தீ பற்றி எரியும் கட்டிடத்தில் இருந்து சிறுமியை உயிரை பணயம் வைத்து காத்த இளைஞர்கள்... வைரல் வீடியோ!
தீ பற்றி எரியும் கட்டிடத்தில் இருந்து சிறுமியை உயிரை பணயம் வைத்து காத்த இளைஞர்கள்... வைரல் வீடியோ!
வைரல் வீடியோ
Viral Video : தீப்பற்றி எரியும் அந்த கட்டிடத்தில், 9வது மாடியில் உள்ள அறை ஜன்னல் வழியாக, தீயில் மாட்டிக்கொண்ட சிறுமி ஒருவர் தன்னை காப்பாற்றும் படி கூச்சலிட ஆரம்பித்தார்.
ரஷ்யாவில் தீப்பற்றி எரியும் கட்டிடத்தில் இருந்து சிறுமியை 2 இளைஞர்கள் உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் எப்போதுமே பரபரப்பான வீடியோக்களுக்கு பஞ்சம் கிடையாது. மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தையை தாங்கிப்பிடிப்பது, மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லும் நபரை பாய்ந்து காப்பாற்றுவது, ரயில்வே தண்டவாளத்திற்கு இடையே விழப்போனவர்களை நொடிப்பொழுதில் தடுத்து நிறுத்துவது என கண நேரத்தில் மெய் சிலிர்க்க வைக்கும் உயிர் காக்கும் தருணங்கள் தொடர்பான வீடியோக்கள் தாறுமாறு வைரலாகி விடுவது வழக்கம். அந்த வரிசையில் ரஷ்யாவில் தீப்பற்றிய கட்டிடத்தில் சிக்கிய சிறுமியை 2 இளைஞர்கள் பத்திரமாக மீட்ட காட்சி வைரலாகி வருகிறது.
ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் கடந்த 29ம் தேதி தீப்பற்றியுள்ளது. மளமளவென பரவிய தீயால் கட்டிடம் மற்றும் அப்பகுதி முழுவதும் கரும்புகையால் சூழப்பட்டது. அதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் வருவதற்கு முன்பாகவே உதவி கோரி ஒலித்த ஒரு குரல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தீப்பற்றி எரியும் அந்த கட்டிடத்தில், 9வது மாடியில் உள்ள அறை ஜன்னல் வழியாக, தீயில் மாட்டிக்கொண்ட சிறுமி ஒருவர் தன்னை காப்பாற்றும் படி கூச்சலிட ஆரம்பித்தார். குறிப்பாக அந்த தளத்தில் தான் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருப்பதை வீடியோவில் நீங்கள் காணலாம். ஆனால் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொண்ட, சிறுமியின் வீட்டிற்கு கீழே 8வது தளத்தில் வசிக்கும் இரண்டு இளைஞர்கள் மீட்பு பணியை மேற்கொள்ள முடிவெடுத்தனர்.
சிறுமி நின்றிருக்கும் அறைக்கு சரியாக கீழே உள்ள தங்களது அறை ஜன்னலுக்கு வழியாக மேலே ஏறி, அங்கிருந்த குறுகிய இடத்தில் நின்று கொண்டனர். மேல் தளத்தில் இருந்த சிறுமியும், மெதுவாக ஜன்னல் வழியாக வெளியே வர, இரண்டு இளைஞர்களும் பத்திரமாக தாங்கிப்பிடித்து, தங்களது வீட்டிற்குள் ஜன்னல் வழியாக அழைத்துச் சென்றுள்ளனர்.
தீயில் இருந்து சிறுமியை காப்பாற்றிய இளைஞர்களின் இந்த வீடியோ கீழே இருந்தவர்களால் படம் பிடிக்கப்பட்டு, சோசியல் மீடியாவில் பதிவேற்றிய சில நிமிடங்களிலேயே வைரலாகியுள்ளது. தங்களது உயிரையும் பணயம் வைத்து இளைஞர்கள் மேற்கொண்ட சாக முயற்சியை ரஷ்ய ஊடகங்களும், சமூகவலைத்தளங்கள் வாயிலாக மக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். 52 விநாடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில் இளைஞர்கள் தீக்கிரையாகாமல் சிறுமியை பத்திரமாக மீட்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.