முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / உலகிலேயே விலை உயர்ந்த ஐஸ்கிரீம்… விலை ரூ. 60 ஆயிரம்… அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?

உலகிலேயே விலை உயர்ந்த ஐஸ்கிரீம்… விலை ரூ. 60 ஆயிரம்… அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?

உலகிலேயே மிக விலை உயர்ந்த ஐஸ்கிரீம் துபாயில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

உலகிலேயே மிக விலை உயர்ந்த ஐஸ்கிரீம் துபாயில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

உலகிலேயே மிக விலை உயர்ந்த ஐஸ்கிரீம் துபாயில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

  • Last Updated :

ஐஸ்கிரீம் என்று சொன்னாலே போதும் பலருக்கு நாவில் எச்சில் ஊறும். அந்த அளவுக்கு ஐஸ்கிரீம் மீது காதல் கொண்டிருப்பர். ஐஸ்கிரீம் பிடிக்காது என்று சொல்பவர்கள் மிக மிக அரிது. வெயிலோ, மழையோ, பனிக்கலாமோ எதுவாக இருந்தாலும் சரி ஐஸ்கிரீம் வாகனத்தையோ அல்லது ஐஸ்கிரீம் கடையையோ பார்க்கும் சிலர் அதை வாங்கி சாப்பிடாமல் வரமாட்டார்கள். அப்படி நீங்களும் தீவிர ஐஸ்கிரீம் பிரியராக இருந்தால் உங்களுக்கு ஒரு ஆடம்பரமான அதிர்ச்சி செய்தி காத்திருக்கிறது. பொதுவாக கடைகளில் ஹோம்மேட் ஐஸ்கிரீம் அல்லது பிராண்டட் ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்படும். அவற்றின் விலை அவ்வளவு ஒன்றும் அதிகமாக இருக்க போவதில்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் துபாயில் இந்த ஒரு குறிப்பிட்ட இஸ்கிரீமுக்கு மட்டும் ரூ.60,000 செலவிட வேண்டும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆமாம், உலகிலேயே மிக விலை உயர்ந்த ஐஸ்கிரீம் துபாயில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

துபாயின் ஸ்கூபி கபே (Scoopi cafe) எனும் ஓட்டலில் ‘பிளாக் டைமண்ட்’ என அழைக்கப்படும் வெண்ணிலா ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்படுகிறது. இதன் ஒரு ஸ்கூப் விலை ரூ. 60,000 ஆகும். வெர்சேஸ் கிண்ணத்தில் இந்த ஐஸ்கிரீம் பரிமாறப்படுகிறது. இது உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்கிரீம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆடம்பரமான ஐஸ்க்ரீம் விற்பனை செய்யப்படுவதை நடிகையும் ட்ராவல் விலாகருமான(Vlogger) ஷெனாஸ் ட்ரஷரி என்பவர் தனது துபாய் பயணத்தின் போது கண்டுபிடித்துள்ளார். மேலும், அங்கு சென்று ஐஸ்கிரீம் சாப்பிடுவது தொடர்பான வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் “ஒரு ஐஸ்கிரீமுக்கு 60,000 ரூபாய்!!!! GOLD ஐஸ்கிரீம் சாப்பிடுவது துபாயில் மட்டுமே. உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்கிரீம். " என்று கேப்ஷன் செய்திருந்தார். இது சுவாரஸ்யமானது என்றும் ஐஸ்கிரீம் ருசியாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


மேலும், தனக்கு பிளாக் டைமண்ட் ஐஸ்கிரீம் இலவசமாக வழங்கப்பட்டதாக வீடியோவில் பதிவிட்டிருந்தார். செய்தி நிறுவனமான தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதனை மேற்கோளிட்டு வெளியிட்ட அறிக்கையின்படி, ‘பிளாக் டைமண்ட்’ ஐஸ்கிரீம் 2015 ஆம் ஆண்டில் கஃபே மூலம் தொடங்கப்பட்டது. இதில் 23 கேரட் உண்ணக்கூடிய தங்கம் மடகாஸ்கர் வெண்ணிலா ஐஸ்கிரீமின் மேல் தூவப்பட்டிருக்கும். மேலும் அதில் ஈரானிய குங்குமப்பூ மற்றும் கருப்பு உணவு பண்டங்கள் அடங்கியிருக்கும்.
 
View this post on Instagram

 

A post shared by Scoopi Cafe (@scoopicafe)ட்ரஷரியின் இன்ஸ்டாகிராம் பதிவுக்கு பலர் கருத்துப்பிரிவில் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அதில், ஒரு யூசர், "இதை சாப்பிடத் திட்டமிடுவதை விட துபாய் பயணத்தைத் திட்டமிடுவது எளிதானது" என்று வேடிக்கையாக கமெண்ட் செய்திருந்தார். மற்றொருவர், "தங்கத்திற்கு ஊட்டச்சத்து மதிப்பு என்று எதுவும் இல்லை. அது செரிமான அமைப்பு வழியாக எந்த செரிமான செயல்முறைகளையும் பாதிக்காமல் வெறுமனே வெளியேறுகிறது" என்று பதிவிட்டிருந்தார்.

ஸ்கூபி கஃபே பெரும்பாலும் இது போன்ற ஆடம்பரமான மற்றும் செழிப்பான உணவுகளை வழங்குவதில் முதலிடம் வகிக்கிறது. சமீபத்தில், இந்த ஓட்டல் 23 காரட் உண்ணக்கூடிய தங்கம் கொண்ட ஒரு காபியின் புகைப்படத்தை வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.
 
View this post on Instagram

 

A post shared by Scoopi Cafe (@scoopicafe)Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உண்ணக்கூடிய தங்கத்தைக் கொண்ட கஃபேவின் இனிப்புகளில் சார்கோல் ஐஸ்கிரீமும் அடங்கும். இந்த டிஷ் கருப்பு சாக்லேட் மற்றும் தங்கத்தால் அலங்களரிக்கப்பட்டிருக்கும். மேலும் ஓட்டலின் ஆறாவது பிறந்த நாளின் போது, அவர்கள் ஒரு தங்க பர்கரை வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Dubai, Ice cream, Trending