முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / சந்திரமுகி, ஸ்குவிட் கேம், மணி ஹெய்ஸ்ட் - மெட்ரோ ரயிலில் நேரில் வந்த கதாபாத்திரங்கள்..!

சந்திரமுகி, ஸ்குவிட் கேம், மணி ஹெய்ஸ்ட் - மெட்ரோ ரயிலில் நேரில் வந்த கதாபாத்திரங்கள்..!

நேரில் வந்த சந்திரமுகி, மனி ஹெய்ஸ்ட் கதாபத்திரங்கள்

நேரில் வந்த சந்திரமுகி, மனி ஹெய்ஸ்ட் கதாபத்திரங்கள்

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களான டிவிட்டர் ஃபேஸ்புக் போன்றவற்றில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

உத்தர பிரதேச மாநிலம் நொய்டா மெட்ரோ ரயிலில், மணி ஹெய்ஸ்ட் என்ற பிரபலமான தொடரின் கதாபாத்திரம் போல் உடையணிந்து பொதுமக்களிடம் தோன்றியவரால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களான டிவிட்டர் ஃபேஸ்புக் போன்றவற்றில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. மணி ஹெய்ஸ்ட் மட்டும் அல்லாமல், இந்தி திரைப்படத்தின் மஞ்சுலிக்கா கதாப்பாத்திரம் (சந்திரமுகி) மற்றும் 'ஸ்க்விட் கேம்' விளையாட்டில் இருந்து தப்பி வந்தவர் போல் ஒருவர் தோன்றியதும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. திடீரென்று, மூன்று டிவி கதாபாத்திரங்களை நேரில் பார்த்த மெட்ரோ பயணிகள் அந்த கதாப்பாத்திரங்களை வியப்புடன் பார்த்தனர்.

மணி ஹெய்ஸ்ட் : 

'மணி ஹெய்ஸ்ட்'. என்பது ஒரு வங்கியைக் கொள்ளையடிக்கும் 8 கொள்ளையர்களையும் அவர்களை வழிநடத்தும் 'ப்ரொஃபஸர்' என்ற ஒருவரையும் சுற்றி நடக்கும் கதை ஆகும். 2017ஆம் ஆண்டு நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாகத் தொடங்கிய இந்தத் தொடர் இன்று வரை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களின் ஃபேவரிட் தொடர்களில் ஒன்றாக இருக்கிறது.

சந்திரமுகி :

'சந்திரமுகி' படத்தை பாலிவுட்டில் கடந்த 2007ஆம் ஆண்டு 'பூல் புலையா' என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டனர். அக்‌ஷய் குமார், வித்யா பாலன் நடித்துள்ள இப்படத்தை மலையாள இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கியிருந்தார். மற்ற மொழிகளைப் போலவே பாலிவுட்டிலும் இப்படம் வெற்றிப் பெற்றது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி சுமார் 500 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி வசூல் சாதனை செய்த படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கியிருந்த இந்த படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில், பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, நாசர், மாளவிகா, வினீத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சந்திரமுகி படம் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் வெளியானது. படம் வெளியாகி 15 வருடங்களுக்கு மேலான பிறகும் கடந்த பின்னும் சந்திரமுகி பேய் என்றாலே அனைவருக்கும் ஒரு திகில்தான். படத்தில் முக்கிய பாடலான ராரா பாடல் மிகவும் பிரபலமான ஒன்றாகும்.

இந்த நிலையில், பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரான்ஸ், வடிவேலு, கங்கனா ரணவத், அனுஷ்கா, லட்சுமி மேனன், சரத்குமார், ராதிகா சரத்குமார் உள்பட பலரது நடிப்பில் சந்திரமுகி 2 உருவாகி வருகிறது. இந்த படத்தை கோடை விடுமுறையில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து சந்திரமுகி 2 திரைப்படம் திரையரங்க வெளியீட்டுக்கு பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்டீரிம் ஆகும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்குவிட் கேம் கதாப்பத்திரம் :

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது தென்கொரிய இணைய தொடரான 'ஸ்குவிட் கேம்'. ஹ்வாங் டாங் - ஹியூக் இயக்கிய இந்த தொடர் குழந்தைகள் விளையாடும் விளையாட்டை மையமாக கொண்டு ஆழமான பல கருத்துகளை உள்ளடக்கி விறுவிறுப்பான திரைக்கதையில் உருவாக்கப்பட்டது. மொத்தம் 9 எபிசோடுகள் கொண்ட இந்தத் தொடர் வெளியான முதல் நான்கு வாரங்களில் 1.65 பில்லியன் பார்வையாளர்களால் கண்டுகளிக்கப்பட்டு பெரும் சாதனை படைத்தது. நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட இணையத் தொடர் என்ற பெருமையையும் 'ஸ்குவிட் கேம்' பெற்றிருந்தது.
 
View this post on Instagram

 

A post shared by boAt (@boat.nirvana)நெட்ஃபிளிக்ஸ் விளம்பர தந்திரம்.....

இந்த பிராங்க் நிகழ்ச்சி டெல்லியை தளமாகக் கொண்ட எலக்ட்ரானிக் கேஜெட் பிராண்டான BoAT மற்றும் Netflix இணைந்து செயல்படுத்திய ரியல் டைம் விளம்பர உக்தி என கூறப்படுகிறது. நெட்ஃபிளிக்ஸ் இளையதளத்தில் வெளியாகும் படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் கதாபாத்திரங்களை பயணிகளுக்குக் காட்டும் விதமாக, அந்த கதாபாத்திரங்கள் வேடமிட்டவர்கள் டெல்லி (நொய்டா) மெட்ரோ ரயிலில் உலா வந்தனர். தங்கள் நிறுவன தொடர்களையும் கதாபாத்திரங்களையும் மக்களிடையே விளம்பரப்படுத்தும், நோக்கில் இந்த நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நொய்டா மெட்ரோ நிர்வாகத்திடம் நெட்ஃபிளிக்ஸ் சார்பில் அனுமதி பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Chandramukhi, Delhi, Metro Train, Prank show