மேலும் இந்த பெண்கள் பாட்டிலில் உள்ள மருந்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருப்பது போலவும், வலது பக்கத்தில் உள்ள பெண்மணி பாட்டிலை நோக்கி விரலை நீட்டிய படியாகும் தோன்றலாம்.

    இதில் நீங்கள் பார்க்கும் மருந்தானது Dr.Seth Arnold's Balsam என பெயரிடப்பட்டுள்ளது, இது குடல் சிக்கல்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான மருந்தாகும். வயதான காலத்தில் குடல் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்பதையும் இந்த படத்தின் மூலம் நாம் புரிந்து கொள்ள இயலும். ஆனால், இந்த படத்தில் ஒளிந்துள்ள சிக்கல் இதுவல்ல. உண்மையான சிக்கலைப் பற்றி மேலும் அறிய கீழே தொடர்ந்து படிக்கவும்.



    இதில் ஒளிந்துள்ள புதிர் என்னவென்றால், மற்றொரு பூனை குட்டி தான். இந்த வயதானவர்களால் தங்களது இன்னொரு பூனைக்குட்டியைக் கண்டுபிடிக்க முடியவில்லை, அதனால்தான் காணாமல் போன பூனைக்குட்டியைக் கண்டுபிடிக்க உங்கள் உதவியை நாடியுள்ளனர். இதில் மறைந்துள்ள பூனைக்குட்டியை 5 வினாடிகளுக்குள் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். அது தான் உண்மையான சவால். சவாலுக்கு நீங்கள் தயாரா?

    சரி அப்படியென்றால், இதோ உங்களுக்கான நேரம் இப்போது தொடங்குகிறது. படத்தை நன்றாக பார்த்து மறைந்திருக்கும் பூனைக்குட்டியைக் கண்டுபிடியுங்கள். பாவம் அந்த சிறிய பூனைக்குட்டி, எங்குள்ளதோ இந்த கிரகத்தில் உள்ள மிகவும் புத்திசாலித்தனமான உயிர்களில் ஒருவரான நீங்கள் தான் அந்த பூனையை கண்டுபிடிக்க போகிறீர்கள். படத்தில் மறைந்துள்ள பூனைக்குட்டியை நீங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லையா?



    இன்னமும் கண்டுபிடிக்கவில்லை என்றால், இந்த முழுப் படத்தையும் மீண்டும் ஒருமுறை உற்று பாருங்கள். அந்த பூனை குட்டி நீங்கள் எதிர்பார்த்திராத ஒரு இடத்தில் தான் ஒளிந்துள்ளது. ஆம், அந்த பூனையானது இடது புறம் அமர்ந்துள்ள பாட்டியின் தலையில் தான் ஒளிந்துள்ளது. இப்போது புரிகிறதா? ஏன் இந்த புதிர் சற்று கடினம் என்று! எப்படியோ ஒரு வழியாக அந்த மறைந்த பூனையை பார்த்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள் உங்களுக்கு.
    Published by:Anupriyam K
    First published:

    Tags: Optical Illusion, Trending

    அடுத்த செய்தி